வருத்தப்படாத
வாலிபர்கள் சங்கம் பற்றி
எல்லோரும் அறிந்திருப்பீங்க
அல்லது படிச்சிருப்பீங்க
ஆனால் வருத்தப்படாத
வயோதியர்கள் சங்கம் பற்றி
யாரும்
அறிந்திருக்கமாட்டீர்கள்.
முதியவர்கள் எல்லாம் இளைஞர்
அணி தலைவர்களாக இருக்கும்
போது இளையவர்கள் வயோதிகர்கள்
சங்கம் ஆரம்பிப்பதில் தவறு
இல்லையே? அதனால் இந்த தளம்
மூலம் வருத்தப்படாத
வயோதியர்கள் சங்கம்
ஆரம்பித்து வைக்கப்படுகிறது.
நீங்கள் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் நீங்கள்
இந்த சங்கத்தில்
உறுப்பினர்களே.
இந்த வயயோதிகர்கள்
சங்கக்த்தில் ஆண் பெண்
இருபாலரும்
உறுப்பினர்கள்தான்.
சங்கம ஆரம்பித்த அன்றே
வருத்தப்படாத வயோதியர்கள்(
ஆண்கள்) சங்கத்தின் தலைவர்
பொருளாளர் செயலார் மூவரும்
சங்கத்தின் ஆபிஸில்
உடகார்ந்து பேச ஆரம்பித்தனர்.
அப்போது தலைவர் இன்று
ரொம்ப குளிராக இருக்கிறதல்லவா
என்று கேட்டார்.
அதற்கு பொருளாளர்
ஆமாம் இன்று புதன்கிழமைதான்
என்று சொன்னார்.
அவர்கள் இருவர்
சொன்னதை கேட்ட செயலாளர் இல்லை
இல்லை 'ரம்' தான் குடிப்பதற்கு
டேஸ்டாக இருக்கும் என்று
சொன்னார்.
இறுதியாக அன்றைய
கூட்டம் காங்கிரஸ்
அலுவலகத்தில் வேஷ்டி சட்டைகளை
கிழித்து கொள்வது போல
அல்லாமல் அமைதியாக முடிந்தது.
வருத்தப்படாத
வயோதியர்கள்( ஆண்கள்)
சங்கத்தில் நடந்ததை
பார்த்தோம் இப்போது
வருத்தப்படாத வயோதியர்கள்(
பெண்கள்) சங்கத்தில் நடப்பதை
பார்ப்போம்
வருத்தப்படாத
வயோதியர்கள்(பெண்கள்)
சங்கத்தின் தலைவர் பொருளாளர்
செயலார் மூவரும் செயலாளரின்
வீட்டில் உட்கார்ந்து பேச
ஆரம்பித்தனர்.
அப்போது சங்கத்தின்
தலைவி நான் சில சமயங்களில்
ப்ரிஜ்ஜை திறந்து பாலை
எடுத்தபின் அதை உள்ளே வைக்க
ப்ரிஜ்ஜை திறந்தேனா அல்லது
வெளியே எடுக்க திறந்தேனா
என்று மறந்தே விடுகிறது என்று
சொன்னார்.
அதைகேட்ட பொருளாளர்
அது கூட பரவாயில்லை நான்
மாடிப்படிகளின் அருகில்
நிற்கும் போது நான் மேலே
போவதற்க்காக இங்கே நிற்கிறேனா
அல்லது மேலிருந்து கிழே
எதற்காகவாது இறங்கி வந்தேனா
என்று மறந்தே விடுகிறது. அது
இந்த வயசான காலத்தில் மிக
கஷ்டமாக இருக்கிறது என்று
சொன்னார்
அதைகேட்ட முன்றாவது
பெண்மணி அதுதான் செயலாளர்.
எனக்கு உங்களை போல எல்லாம்
ஞாபக மறதி கிடையாது Knock on wood என்று
சொல்லி மேஜையில் இரண்டு தடவை
தட்டிவிட்டு உடனே யாரோ கதவை
தட்டுகிறார்கள் போய்
பார்த்துவிட்டு வருகிறேன்
என்று சொல்லி சென்றார்.
சங்க செய்திகள்
தொடரும்............................................
கொசுறு செய்தி :
பெண் பதிவர் :
மதுரைத்தமிழா நீங்கள்
வயோதிகரான பின் எப்படி இருக்க
ஆசைபடுறீங்க ?
இளமையாக இருக்கதான்
ஆசைப்படுகிறேன்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : என்னடா இந்த
மதுரைதமிழனுக்கு இப்படி
எல்லாம் சங்கம் ஆரம்பிக்க
எப்படிதான் ஐடியா தோன்றுகிறதோ
என்று நீங்கள் நினைக்கலாம்.
