Tuesday, December 16, 2014



ஸ்டாலின் பேச்சை கேட்ட பின்  திமுகவில் இருந்து தொண்டர்கள் விலகுகிறார்களா? அப்படி என்னதானய்யா சொன்னார்?

கலைஞரால் திமுகவின் வாரிசாக அறிவிக்கப்பட்ட ஸ்டாலின் திமுகவில் வாரிசுகளுக்கு இடமில்லை என்று  சொன்னார். அதனால் காலம் காலமாக திமுகவில் தொண்டர்களாக இருந்தவர்களின் பிள்ளைகள் மாற்று கட்சிக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.


இதனை அறிந்த கலைஞர் ஸ்டாலினை கண்டித்து மகனே சொல்லுவதை தெளிவாக சொல்லிவிடு நீ அரைகுறையாக சொன்னதால் திமுகவின் கூடாரமே காலியாகிவிடும் போல இருக்கிறது என்று அவரை கண்டித்தார். அதன் பின் ஸ்டாலின் விட்ட அறிக்கையை திருத்தி திமுகவின் தொண்டர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களின் வாரிசாக  (தொண்டர்களாக) மட்டும் வைத்து கொள்ளலாம் ஆனால் திமுக கட்சியின் பதவிகளுக்கு   கலைஞர் குடும்பத்தினர் மட்டும் வாரிசாக இருக்க முடியும் என்று அறிக்கை விடுவிக்க அட்வைஸ் சொல்லி இருக்கிறார்


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. கலைஞர் சொன்னால் அது சரியா இருக்கும். ஆனா மதுரைத் தமிழன் சொன்னால்?

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக இருக்கும்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.