Tuesday, November 4, 2014

how to be happy




சந்தோஷமாக இருப்பது எப்படி?

வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோரும் சந்தோஷமாக இருக்கவே விரும்புவார்கள். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.


அதனால் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று ஆராயத் தொடங்கும் போது என் கண்ணில் பட்டது சந்தோஷமாக இருப்பது எப்படி? என்ற புத்தகம் அந்தப் புத்தகத்தை முழுவதும் படித்ததேன் அதில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால் சந்தோஷமாக வாழ ஒவ்வொரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழும் போது நீங்கள் சந்தோஷமான மூடில் இருப்பதாக நினைத்துக் கொண்டே எழுந்தால் அந்த நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்பதே.

இதைப் படித்த நான் கடந்த வாரம் முழுவதும் அதில் சொன்னவாரே தினமும் நான் நல்ல மூடில் இருப்பதாக நான் நினைத்து வந்தேன் என்ன ஆச்சிரியம் தினமும் நான் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன்.

இன்று காலையிலும் அது போல நினைத்து எழுந்து காபி சாப்பிட்டவாறே வாசலில் அமர்ந்து காலை செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது எழுந்து சென்று பார்த்தால் ஊருக்குச் சென்ற என் மனைவி சீக்கிரமாகவே தனது வெகேஷனை முடித்துக் கொண்டு வந்துவிட்டாள்.

அவளைப் பார்த்ததும் நான் சந்தோஷமான மூடில் இருப்பதாக நினைத்துப் பார்க்கவே முடியவில்லை...

இப்ப சொல்லுங்க மக்கா அந்தப் புத்தகத்தைப் படித்து அதன்படி நடந்ததால் நான் சந்தோஷமாக இருந்தேனா அல்லது என் மனைவி ஊரில் இல்லாததால் நான் சந்தோஷமாக இருந்தேனா?

கொசுறு :



அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

17 comments:

  1. ஆசையே அலைபோலே, நாமெல்லாம் அதன்மேலே, ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே.

    ReplyDelete
  2. சரியான் படம் போட்டிருக்கீங்க..

    ReplyDelete
  3. ஹா ஹா ,அசந்து போய் இருப்பார்கள் வீட்டுக்காரம்மா.

    ReplyDelete
  4. அடடா..ஹாஹாஹா...புதிய பூரிக்கட்டையுடன் வந்து விட்டார்களா. சகோதரியார்

    சந்தோஷம் என்பது புத்தகம் படித்தாலும் எப்போதும்....இருக்காது

    அது வெளியில் இல்லை உள்ளே உள்ளது தானே சகோதரரே.

    ReplyDelete
  5. ஹஹஹஹஹாஹஹ்...ரசித்தோம்...பூரிக்கட்டை இல்லாமல் போரடிக்கலயா உங்களுக்கு?!! ஆச்சரியம்தான்....

    ReplyDelete
  6. படம் மிகச் சிறப்பு
    அவர் அவரிடம் உள்ள சிறப்பினை அறியாது
    அடுத்தவரை ஒப்பிட்டுத்தான் நாம் அதிகம்
    மகிழ்வாய் இழக்கிறோம்
    சுருக்கமான ஆயினும் சுவாரஸ்யமான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மிகவும் குறும்பு!

    ReplyDelete
  8. எண்ணம் போல வாழ்வு என்பதை எளிமையாக புரியவைத்து இருக்கிறீர்கள்! நகைச்சுவையுடன்! நன்றி!

    ReplyDelete
  9. தமிழரே.... நீங்கள் புர்ரிக்கட்டையால் அடி வாங்கினால் தான்
    உங்களுக்கும் எங்களுக்கும் சந்தோஷம்.

    அதனால்... புத்தகம் எல்லாம் படிச்சி சந்தோஷத்தைத் தேடாதீர்கள்.

    ReplyDelete
  10. படம் அட்டகாசம்.
    கொசுறு இன்னும் சூப்பர்.அது சொல்லும் பாடம் :பிறரிடம் இருப்பது நம்மிடம் இல்லை என்று நினைப்பதால் சந்தோஷம் போய்விடுகிறது.

    ReplyDelete
  11. கூட்டி கழித்து பார்த்தால் மொத்தத்தில் சந்தோசமாக இருந்திருகிறீர்கள் என்று புரிகிறது

    ReplyDelete
  12. நீங்கள் எப்பவுமே சந்தோஷமாகத்தான் இருக்கிறீர்கள். மனைவி ஊரில் இருந்தால், அவர் தங்களை பூரிக்கட்டையால் அடிக்கும்போது அவருக்கு ஏற்படும் சந்தோசத்தைப் பார்த்து, நீங்களும் சந்தோஷம் அடைகிறீர்கள், உண்மையா இல்லையா சொல்லுங்கள?

    ReplyDelete
  13. சரி தான்... ஹா... ஹா... ஹா... ஹா...

    ReplyDelete

  14. நாம் எண்ணுவதே ஆழ் உள்ளத்தில் (மனத்தில்) இருந்து செயற்படுவதால், எண்ணிய எண்ணம் போல் உணர்கிறோம். அதற்கு எடுத்துக்காட்டாக தங்கள் பதிவைச் சொல்லலாம்.

    ReplyDelete
  15. மகிழ்வோடு இருக்கும் தாங்கள் மகிழ்வோடு பதிந்துள்ள இப்பதிவு படிப்பவர்களுக்கு மகிழ்வினைத் தரும் என்றே கூறலாம்.

    ReplyDelete
  16. பதினஞ்சு நாள் கழிச்சு நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு வந்தேன்:(( ஹ்ம்ம்ம் இப்போ மறுபடியும் டயர்ட். நீங்க மாறப்போறதே இல்லை:)))))

    ReplyDelete
  17. நம்மிடம் இருப்பதை விட்டு அடுத்தவரிடம் இருப்பதையே விரும்பும் மனிதன்! :)

    ஆஹா அடுத்த பூரிக்கட்டை பாய்ச்சல் ஆரம்பிச்சுடுச்சு!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.