Wednesday, December 10, 2014


பகவத்கீதை தேசிய நூலானால் பைபிள் குரான் அழிந்துவிடுமா அல்லது மதிப்புதான் குறைந்துவிடுமா?

இந்திய அரசாங்கம் பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்கப்போவதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதை அறிந்தவுடன் வீணாப் போன அரசியல் தலைவர்கள் கூக்குரலிட ஆரம்பித்துவிட்டனர்.


இந்தியா மதச் சார்பற்ற நாடுதான் . ஆனாலும் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றும் மதத்தை சார்ந்த நூலை தேசிய நூலாக அறிவிப்பதானால் தப்பு ஒன்றுமில்லைதான் என்பதுதான் என் கருத்து

சரி அப்படி அறிவித்ததனால்தான் என்ன? அதனால் குரான் , பைபிள் போன்ற நூல்களின் மதிப்பு இறங்கிவிடவாப் போகிறது அல்லது அதன் விற்பனைதான் பாதிக்கப் போகிறதா என்ன? ஒன்றுமில்லைதானே அப்படியென்றால் மற்ற மதத்தினவர்கள் ஏன் பதட்டப்பட வேண்டும்.

எப்ப பதட்டப்பட வேண்டும். தேசிய நூலை படித்து மனப்பாடம் படித்து ஒப்பித்தால்தான் அரசாங்க வேலை , அரசு உதவி என்று சட்டம் கொண்டுவந்தால் அப்போது பதட்டப்படுவதில் எதிர்ப்பதில் அர்த்தம் உண்டு. ஆனால் அப்படிபட்ட சுழல் இல்லாததால் நாம் கவலை ஏதும் கொள்ளத் தேவையில்லைதானே.

இந்து மதத்தில் உள்ளவர்கள் அனைத்து பேரும் பகவத்கீதையை படித்தது இல்லை மிக குறைந்த மக்களே படித்து இருப்பார்கள், படிக்கச் செய்வார்கள். இப்படி அறிவித்தனால் படிக்காதவர்கள் அனைவரும் படிக்கப் போகிறார்களா என்ன? நிச்சயம் இல்லையே.

அதுமட்டுமல்லாமல் இந்த நூல் எல்லோர் வீட்டிலும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சட்டம்கிட்டம் போடவில்லையே அப்ப என்ன கவலை அப்படியே சட்டம் போட்டிருந்தால் கூட ஒரு நல்ல புத்தகத்தை வீட்டில் வைத்திருப்பதில் தவறு ஏதும் இல்லையேதானே. கண்ட கண்ட கவர்ச்சி புத்தகங்கள் கதைப் புத்தகங்கள் என்று வாங்கி வீட்டில் வைத்து இருப்பதை காட்டிலும் இந்த மாதிரி நூலை வைத்திருப்பதில் என்ன தவறு?


மக்களே இந்திய தேசிய மலராக அறிவிக்கப்பட்டது தாமரைதான் அதனால் பெண்கள் தாமரையையா தலையில் அணிந்து கொள்கிறார்கள் இல்லையே மல்லிகையைத்தான் அணிந்து கொள்கிறார்கள்? அது போல புலியை நேஷனல் விலங்காக அறிவித்து உள்ளார்கள் அதனால் எல்லோர் வீட்டிலுமா அதை வளர்க்கிறார்கள் இல்லையே அவர்களுக்கு பிடித்த பூனை நாய் ஆடு மாடுகளைத்தானே வளர்க்கிறார்கள். அது போல இதையும் எளிதாக எடுத்து கொண்டு செல்லுங்கள்

இறுதியாக நான் சொல்லிக் கொள்வது நம் சகோதரருக்கு ஏதாவது ஒரு காரணத்திற்காக நேஷனல் லெவலில் அவார்ட் கிடைத்தால் நாம் சந்தோஷப்படுத்தானே செய்வோம் அது போல நம் சகோதர மதத்தை சார்ந்தவர்களுக்கு கிடைத்த அவார்டாக இதை நினைத்து பெருமை கொள்வோமே!

