Monday, December 1, 2014



சொந்த காசுல சூணியம் வைச்சிக்கிட்ட ஹெச்.ராஜா


செய்தி :பிரதமர் மோடியையோ, மத்திய அரசையோ அல்லது ராஜ்நாத்சிங் போன்ற தலைவர்களைப் பற்றியோ வைகோ தொடர்ந்து பேசினால் அவர் செல்லும் இடங்களில் பேசிவிட்டு பாதுகாப்பாக திரும்ப முடியாது என்றும் அவர் நாவை அடக்காவிட்டால் அவரை அடக்குவது எப்படி என்று ஒவ்வொரு பாஜக தொண்டனுக்கும் தெரியும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஹெச்.ராஜா தஞ்சையில் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

ராஜா என்று பெயர் வைத்து மோடிக்கு கூஜாவாக இருக்கும் ஹெச்.ராஜா வைகோ எழுப்பும் பிரச்னைகளுக்கு பிரச்சனை ரீதியாக பதில் சொல்லுவதை விட்டுவிட்டு  மிரட்டல் விடுப்பது அவரது இயலாமையை மற்றும் நாகரீகமற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது.  கட்சியில் மேலும் ஆதாயம் பெறத்தான் இந்த கூஜா இப்படி வார்தைகளை அள்ளி வீசுகிறது .நாலாந்தர அரசியல் தலைவர்கள்கூட இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து பேசத் தயங்குவர். ராஜாவே நீங்கள் ஆயிரம் குறை சொல்லுங்கள் ஆனால் திரு வைகோ அவர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் தகுதி இந்தியாவில் எந்த அரசியல் வாதிகளுக்கும் இல்லை என்பதுதான் உண்மை. அவரின் பாரளுமன்ற உரைகளே இதற்கு சாட்சி. உங்களால் முடிந்தால் மோடியை பொது மேடையில் ஏற்றி வைகோவை எதிர் கொள்ள சொல்லுங்கள் பார்ப்போம் . உங்களால் அது முடியுமா? அதற்கான ஆண்மை உங்களிடம் உண்டா? வைகோ வே கூட்டணியை விட்டு வெளியேறுங்கள் என்று கூச்சலிடும் பாஜாகவினேரே முடிந்தால் நீங்கள் அவரை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டியதுதானே

ராஜா அவர்களே வைகோ மோடியை ஒருமையில் அழைத்து இருந்தால் நீங்கள் அவரை கூப்பிட்டு நீங்கள் மோடியை விமர்சனம் பண்ணுங்கள் அதைப்பற்றி நாங்கள் கவலைபடவில்லை ஆனால் அவரை ஒருமையில் அழைப்பது தவறு இனிமேல் கூட்டணியில் இருந்து அப்படி அழைக்காதீர்கள் அது பண்பு அல்ல என்று சொல்லுவதை விட்டு விட்டு நீங்கள் மிகவும் கீழ்த் தரமாக இறங்கி பதில் அளித்திருப்பது நியாமா என்ன? இந்த விஷயத்தை பலூண் போல அதிகமாக ஊதிவிட்டு மோடியை  ஒருமையில் பேசியதை உலகமெங்கும் தெரியவைத்து மோடியின் புகழுக்கு இழிவை தேடி தந்துவீட்டீர்கள். மோடியை அசிங்கப்படுத்தியது வைகோ என்று சொன்னால் அதை உலகெங்கும் விளம்பரப்படுத்தியது நீங்கள் தான்.

ஹெச்.ராஜா இப்படியா நீங்க சொந்த காசுலே சூணியம் வைச்சிக்குவீங்க?

சிலர் நினைப்பது போல வைகோ சுயநல அரசியல்வாதி அல்ல. தமிழினத்திற்கு மோடி ஏதாவது நல்லது செய்வார் என நம்பியதே அவர் செய்த பிழை. கூட்டணியில் இருந்து கொண்டு அவர் நினைத்திருந்தால் நல்ல பதவி பெற்றிருக்க முடியும். ஆனால் நியாயத்தின் பக்கம் நிற்பது அவர் என்பதால் எப்போதும் பலரால் கிண்டல் செய்யப் படுகிறார் என்றே தோன்றுகிறது

