Thursday, November 13, 2014


என்னருமை நண்பர்களே....

ஹிந்து மதம்..... என்று சொல்லிக் கொண்டு.... ஏக்கர் கணக்கில் மடம், ஆசிரமம் என்று நடத்துவோரிடம் உஷாராய் இருங்கள்.

ரஜினி, கமல், விஜய், அஜித் மாதிரியானவர்கள் இந்த அளவு அலட்டிக்கொண்டு வாழ்வதற்கு அவனுக எது பேசினாலும் கேட்பதற்கு "கும்பல்" கூடுவதால்தான் அப்படி நடந்து கொள்ளுகிறானுக.


ரசிப்பதோடு நிறுத்திக்கொண்டு.... கும்பல் கூடாமல் இருந்தால் அவனுக ஏன் அம்புட்டு சம்பளம் கேக்கறானுக!?
கை தட்டுவதோடு நிறுத்திக்கொண்டால்.... அவனுக ஏன் அடுத்த முதல் அமைச்சர் நான் தான்!! என்றும், ஆண்டவன் சொன்னால் அடுத்த முதல்வர் நான் தான்!! என்றும் ஏன் உளறித்திரிகிறானுக!?

அது போலத்தான் மடம் வைத்து நடத்துகிறவனு(ளு)க யோக்யதையும்.

ஆன்மீக பாதையை தேர்ந்தெடுத்து.... சுய சிந்தனை செய்து.... ஆன்ம பரிசோதனையில் ஈடுபட்டு அவன் ஒருவன் உய்யும் வழியை தேடுவதை விட்டுவிட்டு..... உங்களையும் அவனோடு சேர்த்துக் கொண்டு அவனுக உங்களை எங்கு அழைத்துச் செல்லுவானுக!?

இந்த உலகம் தோன்றி எத்தனையோ யுகங்கள் ஆகிவிட்டன. அத்தனை யுகங்களிலும் பெரிய பெரிய ரிஷிகள் வாழ்ந்திருக்கிறார்கள்.... அத்தனை பேரும் கும்பல் சேர்த்துக்கொண்டு.... சம்சார கரையைத் தாண்டவில்லை..
அந்த மடத்தை நடத்துபவனுக்கு வயிற்றுவலி என்றால்... அவனுகதான் மருந்து சாப்பிடனும்....
உங்கள் வலிக்கு அவன் மருந்து சாப்பிடுவதாகச் சொல்லி... உங்கள் வலியைக் குறைப்பதாக சொன்னால் நம்பாதீர்கள்....

உங்கள் "கர்ம" பலனை அனுபவிக்கத்தான் நீங்கள் பிறப்பெடுத்ததே!! அதுபோலத்தான் மடம், ஆசிரமம் நடத்துகிறவனுகளும்!!

உங்கள் கர்மத்தை பங்கு போட்டு அவனுகளால் ஒரு மசுரும் பிடுங்க முடியாது!!
அவனுக உளறல்களை தத்துவம் என்று நம்பி... ஏமாந்து அவனுக எல்லோரும் இன்னும் 100 ஏக்கர் நிலத்தை வாங்கும் அளவு முன்னேற்றாதீர்கள்.

நாங்க அப்படித்தான்யா செய்வோம்!! என்று நீங்கள் சொன்னால்... நான் தடுக்க மாட்டேன்.!!
இதுவரை இந்த மடம், ஆசிரமம் வைத்து நடத்திய மயிரானுங்களால் இவ்வுலகில் நடைபெற்ற அதிசயமும், மாற்றமும் என்னென்ன!? என்று உங்களை நான் கேட்பேன்!!

துப்பு இருந்தால் பதில் சொல்லிவிட்டு..... தியானம்..... டான்ஸ்....சத்சங்கம்....யோகா.... குண்டலினி..... என்று குத்தாட்டம் போடுவதற்கு போய்த்தொலையுங்கள்!!

இதை எழுதியவர்
லலிதா எஸ் நாராயணன்
பேஸ்புக்கில் அவர் பதிந்ததை அவரது அனுமதிப் பெற்று இங்கு பதிவிடப்படுகிறது. இவரைத் தொடர https://www.facebook.com/lalithasnarayanan/
இவரது கருத்துகள் 'நறுக்'கென்று இருக்கும் மனதில் பட்டதை தைரியமாக எடுத்துரைப்பவர்

அன்புடன்
மதுரைத்தமிழன்





14 comments:

  1. யோகா என்பது ஒரு பயிற்சி . அதை சாமியார்கள் தங்களுக்கே உரித்தானது போல் காட்டிக் கொள்கிறார்கள்

    ReplyDelete
  2. இதுவரை இந்த மடம், ஆசிரமம் வைத்து நடத்திய மயிரானுங்களால் இவ்வுலகில் நடைபெற்ற அதிசயமும், மாற்றமும் என்னென்ன!? என்று உங்களை நான் கேட்பேன்!!///

    pathil 0 taan..
    onnum avarkalal sola mudiyathu...
    ellam padicha alungataan ipper patta samiyar kuttaiyilapoy vilurathu...

    ReplyDelete
  3. நல்ல விழிப்புணர்வு கருத்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. சாட்டையடி கேள்வி தான்.
    அவரும் தைரியமாகத்தான் எடுத்துரைத்திருக்கிறார், அதனை நீங்களும் தைரியமாகத்தான் பகிர்ந்துக்கொண்டுள்ளீர்கள்.

    ReplyDelete
  5. பித்தத்திற்கு மருந்து தேடி
    அலைபவர்களை இந்த எத்தர்கள்
    மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்
    விழிப்புணர்வுப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இன்றைய காலகட்டத்தில் மதம் என்ற அமைப்பு அவசியமா என்ற கேள்வி ஓங்கி ஒலிக்கிறது.

    ReplyDelete
  7. அதான பார்த்தேன். இப்படி ஏக வசனத்தில் பேசும் ஸ்டைல் தமிழன் உடையது இல்லையே என்று!!!

    ReplyDelete
  8. மிகச் சிறந்ததொரு பதிவை எடுத்தாண்டதால்...........

    நீங்கள் மதுரைத் தமிழன் மட்டுமல்ல; மதுரத் தமிழனும்கூட.

    ReplyDelete
  9. சபாஷ் சரியான கேள்வி ''கல்''

    ReplyDelete
  10. முழிச்சிக்கோ முழிச்சிக்கோ......
    பிழைச்சுக்கோ பிழைச்சுக்கோ.....

    ReplyDelete
  11. 'பசி'பரமசிவம் சார்.
    உங்க site ல comment Box-ஐ open பண்ணுங்க.

    ReplyDelete
  12. Hi மதுரை தமிழன்,
    Your facebook page is not opening....
    Have you deleted your account?

    ReplyDelete
  13. தமிழனின் இடுகையா என்று முதலில் சற்று வியப்பாக இருந்தது! நடை! பின்னர் தெரிந்தது. நம் மக்கள் உணரும் நேரம் வந்தாலும் உணர மாட்டார்கள். எத்தனை எத்தனை ஆனந்தாக்களும், ஜிஜிக்களும் வந்தாலும் உணரப்போவதில்லை. மதிமயக்கத்தினால்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.