Friday, January 2, 2015



வதந்தி..........


சில ஊடகங்களை போலவே சில மனிதர்களும் வதந்திகளை பரப்பிவருகிறார்கள். அது போலவே ஒரு நபர் வதந்திகளை பரப்புவதே தமது தொழில் என்று கருதி செய்பவர் அப்படிபட்ட ஒருவர் தனது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பெண்மணியை பற்றி தப்பான ஒரு வதந்தியை பரப்பினார். இந்த வதந்தி தீயாய் பரவியது.அதனால் அவரை போலீஸ் கைது செய்து கோர்ட்டில் கொண்டு வந்து நிறுத்தியது.கோர்ட்டு விசாரணையில் அந்த பெண் குற்றமற்றவள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.


அந்த பெண்  அவளை பற்றி வதந்தியை பரப்பியவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனால் வதந்தியை பரப்பியவரை போலீஸ் கைது செய்து கோர்ட்டில் கொண்டு வந்து நிறுத்தியது.

விசாரணையில் அந்த நபர் அது தான் சும்மா சொன்ன கருத்து என்றும் அது யாரையும் காயப்படுத்தும் நோக்கில் சொல்லப்பட்டது அல்ல என்று வாதிட்டார். அதை கேட்ட நீதிபதி தீர்ப்பு கூறும் முன் அந்த நபரிடம் ஒரு தாளில் அவளைப்பற்றி என்ன சொன்னாயோ அதை ஒரு தாளில் எழுதி அதை பல பாகமாக கிழித்து அதை வீட்டுக்கு போகும் போது பல இடத்தில் போட்டு விட்டு நாளை மீண்டும் வா என்றார்.


அவனும் அதுபடி செய்துவிட்டு அடுத்த நாள் கோர்ட்டிற்கு வந்தார். அப்படி வந்தவரிடம் நீ இன்று போய் நேற்று நீ கிழித்து தூக்கி போட்டதை எல்லாம் மீண்டும் ஒன்று சேர்த்து எடுத்துவா என்றார்.

அதை கேட்ட அந்த நபர் அய்யா அது எப்படி அங்கே இருக்கும். அது காற்று அடித்து பல இடங்களுக்கு பறந்து போய் அல்லவா இருக்கும் அதை எப்படி மீண்டும் எடுத்து வர முடியும் அது முடியாத காரியம் என்றார்.

அதை கேட்ட நீதிபதி இதைப்போலத்தான் நீ அடுத்தவர்களை பற்றி இட்டுகட்டிய வதந்தியும் அதுவும் பல இடங்களுக்கு பறந்து போய் இருக்கும்.  அதை மாற்ற முடியுமா அல்லது திரும்ப பெற முடியுமா என்ன என்று கேட்டு அவனுக்கு ஒருமாதம் ஜெயில் தண்டனை தந்தார்.

நண்பர்களே நாம் அடுத்தவர்கள் பற்றி நாலு வார்த்தை நல்லது பேச முடியாவிட்டாலும் பரவாயில்ல்லை ஆனால் அவர்களைப் பற்றி தவறான கருத்துக்களை சொல்லாமல் இருப்பது மிகவும் நல்லது அல்லவா?

2015 ஆரம்பபதிவு அட்வைஸுங்கற பேருல அறுவையாக இருக்கிறது என்று நினைப்பவர்களா நீங்கள் அப்படி என்றால் உங்களுக்குதான் கிழேயுள்ள நகைச்சுவை...

கில்லர்ஜி: உங்களுக்கு தெரியுமா பகவான்ஜி உங்க ஊர்க்காரர் .இந்த மதுரைத்தமிழன் நெட்டில் ஒரு பெண்ணிடம் ஜொள்ளு வடிச்சுகிட்டு இருந்தார். ஒரு நாள் அந்த பெண்ணை பார்க்க அவ ஊருக்கு போயிருந்தார். அந்த விஷயம் தெரிஞ்ச ஊர்காரங்க பார்த்து கட்டி வெச்சிட்டாங்க.

பகவான்ஜி : பாவம் மதுர முதல் மனைவியிடம் பூரிக்கட்டையால அடி வாங்குவார் இந்த  இரண்டாம் மனைவியிடம் ஏதனால் அடி வாங்கப் போறாறோ?

கில்லர்ஜி :யோவ் அவருக்கு ரெண்டாம் கல்யாணம் ஆகிடுச்சுன்னு நீயே வதந்தி கெளப்பி விட்டுடாதேய்யா

பகவான்ஜி ;நீதானே சொன்ன அந்த ஊர்காரங்க அந்த மதுரைத்தமிழனனுக்கு அந்த பெண்ணை கட்டி வைச்சுட்டாங்கண்னு.

கில்லர்ஜி ;யோவ் நான் அப்படி ஒன்றும் சொல்லவில்லை அய்யா.  நா ஊர்காரங்க பார்த்து கட்டி வெச்சிட்டாங்கன்னு சொன்னேன். அதாவது மரத்தில் அவரை கட்டி வைச்சுட்டாங்கன்னு சொன்னேன்....  ஆனா நீ தப்பா புரிஞ்சுகிட்ட்டு இப்படி வதந்தியை கிளப்பி விட்டுடாதய்ய்யா,

இதெல்லாம் ஒரு நகைச்சுவையா என்று நினைப்பவர்களா நீங்கள் அப்படியானால் நீங்கள் ஒன்று செய்யுங்கள் நீங்களே ஒரு உருட்டுகட்டையை எடுத்து தலையில் அடித்து கொண்டு அதை செல்பி எடுத்து எனக்கு அனுப்புங்கள்...அது மிக நகைச்சுவையாக இருக்கும். என்ன சரிதானே...


