Wednesday, November 19, 2014

ஓ..மை...காட்!!! ரஜினி மட்டுமல்ல மனித இதயம் உள்ள ஒவ்வொருவரும்  பார்க்க வேண்டிய பதிவு  ( Deal or No Deal )



வாழ்க்கையில் நல்ல  சேர்க்கைகள், பண்புகள் , பழக்கவழக்கங்கள் அவசியம் . அதன் மூலம்தான் நம்மால் வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல முடிவுகள் எடுக்க முடியும்.

சில நேரங்களில் நாம் எடுக்கும் சிறிய முடிவுகள்  நமது வாழ்க்கையை அப்படியே திசை திருப்பி போட்டுவிடும், பெண்ணுக்கும் மண்ணுக்கும் பொருளுக்கும்( பணம்,தங்கம்) புகழுக்கும் அதிக ஆசைப் பட்ட மன்னர்களும், அரசியல்வாதிகளும், பிசினஸ்மேன்களும், உலக தலைவர்களும், மக்களும் எடுத்த சிறிய முடிவினால் அழிந்த உண்மை கதைகள் அநேகம் உள்ளதை நாம் அறிவோம்.


ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நாம் நமது பள்ளி புத்தகத்தில் படித்து முடித்து மறந்தும் போனோம்.இப்போதைய பள்ளி புத்தகத்தில் இது போன்ற வரிகள் இன்னும் உள்ளதா என்று தெரியவில்லை.

இந்த வரிகளை மறந்த ஒருவன் எடுத்த முடிவு அவனை எங்கே கொண்டு சென்றன என்பதை கிழேயுள்ள வீடியோ க்ளிப்பை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

இந்த வீடியோ க்ளிப்பை பார்க்கும் போது மோடியின் ஆசை வார்த்தைகளை கேட்டு ரஜினி எங்கே இதில் உள்ளது போல உள்ள கருப்பு பட்டனை தொட்டுவிடுவாரோ என்று அச்சமாகவே இருக்கிறது


மனித மனம் பலவினமானதுதான் ஆனால் நாம் அதை நல்லபண்புகளாலும் , எண்ணங்களாலும் பலப்படுத்திக் கொண்டே இருந்தால் எந்த இக்கட்டான நேரங்களிலும் நல்ல முடிவுகள் நம்மால் எடுக்க முடியும்.

நண்பர்களே எந்த முடிவு எடுத்தாலும் அந்த முடிவால் மற்றவர்கள் சிறிதும் பாதிக்காதபடி முடிவு எடுங்கள்.

அன்புடன்
மதுரைத்தமிழன்.


ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது. வந்தீங்க... படிச்சீங்க, அப்படியே ஒடப் பாக்கிறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்

8 comments:

  1. கை தட்டல்! உங்களுக்கு ஒரு பொக்கே! ஆஹா! தமிழா மிக மிக அருமையான வாழ்வியல் கருத்துடனான வேல்யூ பேஸ்டு ஒரு பதிவு. குறும்படம் சூப்பர்!

    ReplyDelete
  2. ரஜனி! ப்ளாக் பட்டனைத் தட்டாமல் இருப்பதுவே நலம்!

    ReplyDelete
  3. அருமையான குறும்படம்! கடைசிக்காட்சி சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  4. சொந்தமாக முடிவெடுப்பதற்கும் மற்றவர்கள் கொடுக்கும் நெருக்கடியினால் / மிரட்டலினால் முடிவெடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு

    ReplyDelete
  5. அவரு ரொம்ப கெட்டிக்காரர் அவ்ளோ சுலபமா ஏமாற மாட்டார், ஆனா ரொம்ப பீல் பன்னுநிங்கன்ன பேசிபேசி அவர்காக உங்களையே பட்டன் அழுத்த வச்சுபுடுவார், அம்புட்டுதான் சொல்வேன்.

    ReplyDelete
  6. ரஜினி இத்தனை நாட்களாக சொந்தமாகத் தான் முடிவெடுத்துக் கொண்டு வருகிறார்.

    மோடி மந்திரவாதி இல்லை.

    ReplyDelete
  7. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete
  8. பொருத்திருந்து பார்ப்போம், ரஜினி என்ன முடிவு எடுக்கிறார் என்று.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.