Sunday, November 9, 2014






நிருபர்கள் ஆகட்டும் அல்லது டிவிகாரர்கள் ஆகட்டும் நடிகர் நடிகைகளிடம் பேட்டி காணும் போது இந்த கேள்வியை கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள் அதுதாங்க நீங்க நடிக்க வரலைன்னா என்னவா இருந்திருபீங்க அல்லது ஆகி இருப்பீங்க ?



இதே கேள்வியை நமக்கு தெரிந்த தலைவர்களிடம் கேட்டால் அவர்களின் பதில் இப்படி இருந்திருக்குமோ என்ற கற்பணைதான் இந்த பதிவு





கலைஞர் : கொள்ளைக் கூட்டத் தலைவன் ஆகியிருப்பேன்.



மோடி : விளம்பர கம்பெனிக்கு தலைவானாகி இருப்பேன்.



ராமதாஸ் : மரம் வெட்டும் தொழிலாளியாக ஆகி இருப்பேன்.



ஜெயலலிதா : தலைமை ஆசிரியராக அல்லது ஹாஸ்டல் வார்டனாக இருந்திருப்பேன்.



விஜயகாந்த் ' டாஸ்மாக் ஊழியான இருந்து இருப்பேன்.



ஸ்டானின் : வில்லனாக நடித்து கொண்டிருப்பேன்.




வைகோ : குணச் சித்திர நடிகராக வந்து இருப்பேன்



கனிமொழி : தமிழ் ப்ளாக்ராக இருந்து கவிதைகள் எழுதி கொண்டிருப்பேன்.



அன்பழகன் : ஜட்ஜ்க்கு அருகில் நிற்கும் டர்பன் கட்டிய பீயூனாக இருந்துதிருப்பேன்.



பன்னீர் செல்வம் : அடிமையாகவே இருந்து இருப்பேன்.



மன்மோகன் சிங் : மெளன சாமியாராக இருந்து இருப்பேன்.



தமிழக காங்கிரஸ் தலைவர்கள் : விஜய் டிவியில் "அது இது எது' புரோகிராமில் வரும் காமெடி நடிகர்களாக ஆகி இருப்போம்



சினிமா உலகின் தலைகள்



ரஜினி : ரஜினியனந்தாவாக ஆகி ஆசிரமம் வைத்து நடத்தி இருப்பேன்



கமல் : விஜய்டிவியில் நீயா நானா புரோகிரம் நடத்திகிட்டு இருப்பேன்.




இதை எழுதும் போது அருகில் வந்த நண்பர் இதை படித்துவிட்டு என்னிடம் கேட்டார். மதுரைத்தமிழா நீங்கள் அமெரிக்கா சேல்ஸ்மேன் வேலையில் இல்லாமல் இருந்தால் இப்போது என்ன செய்துட்டு இருந்திருப்பீங்க என்று கேட்டார்



அதற்கு நான் எங்கப்பா என்ன கலைஞரா அல்லது எங்க அம்மா என்ன ஜெயலலிதாவா வீட்டில் உட்கார்ந்து சாப்பிட? அப்படி இல்லாததால் நான் தெருவில் உட்கார்ந்து பிச்சைதான் எடுத்து கொண்டிருப்பேன் என்று சொன்னேன்




அன்புடன்
உங்கள் அன்புக்குரிய
மதுரைத்தமிழன்

25 comments:

  1. ஹா ஹா... கடைசி பாரா எதிர்பாராதது....

    ReplyDelete
    Replies
    1. மத்தவங்களை மட்டும் கலாய்ச்சா தப்பு ஆனால் நம்மளை நாமே கலாய்ச்சுகிற மாதிரி மத்தவங்களையும் கலாய்ச்சிடனும்

      Delete
  2. படித்துக்கொண்டு வரும்போதே அந்த கடைசி கேள்விக்கான பதிலை நினைத்து விட்டேன். நீங்கள் அந்த வேளையில் இல்லாமல் இருந்தால் - தமிழகத்தில் சொந்த பத்திரிக்கையை நடத்தி,தலைவர்களை நக்கலடித்துக்கொண்டு, மனைவியிடம் அடி வாங்குவது பத்தாது என்று, தலைவர்களின் அடியாட்களிடமும் அடி வாங்கிக்கொண்டிருப்பீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க........

      Delete
    2. எனக்கொரு சந்தேகம் நம்ம தலைவர்கள்தான் ரகசியமாக பணம் கொடுத்து என் மனைவியைவிட்டு என்னை அடிக்கச் சொல்லுகிறார்களோ என்று..

