Tuesday, December 30, 2014



காதலியைத் தேடி ஒரு பயணம்....

எனக்கும் ஒரு காதலி கிடைத்தாள்( உனக்குமா என்று கேட்பது என் காதில் விழுகிறது)
அவள் உலகயே மறந்து என் மீது அன்பு மழை பொழிந்தாள்.(சரியான லூசா உன் காதலி என்று நீங்கள் கேட்பதும் என் காதில் விழுகிறது)
எனக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை( மரமண்டை உனக்கு என்னதான் புரியப்போகிறது)

இவள் எனக்கு காதலியாக இருக்கும் போதே
இவ்வளவு அன்பு காட்டுகிறாளே(அப்படிதான் மக்கா நடிப்பாங்க)
அவளே எனக்கு மனைவியாக வந்தாள் எப்படி இருக்குமென(வேண்டாம் இந்த விபரீதம்)
கற்பனை சிறகை பறக்கவிட்டேன்( ஆமாம் இவரு பெரிய பாடகர்)
அதுவும் மிகவும் இனிமையாக இருந்தது.
இனிமையான கனவை நினைவாக்க முயற்சி செய்தேன்(உனக்கு நீயே கல்லறை தோண்டுகிறாயா?)
அதனால் காதலியை மனைவியாக்கினேன்(கடவுளே இந்த அப்பாவியை நீதான் காப்பாற்ற வேண்டுமப்பா)
காதலி மனைவியானது அன்பு அதிகாராமாக மாறியது.(இன்னொரு ஜெயலலிதாவாஆஆஆஆஅ)
அதிகாரத்தைவிட அன்புதான் எனக்கு பிடித்திருக்கிறது.
அதனால் அன்பைபொழியும் காதலியைத் தேடி எனது பயணம் தொடர்கிறது( டேய் நீ இன்னொரு பெண்ணுக்கு ஆசைபடுறேன்னு தைரியமா சொல்லேண்டா)


நீங்க நினப்பது மாதிரி நான் அப்படி மோசமானவன் இல்லைங்க. நான் சொல்ல வருவது என்னவென்றால் மனைவியை மீண்டும் காதலியாக்க நான் முயற்சி செய்கிறேன் என்றுதான். அதற்கு உங்களிடம் ஐடியா ஏதாவது இருந்தா சொல்லுங்களேன்

என்னடா இதெல்லாம் ஒரு பதிவா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. என்ன செய்ய நம்ம வலைதளம் தினம் தேடி வருபவர்களை ஏமாற்ற கூடாது என்ற நல்ல எண்ணமும் மேலும் என்ன பதிவு போடவது என்று யோசித்ததில் மூளை சுளுக்கி கொண்டதால் வேறு வழியின்றி இந்த பதிவை இட்டுள்ளேன்.

டிஸ்கி: இது என்னுடைய கற்பனை பதிவுதான். அதனால் இது உங்கள் வாழ்க்கை அனுபவமா என்று என்னை கேட்டு என் குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க பின்னுட்டத்தில் யாரும் முயற்சி செய்ய வேண்டாம்( அப்பாட  யாரவது மனைவியிடம் வத்தி வைச்சால் அதில் இருந்து தப்பிக்க ஒரு வழியா டிஸ்கியில் போட்டு விட்டோம். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு இப்போதைக்கு கவலையில்லை)

இது ஒரு மறுபதிவு

அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் எண்ணங்கள் கிறுக்கல்களாக உங்கள் பார்வைக்கு
30 Dec 2014

11 comments:

  1. //மனைவிய மீண்டும் காதலியாக்க முயற்சி செய்கின்றேன்.. அதற்க்கு ஏதாவது ஐடியா//

    தமிழா... அது ரொம்ப சுலபம்.. கணவன் ஸ்தானத்தில் உள்ள நீ கொஞ்சம் இறங்கி காதலன் ஸ்தானத்திற்கு வா.. , ,மனைவி ஆட்டமேட்டிக்கா காதலி ஆகி விடுவார்கள்.

    ReplyDelete
  2. பூரியான பின் மீண்டும் மாவாகுமா ?மனைவி மனைவிதான் ,காதலியாகவே முடியாது :)நீதி கேட்டு நீங்கள் துவங்கி இருக்கும் நீண்ட பயணத்தை முடித்துக் கொள்ளுங்கள் ,தொடர்ந்தால் கீழ்ப்பாக்கத்தில் போய் நிற்பீர்கள் :)

    ReplyDelete
  3. கிறுக்கலாக இருந்தாலும் நிச்சயம் இது ஒரு அருமையான படைப்பு !

    ReplyDelete
  4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....! புதிய ஆண்டில் நேரத்திற்கு நல்ல சாப்பாடு கிடைக்கவும் பூரிக் கட்டையில் இருந்து தப்பவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஹா ஹா ....

    ReplyDelete
  5. அவங்கள wife னு நினைக்காம ,இப்போவும் love னு நினைச்சா all problems over:)) ஆமா lover னு சொல்லாம love னு சொல்லறேன்னு நினைகிறீங்களா?? lover ஆண்களை குறிக்கும் lady love தான் பெண் பால்(டீச்சர்கள் தொல்லை,,,தாங்கமுடியவில்லை:))) முகமற்ற அந்த மதுரை தமிழனின் போக்கே கிடைச்சுடுச்சு:))

    ReplyDelete
    Replies
    1. மனைவி காதலிக்க போறேன்னு சொல்லி பூரிக்கட்டைய கையில எடுக்க விடாம செய்ய நினைக்கிற மதுரைத் தமிழனின் சதித் திட்டத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

      Delete
  6. ஹா.... ஹா... நல்ல படைப்பு...

    ReplyDelete
  7. மனைவி காதலியானால் - நினைத்துப்பார்க்கவே நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால்???

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  9. ஹ்ஹஹஹ்ஹஹ் காதலி கிடைச்சாங்களா இல்லையா....அதாங்க மனைவி காதலியானார்களா இல்லையா ஹஹ்ஹ்ஹ் (அப்பவாவது பூரிக்கட்டை தூக்கப்படாது இல்லையா அதான்)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.