அன்புடன்
மதுரைத்தமிழன்

22 comments:

  1. கதை உண்மையில் டாப்.
    கில்லர்ஜி முதல் கல்யாணத்தைத்தான் சொல்றாரோன்னு நினைச்சேன்.

    ReplyDelete
    Replies
    1. 2015 ன் முதல் பதிவிற்கு முதலாக வந்து கருத்து சொல்லி ஆரம்பித்து வைத்தற்கு நன்றி

      Delete
  2. அருமையான கருத்துடன் கூடிய
    சுவாரஸ்யமான கதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. படித்து பாராட்டியதற்கு நன்றி ரமணி சார்

      Delete
  3. என்ன ஒரு தத்துவம் தல!! ஆனா அந்த ஜட்ஜ் பறக்கவிட சொன்ன பேப்பர்ல இருந்த மேட்டர் மட்டும் பரவாதா?? அவர்க்கு என்ன பனிஷ்மெண்ட் கொடுக்கலாம்??

    ஒ! மரத்துல கட்டிவைசான்களா??? நான்கூட கரண்டு கம்பம்னு நினைத்தேன்:))))

    எப்படியோ சூப்பர் பதிவு சகா!

    ReplyDelete
    Replies
    1. ஜட்ஜ் பறக்கவிட சொன்னதில் மேட்டர் பரவாது. காரணம் அதை கிழிச்சு அதை வேற வேற இடத்தில் போட சொல்லி இருக்கிறார்.

      ஹும் தண்டனை.... நம் இருவரின் தளத்தை தினமும் படிக்க சொல்ல செய்யலாம்.

      Delete
  4. இரண்டு "ஜி" கள் செம...! செல்பி வரும்... ஹ... ஹா...

    ReplyDelete
    Replies
    1. செல்பி வருமோ வராதோ ஆனால் எனது அடுத்த பதிவில்(சின்ன ஜோக்) நீங்கள் வருகிறீர்கள்.

      Delete
  5. ஏற்கனவே படித்திருந்த கதை தான்...

    ஆனால் 2Gயும் (கில்லர்ஜி & பகவான்ஜி) பேசிக்கொள்வது தெரியாத உரையாடல்...

    ReplyDelete
    Replies
    1. 2ஜியும் இங்கே வந்துவிட்டதால் என்னையும் விசாரணைக்கு அழைப்பார்களோ?

      Delete
  6. வாழ்த்துக்கள் தமிழரே !

    ReplyDelete
    Replies
    1. விசு "Awesome" வாழ்த்துக்கு நன்றிகள் . தலைவரே நீர் நீடுடி வாழ்க

      Delete
  7. ஹஹஹஹஹ்....கத செம...அருமையான கதை...

    ஐயோ பாவம் க மதுர....கட்டிப்போட்டு பூரிக்கட்டை அடியா.....தப்பிக்க கூட முடியாது போல....இப்ப வாங்கறதே பெட்டரோ......புது வருட ஆரம்பமே இப்படியா.....ஹஹஹ்ஹ் எனிவே வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. 2g ஊழலில் சம்பந்தப் பட்டிருப்பதாக சொல்லப் படும் டிவிசேனலில் ,இது உங்களின் டிவி என்று அடிக்கடி சொல்லும்போதெல்லாம் அடிவயிறு கலங்குகிறது ,நீங்களும் எங்களை 2g என்று சொல்லி மாட்டி விடுவது நியாயமா :)
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவ இப்ப தான் படிச்சேன். ஆமா உங்க 2 பேருக்கும் சேர்த்து அன்போட 2G ன்னு பேர் வச்ச என் அனுமதி இல்லாம எப்டி 2G ய யூஸ் பண்ணலாம். இருங்க porki சூனாவ கூப்டுறேன்.

      Delete
  10. ம்..ம்..ம்.. \\\\நாலு நல்ல வார்த்தை பேசாவிட்டாலும் தவறாக பேசக் கூடாது ////சூப்பர்
    இது அறுவையா அப்படிப் பட்டவங்களை அறுக்கிற பதிவு சகோ. அருமையான கருத்தை ஆண்டு தொடக்கத்தில் முன் வைத்துள்ளீர்கள் சகோ!. great தண்டனை ஜீக்களுக்கு மட்டும் தானே? ஹா ஹா ...

    ReplyDelete
  11. எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆமா என்ன போன வருடம் மட்டும் தீபாவளி மலர் அசத்தலாக வந்தது. இந்த வருடம் அதுபோல பொங்கல் மலரை ஏற்பாடு செய்யுங்கள். காத்திருக்கிறோம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. சிறப்பான குட்டிக்கதையுடன் சொன்ன செய்தி அருமை! ஜோக்கா சொன்னாலும் வதந்தி எப்படி பரவுகிறது என்று சுருக்கமா சொன்னது அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. இந்த வருட ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதே...
    உங்களுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க ஆசை வந்துடுச்சுன்னு சூசகமாக சொல்றீங்களாக்கும்!!!
    ஒருத்தர் கிட்ட அடி வாங்குறது பத்தாதுன்னு இன்னொருத்தர்கிட்டேயுமா ?

    ReplyDelete
  14. நல்ல சுவை நகைச்சுவை ..
    த் ம +

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.