      Delete
    3. அட உஷா மேடம் வூட்டா நீங்களே என்னை அடியாட்களிடம் என்னை பிடித்து கொடுத்து விடுவீங்க போல இருக்கே?


      மேடம் உங்கள் வரவு அத்திப்பூ பூத்தாற் போல இருக்கிறது..

      Delete
  3. கடைசி வரி...., நெத்தி அடி.....

    ReplyDelete
    Replies
    1. என்னப்பா எல்லோருமே அடி அடி என்று சொல்லி இந்த தளத்தை கலவர தளமாக்கிவிடுவீர்கள் போல இருக்கிறதே

      Delete
  4. கலக்கலா யோசிச்சு எழுதி இருக்கீங்க! கடைசியா சொன்ன பஞ்ச் சூப்பர்! ஹாஹாஹா! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இதுகெல்லாம் நம்ம தலைவர்களுக்குதான் நன்றி சொல்ல முடியும்.. அவங்க எல்லாம் இல்லாவிட்டால் இப்படி எல்லாம் எழுத முடியாதே

      Delete
  5. நல்ல வேளை....

    பிச்சையிடுபவர்கள் தப்பித்தார்கள்......

    ReplyDelete
    Replies
    1. பிச்சை போடுபவர்களை நீங்கள் பார்த்தால் இந்த மதுரைத்தமிழன் தலையில் ரெண்டு போடு போட்டு போங்க என்று சொல்லும் ஆட்களாக இருப்பீர்கள் போல இருக்குதே

      Delete
  6. ஏன் பாஸ்!!! பத்திரிகைகளில் லே அவுட் ஆர்டிஸ்ட் பணியில் தொடங்கி காம்பயரிங் வரை எக்கசெக்கமான திறமைய வச்சுக்கிட்டு என்ன ஒரு தனடக்கம்!!!!!!!! அதிலும் வாய் ஓயாமல் பேசி டி.வி லா பாட்டு போடுவாங்க பாருங்க அதில் மட்டும் செலக்ட் ஆனீங்க, கமர்சியல் ப்ரேக் லா கூட பேசிபேசியே கல்லா கட்டிருப்பிங்க. விஜய் டி.வி கொடுத்து வச்சது அவ்ளோ தான். ஹ்ம்ம்ம்.......

    ReplyDelete
    Replies
    1. திறமை ஏதும் இல்லாதவனிடம் திறமை நிறைய இருக்குதுன்னு சொல்லி நல்லா ஏத்திவிட்டுடுட்டு ஆளை கவுக்கலாம் என்று பார்க்கிறீங்களா என்ன? மக்கா நான் என்ன தப்பு பண்ணுனேன் நீங்க எழுதுற கவிதையை கூட சூப்பர் மிக அருமையாக இருக்கிறது என்றுதானே சொல்லிட்டு போறேன். அது தப்பா என்ன?

      Delete

  7. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நண்பரே எல்லா பதிவும் சிறந்த பதிவுகள் அல்ல அதனால் இந்த டெம்லேட் கருத்து இனி வேண்டாமே

      Delete
    2. அவர் இந்த பதிலை படிப்பார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை!

      Delete
  8. இவ்வளவு சொன்ன நீங்க .. நம்ப பரதேசி அண்ணன் என்ன ஆகி இருப்பார்ன்னு சொல்லவே இல்லையே...?

    ReplyDelete
  9. பரதேசி அண்ணனை பற்றி தான் கேட்டேன். அதே சாக்கில் என்னை தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  10. ஹா... ஹா...
    கடைசியில் அதிரடி..

    ReplyDelete
  11. Ending puch nice.vaikko is better commend.

    ReplyDelete
  12. தலைவர்களுக்கு சொன்னது எல்லாம் சரிதான்
    உங்களுக்குத்தான் துக்ளக் போல ஒரு
    பத்திரிக்கை நடத்திக் கொண்டிருப்பேன் எனச்
    சொல்லி இருக்கலாம்

    ReplyDelete
  13. தமிழ் நாட்டில் காலடி வைக்க மனமில்லையா ,ஒரு வேளை,அங்கேய கிரீன் கார்டு வாங்கிட்டீங்களா :)
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. எனது இந்திய பாஸ்போர்ட் பல ஆண்டுக்குமுன்பு பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது, இப்போது நான் அமெரிக்க கீரின்கார்டு கோல்டர் அல்ல அமெரிக்க குடிமகன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.