செய்தி : நடப்பு பார்லிமென்ட்
கூட்டத் தொடரில், கடினமான, வில்லங்கமான கேள்விகளை
கேட்டு, அமைச்சர்களை திணறடிப்பதை தவிர்க்க வேண்டும்' என, தங்கள் கட்சி எம்.பி.,க்களுக்கு,
பா.ஜ., மூத்த தலைவரும், பார்லிமென்ட் விவகார துறை அமைச்சருமான வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
கூட்டணி கட்சிக்காரன் விமர்சிப்பதும்
தவறு.. தன் கட்சி எம்பிக்கள் கேள்வி கேட்பதும் தவறு என்றால் மோடி ஆட்சி என்ன கொடுங்கோலர்
ஆட்சியா என்ன? பேசாம எந்த கேள்விகளுக்கு அமைச்சர்களுக்கு பதில் தெரியும் என்பதை கேட்டு
அதற்கு தகுந்த கேள்விகளை கேட்க சொல்லுங்க.. இல்லையென்றால், கலைஞர் நாளிதழ்களுக்கு அவரே கேள்வி கேட்டு அவரே பதில் சொல்லுவது
போல செய்ய உத்தரவிடுங்கள்.
இல்லையென்றால் இப்படி வில்லத்தனமான
கேள்விகளை கேட்டு வைக்கப் போகிறார்கள்.
1. மோடி பிரதமர் ஆன முதல்
எத்தனை நாடுகளுக்கு சென்று வந்தார்?
2. மோடி அலை இன்னும் அடித்து
கொண்டிருக்கிறதா இல்லையா?
3. இந்திய வங்கிகள் மிக அதிக
கடன் தொகையை மோடியின் நண்பர்களுக்கு மட்டும்தான் தருமா?
4. மோடி ஆள்வது இந்தியா ஆனால்
மோடியை ஆளுவது இந்திய முதலாளிகளா?
5. சுப்பரமணிய சுவாமியை இந்தியாவின்
அதிகாரப் பூர்வமான வெளியுரைத் துறை அமைச்சராக எப்போது மோடி அரசாங்கம் அறிவிக்கும்?
6. நடிகர்தான் இலங்கையில்
தூக்கு தண்டனை பெற்ற தமிழர்களை பேச்சுவார்த்தை நடத்தி விடுவித்தார் என்றால் தமிழக மீனவர்
பிரச்சனையை முடித்து வைக்க நடிகர்களை அனுப்பும் திட்டம் ஏதும் உள்ளதா?
7. தமிழகத்தில் பாஜாக தலைவர்
தமிழிசை அவர்களா அல்லது சுப்பிரமணிய சுவாமியா?
8. ஆட்சிக்கு வந்த பின் நண்பர்களுக்கு
அல்ல மக்களுக்கு மோடி செய்த சாதனைகள் அல்லது நன்மைகள் என்ன?
அன்புடன்
மதுரைத்தமிழன்
நம்ம எம்.பிங்க கேள்வியெல்லாம் கேக்குறாங்களா என்ன? வெங்கையா வேடிக்கையா இப்படித்தான் பேசுவாரு! ஹாஹா!
ReplyDeleteமோடி அரசியல் பண்ணுராரோ இல்லையோ நீங்கள் அவர் மற்றும் பாஜகவை வைத்து நல்லா செய்யூறீங்க..
ReplyDelete