உண்மையை சொல்லப் போனா இந்த
ஐடியா என்னுடையது அல்ல ஒரு
தமிழ் பெண் பதிவர்தான் தமிழா
வருத்தப்படாத வயோதியர்கள்
சங்கம் என்ற தலைப்பில்
நீங்கள் ஏதாவது நகைச்சுவையாக
எழுதுங்களேன் என்று ஐடியா
கொடுத்தார் அவருக்கு எனது
நன்றிகள். அவர் ஒகே என்று
சொன்னாள் அவர் யார் என்பதை
இங்கே சொல்லுகிறேன்.
அப்ப வயசான ஆண்களுக்கு காது கேட்பதில்லைன்னு பெண்களுக்கு மறதி நோய் தாக்குதுன்னும் சொல்றீங்க.....
ReplyDeleteஏதோ நீங்களெல்லாம் சங்க மெம்பர் ஆகப் போறதில்லைன்ற மாதிரி பதிவு கொஞ்சம் எடுப்பு தொடுப்பா இருக்கே....!
ReplyDeleteஇதுக்கும் ஐடியாவா...
ReplyDeleteஹாஹாஹா செம காமெடி!
ReplyDeleteசொன்னாள் என மரியாதை குறைவாக சொல்லுகிறீர்களே!! ஒருவேளை அது சொன்னால்??? என்று வருமோ?? எது எப்படியோ இப்போ தான் வயதுக்கு தகுந்த தலைப்பே கொடுத்திருகிறீர்கள்:))
ReplyDeleteஆஹா! நிஜமாவே "வருத்தப்படாத வயோதிகர் சங்கம்னு" பாதிக் கதை எழுதி வச்சிருக்கேன் பினிஷிங் திருப்தி இல்லாததல வெளியிடலஅதுக்குள்ள மதுரைத் தமிழன் முந்திக்கிட்டாரே. நல்ல காலம் கன்டென்ட் வேற மாதிரி இருக்கு, என் பதிவ இன்னும் ஆறு மாதம் தள்ளி வைக்கிறேன்.
ReplyDeleteவித்தியாசமான நகைச்சுவை சிந்தனை
Knock on wood :) ROFL :)
ReplyDeleteசங்கத்தில் எனக்கும் உப செயலாளர் அல்லது உப பொருளாளர் பதவி கிடைக்குமா ? :) ரெண்டு சங்கத்துக்கும் தலைவரா நீங்களே இருந்துக்கோங்க நோ ஆட்சேபனை !!
ஆஹா... காது கேக்காததால அங்க வேஷ்டி சட்டை கிழியலை....
ReplyDeleteபெண்களுக்கு மறதி வருமோ? ஏன்னா ஒரு விசயத்தை விடாம கேள்வியா கேட்டு துளைத்து எடுப்பதில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் முதலிடம்... எத்தனை வருடம் ஆனாலும் மறக்கமாட்டாங்களே சகோதரா....
வாலிபர் சங்கத்துக்கான தலைவர் பதவி எனக்குத்தான்... ஹிஹி...
ReplyDeleteநீங்க என்னைய கேட்காம உறுப்பினராக உள்ளே இழுத்துவிட்டுட்டீங்க. அதனால் எனக்கு தான் தலைவர் பதவி தரணும் சொல்லிட்டேன்.
ReplyDeleteநீங்கள் எழுதியிருப்பதை விட, படங்களைத்தான் நான் மிகவும் ரசித்தேன். (உங்கள் சிஷ்யனாக இருந்துகொண்டு இது கூட ரசிக்கலைன்னா எப்படி???)
நீங்கள் தொடங்கிய சங்கத்தைப் பார்த்ததும்.....
ReplyDeleteஎனக்கும் “வருத்தப்படாத வஞ்சியர் சங்கம்“ ஒன்று திறக்க ஆசை வந்து விட்டது.....)))
ஆமாம்..... உங்கள் சங்கத்தின் கொள்கைகள் என்ன?
அடுத்த பதிவில் வெளியிடுவீர்களா....?
நாங்களும் உள்ளேயா?!! அப்ப நீங்க?!!
ReplyDeleteதமிழா அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்! பெண்களை விட ஆண்களுக்குத்தான் மறதி நோய் அதிகம் வருகின்றதாம் கருத்துக் கணிப்பு அப்படித்தான் சொல்கின்றது. நோட் திஸ் பாயின்ட் - இது கீதா