Monday, January 12, 2015



charu online

எழுத்தாளன் வேலை ஏதும் செய்யக் கூடாது என்று  சட்டமா என்ன? ( சாரு )

இந்த காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் எழுத்தாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் இது எல்லோரும் அறிந்த உண்மை .அப்படி கஷ்டப்பட்டு கொண்டு இருந்தாலும் யாரும் புலம்பிக் கொண்டோ அல்லது மற்றவர்களை பார்த்து பொருமிக் கொண்டு இருப்பதோ இல்லை சாருவை தவிர



இதை பார்த்ததும் எனக்கொரு கேள்வி எழுகிறது. எழுத்தாளர்கள் எழுதுவதை தவிர வேறு ஏந்த வேலையும் செய்யக் கூடாது என்ற சட்டம் ஏதும் உள்ளாதா என்றுதானுங்க...


நானும் பல எழுத்தாளர்களை பார்த்த்துதான் வருகிறேன். எழுதுவது அவர்களது உயிர் மூச்சாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் உயிர் வாழ பல நல்ல வழிகளில் உழைத்து சம்பாதித்து வருகிறார்கள். உதாரணமாக பல எழுத்தாளர்கள் தங்களை பத்திரிக்கை துறையில் இணைத்து(சமஸ்) அல்லது பதிப்பகங்கள்(மனுஷபுத்திரன்,பத்ரி) வைத்து நடத்தி இன்னும் பலர் பல வழிகளில் சம்பாதித்து வருகின்றனர்.

ஆனால் சாரு அவர்கள் இதையெல்லாம் செய்யாமல் அவர் வருமானம் அதிகமாக பெறாததருக்கு தமிழ் வாசகர்கள்தான் காரணம் என்று குறை சொல்லி வருகின்றார், சாரு ஏன் அடிக்கடி ஆன்லைனில் பணம் கேட்பதற்கு பதில் ஒருமுறை பணம் பெற்றுக் கொண்டு அதை முதலீடாக்கி ஒரு புத்தக கடை வைத்து நடத்தி கொண்டே ஏன் எழுத்தை தொடரக் கூடாது. அதையெல்லாம் செய்யாமல் பணம் கிடைக்கும் போது ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடிவிட்டு  எழுத்தாளனை யாருமே மதிக்கவில்லை என்று கூப்பாடு போடுவதில் அர்த்தம் என்ன

நான் எழுத்தாளன், வேறு எந்த வேலையும் செய்ய மாட்டேன் அடுத்தவன் உழைப்பில்தான் வாழ்வேன் என்று சொல்லிக் கொண்டு வீட்டில் இருந்து வெட்டியாக கருத்துக்கள் என்ற பெயரில் சினிமாக்களையும் அரசியலையும் மற்ற எழுத்தாளர்களையும் குறை சொல்லிக் கொண்டு இருப்பதுதான் உழைப்பா?

அடுத்தவ்ங்க காசுல உட்கார்ந்து திங்காமா கொஞ்சமாவது உழையுங்க

டிஸ்கி : எக்ஸல் 2 அதிகமாக விற்று சாதனை  படைத்து கின்னஸ் புக்கில் வர சாரு தினமும் கொஞ்சம் புக்குகளை ஒடும் எலக்ட் ரிக் ரயிலிலோ அல்லது பஸ்டாண்டுகளிலோ தினமும் கூவி கூவி விற்கலாம் அல்லது ஒவ்வொரு வீட்டு கதவை தட்டி புக் விறபனை செய்யலாம் எப்படி நாம் ஐடியா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. நல்ல யோசனைதான்
    ( ஜீரோ டிகிரி படித்துக் கொண்டிருக்கிறேன் )

    இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல யோசனை கொடுத்து இருக்கீங்க! :)

    ReplyDelete
  3. வேலை செய்யாமல் எழுத அமர்ந்தால் எதுமே
    மூளையில் தோன்றாது.

    ReplyDelete
  4. அடி ஆத்தி .. கதை இப்படி போதா...?

    ReplyDelete
  5. ஆமா வேலை செய்வது ஒன்றும் தப்பு இல்லையே. நல்ல யோசனையே.
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோ....! பூரிக்கட்டை எல்லாம் எடுத்து ஒளித்து வைத்து விடுங்கள் நல்ல நாள் பெரிய நாளில் வேண்டிக் கட்டாது அப்புறம் வருடம் பூரா வேண்டிக் கட்ட வேண்டியது இல்ல இல்ல அது தான் சொன்னேன். மூத்தோர் சொல் வார்த்தையும் முதிர்ந்த நெல்லிக்கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் இல்ல அதனால கேட்டுக் கொள்ளுங்கள் ok வா. ஹா ஹா ......

    ReplyDelete
  6. அய்யோ பாவம் அவர். அவரை ஏன் கலாய்க்கிறீங்க? 60 வயதானப்பறம் அவர் சொல்றதை, அவரின் இளமைப் புகைப்படத்தோடு போடுவது நியாயமா? அவர் எஸ் ராமகிருஷ்ணன்போல் முழு மூச்சு எழுத்தாளராக இருக்க நினைக்கிறார். விட்டுடுங்க...முடியலை...

    ReplyDelete
  7. நல்லாவே சொல்றீங்க யோசனை!

    ReplyDelete
  8. மிக மிக நஹ்ல்ல யோசனை தமிழா. அப்படிப் பார்த்தால் வலைப்பூவில் அருமையாக எழுதுபவர்கள் பலரும் வேலையில் இருந்து கொண்டுதானே எழுதுகின்றார்கள்!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.