Monday, December 1, 2014





மதுவின் மேல் அதிகம் மயக்கம்  கொண்ட மைதிலி...அட நீங்க தப்பா நினைச்சு படிக்காதீங்கப்பா...  இது மைதிலி என்ற பதிவர் தன் கணவர் மதுவின் மீது கொண்ட மயக்கத்தைதான் சொல்ல வந்தேன்.

சரி சரி இந்த ஆதர்ச தம்பதி பற்றி இங்கே என்ன பேச்சு என்றா கேட்கிறிர்கள். அதெல்லாம் ஒன்றுமில்லைங்கை.. நாமதான் வீட்டுல பூரிக் கட்டையால் அடிவாங்குகிறோமே.. இந்த தம்பதிகள் வீட்டில் என்ன பேசுவார்கள் சண்டை ஏதும் போடுவார்களா என்று நினைத்தேன். சரி அவர்கள் வீட்டில் என்னதான் நடக்கும் என்று ஒரு நாள் நான் ரகசியமாக ஒட்டுக் கேட்டேன்.


அப்படி நான் ரகசியமாக, அவங்க பேசுனதை கேட்ட எனக்கு, அதை ரகசியமாக வைத்து கொள்ள முடியாததால் அதை உங்ககிட்டே இங்கே பகிர்ந்துகிறேன். ரகசியத்தை நாலு பேருகிட்ட சொல்லாட்ட அது எப்படிங்க ரகசியமாக இருக்கும் என்ன நான் சொல்லுறது சரிதானே.

மது : என்னம்மா மைதிலி உன் தம்பி பாண்டியன் செய்கிற காரியத்தை கேட்கும் போது என்னால தெருவுல தலை நிமிர்ந்து போக மிடியல.....

மைதிலி : யாரை சொல்லுறீங்க என் தங்க கம்பி பாண்டியனையா சொல்லுறீங்க.. அவர் அப்படி ஏதும் தவறான காரியம் ஏதும் பண்ணவே மாட்டாருங்க. ஆமாம் அப்படி அவர் என்னதான் பண்ணிட்டாருங்க அதை சொல்லுங்க முதல்ல?

மது : அந்த அசிங்கத்தை எப்படி சொல்லுறது... ஹும்ம்ம்ம் சரி சொல்லித்தானே ஆகனும்.. உன் தம்பி இருக்கார்ல அவர் ஸ்கூலில் இருந்து வந்ததும் வீட்டுக்குள் சென்று கதவை தாள் போட்டுகிறார். சரி அவருக்கு சின்ன வயசுதான் இப்பதான் கல்யாணம் ஆச்சு அதுக்காக இப்படியா? கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம...

மைதிலி : ஆஹா ஆஹா என்று சிரித்தவாரே : என்னங்க கொஞ்சம் நிறுத்துரிங்களா.... ஆம்பிளைங்க எல்லாம் இப்படி தப்பா நினைக்கிறதை மாத்தமாட்டீங்களா என்ன? நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம என் தம்பி கிடையாதுங்க... அவர் வீட்டை பூட்டிக் கிட்டு  நம்ம மதுரைத்தமிழன் செய்கிற மாதிரி வீட்டை க்ளின் பண்ணி பாத்திரங்களை அழம்பி வைத்து சமையலுக்கு காய்கறி நறுக்கி தருகிறாராம் அதை அவரே சொன்னார் இப்படி அவர் அந்நியோமாக ஒருவருக்கு ஒருவர் உதவிகொள்வதை பார்த்த சில அரை லூசுங்க கிண்டல் பண்ணுறாங்களாம் அதனாலதான் அதை அவர் கதவை மூடிக் கொண்டு பண்ணுகிறாராமுங்க. அதை தெரியாமல் நீங்க என்னனென்னவோ பேசுறீங்க...


மது : சரிம்மா என்னை மன்னிச்சுகோம்மா... அப்புறம் இன்னொன்று சொல்ல மறந்துட்டேன் உங்க அண்ணன் முத்துநிலவன் இருக்கிறாரே....

மைதிலி : அவருக்கென்ன அவர்தான் வானத்தை போல மனம் படைச்ச மன்னவர் ஆச்சே..

மது : ஹீஹீ. உங்க அண்ணன் முத்துநிலவன் இனிக்க இனிக்க பேசி உலகெங்கும் இருக்கும் மக்கள் அந்த பேச்சை கேட்கிறார்கள் ஆனால் அவர் வீட்டிற்கு வந்தா அவர் பேச்சை யாரும் கேட்கமாட்டார்களாமே அவர் சம்சாரம் பேசுவதைதான் அவர் கேட்க வேண்டுமாம் இல்லைன்னா தட்டில் சாப்பாடு இருக்காதாமே

மைதிலி; உங்களுக்கு எப்பவுமே என் வீட்டுகாரங்களை பற்றி பேசலாட்டி தூக்கம் வாராதே பாருங்க பாருங்க இன்று இரவு நீங்க இப்படி பேசுனதுக்காக ரவா உப்புமாதான் கிடைக்க போவுது.

மது : சரிம்மா சரிம்மா இனிமே உங்க வீட்டுகாரங்களை பற்றி பேசமாட்டேன். இனிமே அந்த மதுரைத்தமிழனனை பற்றி பேசுறேன்.

மைதிலி : அடி  நீதான்ய என் ராசா இப்ப சொல்லுங்க உங்களுக்கு பிரியாணி வேண்டுமானாலும் பண்ணி தரேன்.

மது : மைதிலி அந்த மதுரைத்தமிழனை கடந்த ஒருவாரமா நெட்டுல அதிகம் பார்க்க முடியலையே என்ன ஆச்சு அவனுக்கு?

மைதிலி: என்னங்க இதெல்லாம் ஒரு கேள்வியா என்ன? அவனை அதிக நாள் காணவில்லை என்றால் அவன் மனைவி அவனை மிக வேகமாக பூரிக்கட்டையால் அடித்து இருக்க வேண்டும் அதனால் பலத்த காயமுற்ற அவன் இந்த பக்கம் வரமுடியாமல் போயிருப்பான். இதுதான் ஊரு ஓலகத்துகே தெரியுமே..

மது : அது சரி . எப்பவாவது அவன் பேசி ,அவன் மனைவி சரின்னு  எதுக்காவது  சொல்லி இருக்காங்களா?

மைதிலி : ஓ .... நிறைய விஷயங்கள் அவன் சொல்லி அவன் மனைவி கேட்டு இருக்கிறாங்கப்பா. உதாரணமாக அவன் சமைக்கிறேன் வீடு சுத்தம் செய்கிறேன், துணிமடிக்கிறேன் என்றால் அவன் மனைவி சரி சரி என்று சொல்லுவாங்கப்பா

மது: மைதிலி சரி நாம இதோட நிறுத்தி அடுத்த வேலையைபார்ப்போம். இல்லை இதை யாராவது கேட்டு மதுரைத்தமிழங்கிட்ட போட்டு கொடுத்திட்டா அவன் நம்மை மீண்டும் கலாய்க்க ஆரம்பித்துவிடுவான் சரி இப்ப சொல்லு நான் காய்கறி நறுக்கி கொடுக்கவா அல்லது துணிமணி மடிச்சுவைக்கவா சொல்லு


மைதிலி: இதை எல்லாம் நான் சொல்லித்தான் நீங்க செய்யனுமா என்ன? வழக்கம் போல செஞ்சிடுங்க. அதுக்குள்ள நான் கணணியை லாக் ஆன் பண்ணி என் நண்பண் வருண் ஏதாவது பதிவு போட்டு இருக்கிறாரா என்று பார்த்த்துட்டு அப்படியே ஒரு கவிதையை பதிவா போட்டுட்டு வந்துடுறேன்.

மதுவின் மைண்ட் வாய்ஸ் : என்ன அந்த மதுரைத்தமிழன் அடிவாங்க்கிட்டு ஊரை எல்லாம் கூட்டிக்கிட்டு வீட்டு வேலை செய்யுறான். ஆனா இங்கே அடிவாங்காமா அன்பா செய்யுறோம் அவ்வளவுதான். என்ன இந்த கால பொண்ணுங்க சம உரிமை அது இதுன்னு பேசி நம்பளை அப்படியே வீட்டு வேலைகளை செய்ய வைச்சிட்டு இவங்கபாட்டுல நெட்டுல போய் உரிமைக்காக போராடுறாங்க...ஹும்ம் என்னத்த சொல்ல யாருகிட்ட சொல்ல

 டிஸ்கி : இதில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே. அப்பாடா யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள் ஹீஹீஹீ
அன்புடன்'

மதுரைத்தமிழன்

20 comments:

  1. மைதிலிய அடிக்கடி வம்புக்கு இழுக்கறீங்க மதுரைத் தமிழா. என் தங்கச்சி வீட்டு பூரிக்கட்டையோட சக்தி உமக்குத் தெரியாதுன்னு நெனக்கிறேன்... ஹா... ஹா... ஹா.. உசாரா இருந்துக்கோரும்....

    ReplyDelete
    Replies
    1. நான் வம்புக்கு இழுக்கலான்னா அவங்களுக்கு தூக்கம் வராதுங்க

      Delete
  2. ஹஹஹஹ செம கலாய்ச்சல் மதுரைத் தமிழா.....கணேஷ் அண்ணா சொன்னதப் பாருங்க அதுதான் வரப் போகுது பாருங்க..ஹஹஹ்..

    மது அண்ட் மைதிலி எங்கப்பா போயிட்டீங்க இந்தத் தமிழனின் லொள்ளு தாங்க முடியலியே!..ஹஹ ரொம்பவே ரசிச்சோம்பா...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் எங்க போயிட்டாங்க இந்த இரண்டு பேரும் உண்மையிலே பூரிக்கட்டையை ஆர்டர் பண்ண போயிட்டாங்களா என்ன?

      Delete
  3. வணக்கம் சகோதரர்
    மதுவும் கஸ்தூரினு பார்த்த உடனே எங்க அக்காவை வம்புக்கு இழுத்தவரை ஒரு கை பார்த்திடலாம் வந்து நின்னா தலைவரு நம்மலயும் இழுத்து விட்ருக்காரு. ஆனாலும் எங்க ரொம்ப நல்லவங்க அவன் இவனு எப்பவும் சொல்ல மாட்டாங்க இதுல இருந்தே நீங்க பொய் சொல்றீங்கனு தெரியுது. கடைசில கற்பனைனு வேற போட்டு தப்பிச்சுட்டீங்க இல்லைனா வண்டியா வண்டியா பூரிக்கட்டை பிளைட்ல ஏறி வந்திருக்கும். பரவாயில்லை மதுரைத் தமிழன் அவர்கள் செய்த அறியாத தவறைப் பொறுத்தருள்வோம். எல்லாரையும் ஒரு வாரு வாரிட்டீங்களே! நாம் ரூமுக்குள்ள போகுறது இருக்கட்டும் நீங்க ரூம் போட்டு யோசிப்பீங்களோ! ஒருவேளை இப்படி இருக்குமோ மனைவி பூரிக்கட்டை தூக்கிட்டு விரட்டும் போது ஓடி ரூமுக்குள்ளே ஒழிந்து கொள்ளும் போது யோசிருப்பீங்க கரக்ட் தானே சகோ. ( நீங்கள் தவறாக எண்ண மாட்டீர்கள் என்பதால் கொஞ்சம் விளையாட்டுக்கு எழுதியாச்சு)

    ReplyDelete
    Replies
    1. பூரிக்கட்டையை என் மனைவிக்கும் பூரிக் கிழங்கை எனக்கும் அனுப்பினால் சந்தோஷமாக இருக்கும்.. நானெல்லாம் பொண்டாடிக்கு பயந்து ரூமிற்குள் ஒழிகிற ஆள் கிடையாது நான் ரொம்ப தைரியமானவன் பொண்டாட்டி அடிக்க வரும் போது மிக தைரியமாக பெட்டுக்கு அடியில் படுத்து கொள்வேன் அங்கே வந்து குனிந்து அவளால் அடிக்க முடியாது.


