இந்த கால குழந்தைகள் பெற்றதும்
இழந்ததும்
1980 க்கு முன்பு பிறந்தவர்களை இந்த கால குழந்தைகள் கேலி செய்தாலும்
அல்லது அவர்களைப்பற்றி என்ன நினைத்து கேலி
செய்தாலும் 80 க்கு முன்பு பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே
தனியாக
படுக்காமல் அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கிய அதிர்ஷ்டசாலிகள் நாம் தான்
கிச்சன் அலமாரிகளில்
சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
எந்த
வித உணவுப் பொருட்களும் எங்களுக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
தாகம் எடுத்தால்
தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
புத்தகங்களை
சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.
பள்ளியில் இருந்து
வீட்டிற்கு வந்ததில் இருந்து இருட்டும் வரை
ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
சைக்கிள்
ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாடியது இல்லை.
நாங்கள் பேசியது
விளையாடியது எல்லாம் நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
கடையில்
ஜூஸாக இருந்தாலும் திண்படங்களாக இருந்தாலும் வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும்
நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
நிறைய இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதத்தையும்
சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
காலில்
ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
சிறு விளக்கு
வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
உடல்
வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச்
சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
எங்களுக்கு வேண்டிய
வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
எங்கள்
பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன்
பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை
அல்ல
அவர்கள் தொடர்பு
கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய்
என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
உடல்
நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
எங்களது உணர்வுகளை
போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை
உள்ளத்தில்
இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால்
சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
எங்களிடம் செல்போன்
டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட்
போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
நினைத்த
பொழுது நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு
உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
எங்கள் காலங்களில்
திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர்
இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
உறவுகள்
அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
நாங்கள் எடுத்த
புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள்
இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில்
உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
இலவசம்
பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
இந்த காலக்கட்டங்களில் பிறந்து
வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
எனக்கு வந்த பழைய இமெயில்களை பார்த்த
போது கிடைத்த பொக்கிஷ மெயில் இது. எனக்கு பிடித்த
இந்த மெயில் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.இதை எழுதியவர் யாராக இருந்தாலும் அவருக்கு
எனது நன்றிகள்
அனைத்தும் முற்றிலும் உண்மை.ஆனால் இந்த கால குழந்தைகள் எதை இழந்தார்கள் என்பதை புரிந்து கொள்ளாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
ReplyDeleteஅனைத்தும் முற்றிலும் உண்மை . ஆனால் இந்தக் கால குழந்தைகள் எதை இழந்தோம் என்பதை அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள்
ReplyDeleteஆஹா... ஆஹா... அற்புதம் நண்பரே. ஒவ்வொரு வரியிலும் என்னையும் காண்கிறேன். பள்ளிக்கூட நாட்களுக்கு அழைத்து சென்று விட்டீர்கள்.
ReplyDelete\\ தாகம் எடுத்தால் தெருக் குழாயில் தண்ணீர் குடிப்போம். ஆனால் வாட்டர் பாட்டில் தேடியதில்லை\\
\\ நினைத்த பொது நண்பர்கள் வீட்டுக்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழ்ந்து வந்தோம் \\
\\ காலில் எதுவும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு எதுவும் நேர்ந்ததில்லை\\
+1 படிக்கும் வரை நான் காலணி அணிந்ததில்லை (வாங்கித் தரவில்லை)
தலைமுறை இடைவெளி எப்படி எல்லாம் மாற்றி விட்டது ,ரசிக்க வைத்த கருத்துக்கள் அனைத்தும் உண்மை !
ReplyDeleteத ம 2
சரி சரி!! நான் நீங்க எனக்கு நாலஞ்சு வர்சம் சீனியரா:)))) அப்போ நீங்க black and white ஆளா:)))
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஉண்மைச்சம்பவம் போல் உள்ளது உள்ளதை உள்ளபடி மிக நன்றாக சொல்லியுள்ளீர்கள் த.ம 2பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒவ்வொரு வரியும் உண்மை......
ReplyDeleteகாலை முதல் இந்தப் பதிவு பார்க்கும் வரையிலும் இது குறித்து இன்று குழந்தைகளுடன் உரையாடியதை வைத்து சில வற்றை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நன்றி.
ReplyDeleteஇந்த கால குழந்தைகள் இவ்வளவு இழந்திருக்கிறார்களே.
ReplyDeleteஇன்னும் ஒன்றை சேர்க்கலாம் - விடுமுறைகளில் vacation course என்று சேராமல், ஜாலியாக சொந்தகக்காரர்களின் வீட்டுக்கு சென்று விடுமுறையை சந்தோசகமாக கழித்திருக்கிறோம்
ட்ரூ ட்ரூ ட்ரூ ட்ரூ....வழி மொழிகின்றோம்....
Deleteவருகின்றோம் தமிழா....சிறிது வேலைப் பளு...நிதானமாக வாசிக்க வேண்டியது...வருகின்றோம்...
ReplyDeleteஇவ்வளவு இழப்பா.......!!!!
ReplyDeleteஅனைத்துமே உண்மைதான். நாங்கள் எங்கள் கல்வி இடுகைக்கு அடுத்து இந்தக் காலத்துக் குழந்தைகள் எத்தனை நல்ல விஷயங்களை இழந்துள்ளார்கள் என்று சொல்ல நினைத்திருந்தோம்....உங்கள் இந்தப் பதிவு பலவற்றைச் சொல்லி இருக்கிறது...ம்ம்ம் ஆம் உண்மையே நாம் பல நல்ல விஷயங்களை அனுபவித்துள்ளோம் என்பதுதான்...இங்க நம்ம தாத்தா பாட்டிய/அம்மா, அப்பாவக் கேளுங்க அவங்க நம்மள விட இன்னும் அதிகமா அனுபவித்ததாகச் சொல்லுவாங்க......ஒரு வேளை நம் குழந்தைகள் அடுத்த தலைமுறையினருடம் இப்படித்தான் சொல்லுவார்களோ....அந்தத் தலைமுறையினர் எதை இழந்துவிட்டிருக்கின்றார்கள் என்று?!!!!
ReplyDelete