இந்திய மக்களே நீங்க ரெடியா?
நாளை இந்நேரம் 2014 முடிந்து
2015 ஆரம்பித்து இருக்கும். இந்த முக்கியமான நேரத்தில் அதாவது இந்த ஆண்டு இறுதியில் பாருக்கு செல்லுவதும் ,புத்தாண்டில் சாமியை
தரிசிக்க கோயிலுக்கு போவதும் இந்திய மக்களை
பொறுத்தவரை மிக முக்கியமான விஷயம்.
முண்டியடித்துக் கொண்டு ஆண்டு இறுதியில் டாஸ்மாக்கில் சென்றால்தான் சரக்கு
கிடைக்கும் என்றும் அது போல புத்தாண்டு காலையில் முண்டியடித்து கொண்டு பார்த்தால் தான்
கடவுள் நமக்கு அருள் புரிவார் இல்லையென்றால் போடா டேய் போடா நீ வந்து முதல்நாள் அன்று பார்க்கவில்லை. அதனால் இந்த வருடம் உனக்கு அதிர்ஷடமே
வாய்க்காது அது மட்டுமில்லாமல் சொர்க்கத்திலும் உனக்கு சீட் இல்லை என்று விரட்டிவிடுவார்
என்று மனதில் நினைத்து கொண்டு பிறந்த குழந்தை முதல் பாடையில் போகப் போகும் முதியவர்
வரை ஒருவரை ஒருவர் இடித்து கொண்டும் மிதித்து கொண்டும் தள்ளிக் கொண்டும் சாமியை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வதும் வழக்கம்.
இப்படி இடித்து அருள் பெறுபவர்களிடம் ஒரு கேள்வி இந்துக்
கடவுள் ஏன் ஆங்கில புத்தாண்டு தினத்தில் மட்டும் இப்படி ஸ்பெஷல் தரிசனமும் அருளும்
புரிகிறார்.
மேலை நாட்டு கலாச்சாரத்திற்கும்
பழக்க வழக்கத்திற்கும் எதிராக குரல் கொடுக்கும் காவி கூட்டம் இதற்கு மட்டும் ஏன் அமைதியாக
இருக்கிறது
விடை தெரிந்தவர்கள் பதில்
சொல்லவும் மற்றவர்கள் சரக்கு அடித்து விட்டு காலையில் முதல் ஆளாக கடவுளிடம் ஆசிர்வாதம்
பெற ரெடியாகவும்..
அன்புடன்
மதுரைத்தமிழன்
தமிழ் புத்தாண்டை கொண்டாடாமல் இப்படி ஆங்கிலப்புத்தாண்டு அன்று அட்டகாசம் செய்வது எனக்கும் வருத்தம் தான்! தெய்வம் எதையும் கேட்பதையோ கொண்டாடச்சொல்லுவதோ இல்லை! நம்மக்கள் தான் இதை விமரிசையாக கொண்டாட தெய்வத்தை துணைக்கு இழுக்கின்றனர். அவருக்கு ஆங்கிலப்புத்தாண்டும் ஒன்றுதான் தமிழ் புத்தாண்டும் ஒன்றுதான்.
ReplyDeleteநல்ல நாளும் அதுவுமா நல்ல காரியங்கள் பண்ணலாமேன்னு இருக்கும்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஹா....ஹா....ஹா...நீங்க சொன்ன ரெண்டு விசயத்தையும் நானும் கஸ்தூரியும் செய்வது இல்லை. so யோசிக்கவேண்டாம் . மத்தவங்க என்ன சொல்லராங்கனு ரிலாக்ஸா வேடிக்கை பார்க்கலாம். புத்தாண்டு வாழ்த்துகள் சகா! மாமிக்கும், ஷ்ரேயாவுக்கும் எங்க family இன் wishes சை தெரிவிக்கவும்:) சாரி உங்க doggie செல்லத்துக்கும்:)
ReplyDeleteகூட்டம் எதைச் செய்கிறதோ நாமும் அதைக் கேள்வி கேட்ம்காமல் செய்ய வேண்டும். மனித பண்பாடு அல்லது மனித பலவீனம்! அதுதான் காரணம்.
ReplyDeleteசென்ற வாரத்தில் சென்னையில் வழக்கம்போல ஒரு வதந்'தீ'! ஆண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் தாய்மார்கள் வீட்டு வாசலில் இரவு 10 மணிக்குமேல் விளக்கு ஏற்றி வைக்கவேண்டும் என்று! நம்பிக்கை இல்லை என்று சொன்னாலும், எத்தனை வீடுகளில் 'எதற்கு வம்பு' என்று விளக்கு இருந்தது தெரியுமா?
:)))))
அஹ்ஹாஹஹ் அட இப்படியுமா?!!! பச்சைப் புடவை போயி விளக்கு வந்துடுச்சா...
Deleteபிகே பார்த்த எஃப்க்டா?!!1ஹ்ஹஹாஹ்ஹ....நல்ல கேள்வியே!
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்/மனைவு, ஷ்ரேயா, அண்ட் செல்லத்திற்கும் (எங்கள் வீட்டுச் செல்லங்களுக்கு புத்தாண்டு வாழ்த்த்டுக்கள் சொல்லியாகிவிட்டது...) எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடனும் நட்புடனும்
துளசிதரன், கீதா
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா...
ReplyDeleteஎங்கயாவது வெளிய போகணும் அவ்வளவுதான். சிலர் டாஸ்மாக்கை தேடிபோறான் . சிலர் சினிமாவுக்கு போறாங்க. ஏதாவது ஒரு கொண்டாட்டம் தேவைப் பட்டுகிட்டே இருக்கு.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நீங்க எப்படி?
ReplyDeleteஇப்படி எல்லாம் யோசிச்சா, மூளை தேஞ்சு போயிடும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நல்ல கேள்வி! :)
ReplyDeleteதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete