Thursday, December 11, 2014


rajinikanth
Add caption

மானங்கெட்ட தமிழர்களுக்கான பதிவு &  கலைஞர் பாணியில் மதுரைத்தமிழன் பதில்

மானங்கெட்ட தமிழர்களுக்கு இப்படி ஒரு படம் போட்டால்தான் பாரதிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவாங்க



தமிழர்களே தமிழ் மொழி பேசப்படு வரை இந்த பாரதி நிலைத்து நிற்பான்.பாரதி இருக்கும் போது பெற்ற புகழைவிட இறந்த பின் கிடைத்த புகழ் அதிகம்.


ஆனால் நடிகனுக்கோ காலப் போக்கில் வேறு ஒருவன் நன்றாக நடிக்க ஆரம்பித்தால் இப்போது உள்ளவன் பற்றிய புகழ் எல்லாம் மறைந்து போகும்

அதனால் பாரதியை அவன் பிறந்த நாளில் நாம் நினைவு கூறுவோமாக


****************************** ********************************* ************************************

கலைஞர் பாணியில் மதுரைத்தமிழன் பதில் :

செய்தி :60 வயதை கடந்த என்னை டூயட் பாட வைத்தது கடவுள் எனக்கு கொடுத்த தண்டனை- லிங்கா படவிழாவில் ரஜினிகாந்த் பேச்சு

மதுரைத்தமிழன் பதில் : தவறுகள் செய்பவர்களுக்குதான் கடவுள் தண்டனை தருவார் நல்லது செய்தவங்களுக்கு அல்ல. அப்ப ரஜினி என்ன சொல்ல வருகிறார் தான் நல்லவன் இல்லை என்று சொல்ல வருகிறாரா என்ன?


அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. இது மிக பெரிய தவறு. ஒரு நடிகனை நடிகனாக மட்டுமே பார்க்கவேண்டும். இவரை காட்டி பாரதியை நினைப்பது பாரதிக்கு வரும் அவமானமே..

    ReplyDelete
  2. இப்படி போட்டோ போட்டு குதர்க்கமா எழுதினா தான் படிப்பாங்கன்னு சிலர் நினைக்கும் போது, நீங்கள் சொல்லுவது போல மானம்கெட்டவர்களும் இருக்க தான் செய்வார்கள்... ​#பாரதி #தலைவர் #அவமரியாதை #கடுப்பு

    ReplyDelete
  3. ரஜினியின் வேகத்திற்கு பாரதி ஈடு கொடுத்தாலும் பாரதியின் வேசத்திற்கு ரஜினி ஈடு ஆக மாட்டார் என்றே தோன்றுகிறது! ரஜினியை வைத்து நினைவு கூற வேண்டிய அளவில் இன்னும் பாரதி போகவில்லை என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  4. பாரதியை நாம் கண்டிப்பாக நினைவு கூற வேண்டும், ஆனால் இந்த மாதிரி மட்டும் கூடாது. அதுவும் தமிழ்நாட்டில் பிறக்காத ஒருவரை கொண்டு,பாரதியை நினைவு கூறுவது தவறு.

    ReplyDelete
  5. இப்படியான ஆட்கள் பாரதியை நினைக்கவே வேண்டாம். இப்படியான படம் பார்த்து மரியாதை செய்தல் எந்த மூடநம்பிகைகளைவிடவும் அசிங்கம்தான்.

    ReplyDelete
  6. வருத்தமாக உள்ளது. இது மாதிரி படத்துடன் நீங்கள் பதிவு இடுவது மிகத்தவறு Mr.மதுரைத் தமிழன்

    ReplyDelete
  7. என்னங்கமா இப்படி செய்யுறீங்களே மா ...

    ReplyDelete
  8. தமிழா! நீங்க டிவில பாத்துருப்பீங்க...திரைவிமர்சனம் செய்யும் போது படம் பார்த்துட்டு வர கூட்டத்துக் கிட்ட படம் எப்படினு கருத்து கேப்பாங்க...பசங்கலும் கேமராக்கு போஸ் கொடுக்கற சந்தோஷத்துல சும்மா அடிச்சு விடுவாய்ங்க...அந்த கூட்டட்துக்கிட்ட...அதான் லிங்கா பாத்துட்டு வர கூட்டத்துக்கிட்ட போயி கொஞ்சம் "பாரதினு ஒருத்தர் இருந்தாரு...அவரு பிறந்த நாள் எதுன்னு கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன்....எத்தனை பேர் அதுக்கு பதில் சொல்லுவாங்கன்னு நினைக்கிறீங்க....அதான் நிலைமை....உங்கள் படம் யதார்த்தைத்தான் சொல்லுகின்றது என்றாலும்...இருவரின் தராசுத் தட்டுகளும் சமமாக இருக்க முடியாதே தமிழா....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.