      அட பாஸ் எப்பவும் என்னை கலாய்த்து எழுதலாம் கவலை பட வேண்டாம் நான் தவறாக எடுத்து கொள்வதில்லை

      Delete
  4. Replies
    1. ஆமாம் நீங்க மைதிலி அல்லது மது அல்லது முத்துநிலவன் அல்லது பாண்டியன் அல்லது மதுரைதமிழன் இதில் யாரு நிலமையை எண்ணி சிரிக்கிறீங்க என்று சொல்லிட்டு சிரிச்சா நல்லா இருக்கும்

      Delete
    2. பொதுவாச் சிரிச்சேன்!

      Delete
  5. அடி வாங்க கூட கொடுத்து வைத்திருக்க வேண்டும்... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. என்ன நீங்க உங்க வீட்டுகாரம்மாவிடம் கூட நல்ல பெயர் எடுத்து இருக்கிறீர்களோ? அடியே வாங்கியது இல்லை போலிருக்கிறது

      Delete
  6. நல்ல கற்பனை,,,!

    ஆனால்... அடி விழப்போறது என்னமோ கற்பனை இல்லைங்கோ.....

    ReplyDelete
    Replies
    1. கற்பனை நிஜமாக ஆக வேண்டும் என்று விரதம் இருந்து சாமி கும்பிடுவீங்க போல இருக்குதே

      Delete
  7. தல: உங்களுக்கு என்ன ஆச்சு??!! என்னவோ போங்க!

    ReplyDelete
    Replies
    1. என்ன பாஸ் நான் ஏதாவது தப்பாக எழுதிவிட்டேனா? தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் பாஸ் நான் யாரையும் காயப்படுத்தும் நோக்கில் எழுதுவதில்லை

      Delete
  8. என்ன நீங்க ஸ்மைல் பண்ணுகிறத பார்த்தா உங்க வூட்டுகாரம்மா கையில பூரிக்கட்டையை வைச்சிருக்கிற மாதிரி இருக்கு.... ச்சே சசே தப்பா எடுத்துகிடாதீங்க நான் சொல்ல வந்தது உங்க வூட்டுகாரம்மா பூரி சுட கையில் பூரிக்கட்டையை வைத்து இருக்கிற மாதிரி என்று சொல்ல வந்தேன் அவ்வளவுதானுங்க்

    ReplyDelete
  9. எப்படி இவ்ளோ ஜாலியா இருக்கீங்க...?

    உங்கள் தளவடிமைப்பும் உங்கள் போட்டோஷாப் வொர்க்கும் எனக்கு பிடிக்கும்..
    அப்புறம் ஒரு அப்பிராணியை வீட்டில் வைத்துக்கொண்டு
    உலகம் முழுக்க பூரிக்கட்டை அடி என்று கிளப்பி விட்டுட்டு இருக்கீங்க..

    என்னை மாதிரி எத்துனை அப்பாவிகள் பாதிக்கப்பட்டிருக்காங்க...
    எங்க வீட்டில் பூரியே செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டேன் ...
    இப்போ ஸேப்..

    ReplyDelete
    Replies
    1. அம்மிக் கல்லு ஆட்டுக் கல்லு காலத்தில மதுரைத் தமிழன் இருந்தா எப்படி இருந்திருக்கும்?

      Delete
    2. ஹை அப்ப மது வீட்டுக்குப் போனா சப்பாத்தி கிடைக்கும்...அதுக்கும் அந்தக் கட்டைதானேங்க உருட்டணும்....

      Delete
  10. படம் அட்டகாசம்.
    //மதுவின் மேல் மயக்கம் கொண்ட மைதிலி //
    இதுதான் மதுமயக்கமோ?
    மதுவை தடை செய்யணும் ஒரு கூட்டம் தமிழ் நாட்டில சொல்லிக்கிட்டிருக்கே. அதுக்கு மைதிலி நிச்சயமா ஒத்துக்க மாட்டாங்க .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.