Monday, January 5, 2015



பட்டிக்காட்டான் அவர்கள் கூகுல் ப்ள்ஸில் பகிர்ந்தபடம், நன்றி மதுர.
அதற்கு அவர் இட்ட கமெண்ட் : "என்ன ஸ்டாலின் வயசுக்கு வந்துட்டாரா' என்று 
அதை படித்த பின் நான் சிரித்தற்கு அளவே கிடையாது


ஊடகங்களுக்கு தீனி போடுகிறது திமுகவின் உள்கட்சி தேர்தல்




இப்படி செய்தால் திமுகவில் பிரச்சனையே வராது
கட்சியின் சொத்துக்களை மூன்று பாகமாக பிரித்து ஸ்டாலின்,அழகிரி,கனிமொழிக்கு கொடுத்து விட்டால் பிரச்சனை வரவே வராது. அதன் பின் கட்சியின் கடைநிலை தொண்டன் கூட அடிதடி இல்லாமல் தலைவர் பதவியை போட்டி இல்லாமல் பெறலாம்.


ஸ்டாலின் திமுகவின்  தலைவர் பதவிக்குதான் இப்படி அடித்து கொள்கிறார் என்று ஊடகங்கள் தவறான செய்தி பரப்புகின்றன. ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் ஸ்டாலின் அடித்து கொள்வது கட்சியின் சொத்துக்காக மட்டும்தான்.

திமுகவின் பிரச்சனைகளுக்கு காரணமே கட்சியை குடும்ப சொத்தாக பார்ப்பதால்தான் வருகிறது.

ஸ்டாலின் போராடுவது கட்சி தலமை பதவிக்கு அல்ல கட்சியின் கணக்கற்ற சொத்துக்களுக்கு சொந்தகாரர் ஆகத்தான்.

திமுக கட்சி பிரச்சனையை சுலபமாக தீர்க்க கலைஞர் செய்ய வேண்டியது திமுகவை திமுக 1,திமுக 2,திமுக 3, என்று பிரித்து கொடுத்து விடுவதுததான்

கலைஞர்  மட்டும் கட்சியின் தலைவர் பதவி ஒருத்தருக்கும் கட்சியின் சொத்துக்கு வாரிசு மற்றொருவர் என்று அறிவித்தால் கலைஞர்தான் சாகும் வரை அதன் தலைவர்


சட்டசபைக்கு செல்லும் ஸ்டாலின் வெளிநடப்பு டிராமவும் ,கட்சி கூட்டத்திற்கு செல்லும் ஸ்டாலின் ராஜினமா டிராமாவும் போட்டு கொண்டிருக்கிறார். இதையே எத்தனை நாட்கள் பார்த்து கொண்டிருப்பதுங்க

ஸ்டாலின் தலைவர் ஆகிறாரோ இல்லையோ அதற்கு  முன்பு குஷ்பு கூட ஏதாவது ஒரு கட்சிக்கு தலைவராகிவிடுவார் போல  இருக்கே

கனிமொழி பிறந்த நாள் வாழ்த்துக்கள்




டிஸ்கி :
நண்பர் ஒருவர் சாட்டில் வந்து கனிமொழி அவர்களை வாழ்த்தி படம் போடுவது தப்பு என்று சொல்லுகிறார். அவருக்கு மட்டுமல்ல எனது தளம் வரும் அனைவருக்கும் சொல்ல விரும்புவது இதுதான்

கனிமொழி அவர்கள் தவறுகள் செய்து இருக்கலாம் அல்லது செய்யாமல் இருக்கலாம் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை . நான் ஒரு காலத்தில் பெரிதும் மதித்த கலைஞரின் மகள் இவர் என்பதாலும் நல்ல பேச்சாளார் கவிஞர் எழுத்தளார் என்பதாலும் எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் இவருக்கு நான் வாழ்த்தை எனது தளத்தில் தெரிவித்தேன் இந்த வாழ்த்து அவருக்கு போய் சேருமோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் எனது வாழ்த்துக்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் அதை எனது தளத்தில் எனக்கு சொல்ல முழு உரிமை உண்டு. அதனால் இதை போடுங்கள் அதை போடாதீர்கள் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இதை புரிந்து கொண்டவர்கள் தொடருங்கள் புரியாதவர்கள் விலகி கொள்ளலாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்
அன்புடன்
மதுரைத்தமிழன்


3 comments:

  1. கனிமொழியை நல்ல பேச்சாளியாக எனக்குப் பிடிக்கும்...
    நல்ல பகிர்வு...

    ReplyDelete
  2. கனிமொழி கலைஞர் மகள் என்பதாலேயே எதிர்ப்பதில் எனக்கும் உடன்பாடில்லை! சிறந்த கவிஞர், பேச்சாளர், நாடாளுமன்றவாதி என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை! தொடருங்கள்! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  3. புது header சூப்பர் சகா:) திமுக தான் ஏற்கனவே கிழிந்து நார்நாராய் இருக்கே , இன்னும் ஏன் கும்முறீங்க:)))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.