Monday, November 17, 2014



"நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமா?  அப்ப இதை கண்டிப்பாக படியுங்க

நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமா?

அப்படியென்றால் மனைவி கூட சண்டை போடுங்க..


என்னங்க அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் .அப்படி சண்டை போட்டா அவ சமைக்கமாட்டாளே என்று நினைக்கிறீர்களா?

அது சரிதான். அதுதான்ய நமக்கு வேண்டும்.

அதுக்குதானய்யா சொல்லுறது சண்டை போடுன்னு..

சண்டை போட்டா சமைக்க மாட்டா. சமைக்கலைன்னாதானே ஹோட்டலுக்கு போய் நமக்கு பிடிச்ச மாதிரி சாப்பிட முடியும்

#என்ன நான் சொல்லுறது
டிஸ்கி : சண்டை போடும் முன் உங்கள் மனைவி உங்களை விட பலமானவளாக இருந்தால் சண்டை வேண்டாம் அப்படியும் சண்டை போட்டால் ஹோட்டலுக்கு போமுடியாது ஹாஸ்பிடலுக்குதான் போக வேண்டி இருக்கும்


அன்புடன்

மதுரைதமிழன்

12 comments:

  1. மனைவி பலமானவளாக இருந்தால், எப்படி நல்ல சாப்பாடு கிடைக்கும். அதுக்கு ஒரு வழியையும் சொல்லாம விட்டுட்டீங்களே.
    உங்கள் மனைவியும், உங்கள் விட பலசாலியாகத்தான் இருக்க வேண்டும். அதனால தானே, பூரிக்கட்டிக்கு பயந்துக்கிட்டு, இதற்கு பதில் சொல்லாம விட்டுட்டீங்க.

    ReplyDelete
  2. வீட்டிலேயே நல்ல சாப்பாடு கிடைக்க வழிதேடலாமே இதை விட்டு விட்டு ஹோட்டலுக்கு போய் நோய்களை விலைக்கு வாங்காமல். உன்னைப் போல அழகும் அறிவும் யாருக்கு வரும் என்று சொல்லிப் பாருங்களேன் அதுக்கு எல்லாம் ஒரு மனசு வேணுமே இருக்கா ஏற்றுக் கொள்ள மாட்டீங்களே.... இருந்திருந்தால் பூரிக்கட்டைக்கு வேலை இருக்காது இல்லையா சகோ ஹா ஹா .....

    ReplyDelete
    Replies
    1. "//உன்னைப் போல அழகும் அறிவும் யாருக்கு வரும்//"
      சகோ, ஆண்களுக்கு எப்பவுமே பொய் பேச பிடிக்காது.

      Delete
  3. எப்படியோ அடி உதை வாங்கியாவது நல்ல சாப்பாடு சாப்ட்டு உடம்பை தேத்துங்க. மறுபடி பூரிக்கட்டைக்கு வேலை வருமே...

    இன்றுமா அடிப்பாங்க. பிறந்த நாள் ஆச்சே. வாழ்த்துக்கள். என்றும் புன்னகையுடன்.

    ReplyDelete
  4. இன்று உங்கள் பிறந்த நாளா..? எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. நல்லாவே சொல்றீங்க யோசனை! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நல்ல சாப்பாடு சாப்ப்டணும்னா !! நீங்களே கிச்சனில் போய் சமைச்சிடுங்க :))
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  7. ஆகா இன்று பிறந்த நாளா இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க! மார்க்கண்டேயர் மாதிரி என்று சொல்ல வந்தேன்.

    ReplyDelete
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதுரை தமிழா!

    நீண்ண்ண்ண்ண்ட காலங்கள் வாழ்ந்து இது போல சுவையான பதிவுகளை இட்டு
    எங்களையும் மகிழ்ச்சியாக வாழ வையுங்கள்.

    ReplyDelete
  9. ஆமாம்..... உங்களுக்குத் தான் மாமி பணம் கொடுப்பதில்லையே....

    ஓட்டலில் நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு மாவாட்ட போறீங்களா....?

    ReplyDelete
  10. எங்க வீட்ல அவரும் சேர்ந்து சமைக்கிறாரே நான் என்ன செய்வது?

    ReplyDelete
  11. ஒரு வழியா உங்க bald head ஐ காட்டியமைக்கு நன்றி!! நேத்து தான் யூத்னு சொன்னிங்க!! போட்டோ வை பார்த்தால் அப்படி தெரியலையே!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.