நம் இதயம் உடைந்து போனது
என்பதை சொல்ல வார்த்தைகள் கிடைக்காததால் நமது கண் கண்ணிர்துளியின் மூலம் சொல்ல முயல்கிறது.
சந்தோஷமாக மோசமான நட்புக்கூட இருப்பதைவிட கவலையுடன் நல்ல நட்புக்கூட
சேர்ந்து இருப்பது எவ்வளவோ மேல்
கவலையை கண்ணீர் துளியுடன்
வெளிப்படுத்தினால் கண்ணிரை துடைத்து கவலையை போக்க உதவலாம். ஆனால் மனதுக்குள் அழுதால்
?
நல்லவனாக நடித்து ஏமாற்றுவர்கள்
பலர் அதே நேரத்தில் நல்லவனாக வாழ்ந்து ஏமாந்து கொண்டிருப்பவர்கள் பலர். இதுதான் உலகமடா
கண்களில் கண்ணிர் வரவில்லை
என்பதால் இதயம் அழவில்லை என்று நினைப்பது தவறு.
ஆண்கள் அழும் போது கண்ணீர்
துளிகள் வருவதில்லை காரணம் அவர்கள் அழுவது இதயத்திற்குள் மட்டுமே
திடமான மனிதர்களுக்கு மனது
வலிக்கும் போது மற்றவர்கள் முன் புன்னகைத்து சென்று அவர்கள் சென்ற பின் கதவை அடைத்து
குமறி அழுவார்கள் இந்த யுத்தம் மூடிய அறைக்குள் மட்டுமே நடக்கும்
கனவில் சுகமாக இருப்பது நிஜத்தில்
சுமையாக இருக்கிறது.
உங்கள் அன்புக்குரிய
மதுரைத்தமிழன்
டிஸ்கி ; இது எல்லாம் நான்
பேஸ்புக்கில் இட்ட சோக ஸ்டேடஸ். இதை படித்த நண்பர் விசு என்னப்பா என்ன ஆச்சு என்று
கவலையுடனும் மைதிலி அவர்கள் என்னாச்சு ஏன் இந்த புலம்பல்கள் என்று நலம் விசாரித்தனர்.
அவர்களுக்கு என் நன்றி.
இதோ அவர்கள் இருவருக்குமான
என் ஸ்டேடஸ் : நான் கவலைபடுகிறதை நினைச்சு நான் கவலைபடுகிறதைவிட நான் கவலைப்படுகிறேன்
என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களே அதை நினைச்சுதான் எனக்கு பெரும் கவலையாக இருக்கிறது.
அதனால நான் கவலைப்படுகிறேன் என்று நினைத்து நீங்கள் கவலைப்படாமல் இருந்தால்தான் நான்
கவலைப்படாமல் இருக்க முடியும் அதனால் இனிமேல் நீங்க ...........
யோவ் மதுரைத்தமிழா முதல்ல வாயை மூடு..
நீ கவலைபடு அல்லது பேசாமல் இரு அதற்காக எங்கள் இருவரையும் ஏம்ப்பா இப்படி சாக அடிக்கிறே..ஆளைவுடுடா
சாமி
இந்தப் பதிவைப் பார்த்ததும்.... படித்ததும்....
ReplyDeleteஎனக்கும் கவலை கவலையாக....
அழுகை அழுகையா.....
சிரிப்பு சிரிப்பா..... வருதுங்க தமிழரே!
விசு பாணி எழுத்தில் நீங்கள் வல்லவர்
ReplyDeleteஎன்பதற்கு இப்பதிவும் ஒரு நல்ல உதாரணம்
கவலைப் பதிவைப் படித்து ரசித்துச் சிரித்தேன்
வாழ்த்துக்கள்
சொன்னது அனைத்தும் உண்மை தான்... ஆனால் எதுவென்றாலும் யாரிடமாவது உண்மையாக வெளிபடுத்தி விடுவது நல்லது... உடலுக்கும் மனதிற்கும் வலுவை ஊட்டும்...
ReplyDeleteஎன்ன ஆச்சு? அழறதைப் பத்தி எழுதி இருக்கறத பாத்தா வழக்கத்த விட இந்த முறை அடி கொஞ்சம் பலமாத்தான் இருக்கும் போலிருக்கு.
ReplyDeleteசிலர் அழுவார் சிலர் சிரிப்பார் (இப்போது)
ReplyDeleteநான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்
இந்த பக்கத்திற்கு வந்தவுடன், தத்துவங்கள் மழையாக பொழிகிறதே...
ReplyDeleteடிஸ்கியை படித்தவுடன் தான் அப்பாடா என்றிருந்தது.
எல்லாம் சரி திடீர் என்று தத்துவமழை பொழிவதற்கு என்ன காரணம் ஐயா?
ஹ்ஹஹ்ஹஹ் மதுரைத் தமிழன் எப்போது டைரக்டர் விசுவானார்....
ReplyDeleteஆனாலும் நீங்க சொல்லி இருக்கறது எல்லாமே நல்லாத்தான் இருக்கு...(னான் கண்ணீர் விடறேன்...நீங்க நல்லாருக்குனு சொல்றீங்களா.....நான் என்ன காமெடி பீஸா" ந்னு கேக்கறீங்களோ?!! ஹஹஹ்ஹ
சிரிப்பு பாதி அழுகை பாதி
ReplyDeleteசேர்ந்ததல்லவோ மனித ஜாதி
ச்சே!! என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்க தான் !! முரளி அண்ணா டக்குனு விஷயத்தை கண்டுபிடிச்சுட்டார் பாருங்க:))
ReplyDelete#ஆண்கள் அழுவது இதயத்திற்குள் மட்டுமே #
ReplyDeleteபூரிக்கட்டையால் அடிப்பவர் இதை புரிந்து கொண்டால் சரி :)
த ம 4
உண்மையில் மனதுக்குள்ளான சோகத்தை சற்று சிரமமே. இருப்பினும் அவற்றைப் பகிர்ந்துகொண்டால் மனத்திலுள்ள சுமை குறையும்.
ReplyDeleteநல்ல தத்துவம் ஆனால் நகைசுவையாக எடுத்துகொள்ள முடியாத நல்ல வாசகம் . அருமை
ReplyDelete