வைகோ என்று நான் நினைக்கும் போது என் மனதில் தோன்றுவது இந்த பாடல்தான்.
வெற்றிப் பெற்ற மனிதன் எல்லாம் புத்திசாலி இல்லை. புத்திசாலி மனிதன் எல்லாம் வெற்றி காண்பது இல்லை

டிஸ்கி: மோடியோ தமிழகத்தில் காலுன்ற நினைக்கிறார் ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்றிவிடக்கூடாது என்கிற ராஜாவின் நோக்கம் மட்டும் இன்னும் புரியவில்லை. எங்கே பாஜா தமிழகத்தில் காலுன்றிவிட்டால் எங்கே தமிழிசை அல்லது பொன்.இராதா கிருஷ்ணன் இன்னும் அதிக பவருக்கு வந்துவிடுவார்களோ என்ற பயம்தான் காரணமா என்ன?


அன்புடன்

மதுரைத்தமிழன்

9 comments:

  1. கொஞ்சம் யோசித்துப் பேசி இருக்கலாம்
    அல்லது ஒருவேளை தான் கவனிக்கப் படவேண்டும்
    எனக் கூடப் பேசி இருப்பாரோ ?

    ReplyDelete
    Replies
    1. என்னைப் பொறுத்தவரை "மோடியின் பார்வை தன் மீது அதிகம் பட வேண்டும்" என்ற காரணத்தினால்தான் இவர் இப்படி பேசி இருக்க வேண்டும்

      Delete
  2. போட்டீங்களே ஒரு டிஸ்கி..எல்லாருக்கும் புரிஞ்சிடுச்சு சாமி எல்லாருக்கும் புரிஞ்சிடுச்சு..

    சரியான பதிவு.

    God bless you.

    ReplyDelete
  3. அருமையான பதிவு நண்பா.. மதுரைத் தமிழனா கொக்கா? (சொக்கா?)
    “புததியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை” நீங்கள் சொல்வ்துபோல இது வை.கோ. என்பதில் எனக்கும் 90விழுக்காடு உடன்பாடு உண்டு (பத்துவிழுக்காடு, யாரை ஆதரித்தாலும் உச்ச ஸ்தாயியி்ல் உலக வரலாற்றுப் புள்ளிவிவரத்தை அள்ளிவிட்டு, பிறகு எதிர் முகாமுக்கும் போய்அதே..!!??!!)
    அடுத்து, “வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை” என்பது அப்படியே மோடிஜிதான்! வேறென்ன? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குன்னா பாருங்க.. உலக நாடுகளின் கால்களில் விழுந்து ரயில்வேய தர்ரேன், எல்ஐசிய தர்ரேன், பெல் ஐ தர்ரேன்னு பேரம் பேசிட்டு, இங்க வந்து சாதனைப் பயணம்னு சொல்ல வேறுயாரால் முடியும்? அருமையான கட்டுரைக்கு வாழ்த்தும் பாராட்டும் நண்பரே!

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரர்
    சொல்ல வந்த கருத்தை நெத்தியடியாக சொல்லி விட்டீர்கள். கட்சியின் தலைமை தன்னைக் கண்டுகொள்ள வேண்டுமென்பதே அவர் இவ்வாறு பேசியதற்கான நோக்கம். வை.கோ அவர்களின் கொள்கையைப் பாராட்டித் தான் ஆக வேண்டும்.

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு...
    வைகோவைப் பொறுத்தவரை சில விஷயங்கள் முன்னுக்குப் பின் இருந்தாலும் தமிழினத்துகாக குரல் கொடுக்கும் ஒரே தமிழன்.... தலைவன்....
    ராஜா நாவை அடக்கியிருக்க வேண்டும்...

    ReplyDelete
  6. ஓ! இப்ப புரியுது ராஜா ஏன் இப்படி கீழ்தரமா பேசியிருக்காருன்னு. அவரும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதிவிக்கு ஆசைப்பட்டவர் தானே...
    ஒரு வேளை, அவர் தலைவராக இருந்திருந்தால், இப்படி கீழ்தரமாக பேசாமல், நீங்கள் சொல்வது மாதிரி நடந்து கொண்டு இருப்பாரோ என்னவோ!!!

    ReplyDelete
  7. கைப்புள்ளைக்கு எல்லாம் ஒரு பதிவு போட்ருக்கீங்களே... இதுக்கு ஆசைப்பட்டுதான் பேசிருப்பாரு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.