இதுதான் சரி என்று என் மனதிற்குபடுகிறது. உங்கள் மனதிற்கு தோன்றுவதை சொல்லி செல்லுங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : பகவத்கீதை தேசிய நூலாக அறிவித்தற்கு ஏதிர்ப்பு தெரிவிக்கும் கலைஞர் தமிழக அரசு சின்னமாக கோவில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அல்லது தன் ஆட்சி காலத்தில் அதை மாற்ற முயலாமல் இருந்தது ஏன்? அப்படி கோயில் சின்னம் இருப்பதனால் மாற்று மதத்தினர் மனது புண்பட்டுவிட்டதா என்ன? தமிழகத்தில் இருக்கும் மாற்று மதத்தினர் இதை ஏற்றுக் கொண்ட போது இந்தியாவில் வாழும் மாற்று மதத்தினரும் பகவத்கீதையை தேசிய நூலாக ஏற்றுக் கொண்டு தமிழர்களை போல ஏன் வாழக் கூடாது

16 comments:

  1. எதிலாவது அரசியல் செய்வதிலேயே அரசியல்வாதிகள் குறியாக இருப்பார்கள்! இந்தியா மதச்சார்பற்ற நாடுதான். அதனால் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்பதால் மற்ற மதங்களோ நூலோ பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை! மற்ற தேசிய அடையாளங்கள் போல இதுவும் ஒன்றுதான். தேசிய விலங்கு புலி அருகி வருகிறது. அதைப்போலவே கீதையை படிப்பவர்களும் அருகிவிட்டார்கள். கீதையை இப்படி தேசிய நூலாக அறிவித்தாலாவது வருங்கால தலைமுறைக்கு இப்படி ஒன்று இருந்தது என்று தோன்றும். கலைஞர் எப்பொழுதும் வெட்டி அரசியல் செய்வதில் வல்லவர். இதிலும் அதையே செய்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. கலைஞர் வெட்டி அரசியல் செய்வதில்லை அவர் வெற்றி அரசியலை செய்ய நினைக்கிறார் அதில் அவ்வப் போது வெற்றியும் காண்கிறார் ஆனால் அந்த வெற்றிகள் அவரது குடும்பத்திற்கு மட்டும் நன்மை பயக்கும்

      Delete
  2. இது எல்லாம் ஓகே தமிழா.. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. பாபா ராம்தேவிர்க்கு பாதுகாப்பு தருவோம்.. சமகிருதம் எல்லாரையும் படிக்க சொல்வோம், தாஜ் மகாலை மீட்ப்போம்... வெளிநாட்டில் முடங்கி கிடக்கும் சுரங்கங்களை மீட்க்க நம் நாட்டில் நம் நண்பர்களுக்கு கடன் கொடுப்போம் .. இப்படியெல்லாம் சொல்லி இருந்த.. இன்னும் கூட அதிக சீட் பெற்று இருக்கலாமே..

    இவங்க அடுத்த வாரமே... வீட்டுக்கொரு .... வீதிக்கொன்றுன்னு ஏதாவது சொல்லுவாங்க. ஆட்சிக்கு வந்து 6 மாதத்திற்கு மேல் ஆகி விட்டது.. ஒரு நல்ல காரியம் ஏதாவது சொல்லுங்க பாப்போம்..

    ReplyDelete
    Replies
    1. இந்திய தலைவர்களிடம் இருந்து நல்ல காரியத்தை எதிர்பார்ப்பது சூரியன் மேற்கே உதிக்கும் என்று எதிர்பார்ப்பது போலதான்

      Delete
  3. தங்களின் ஒவ்வொரு வரியையும் நான் ஆதரிக்கிறேன்.
    நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் உதாரணங்கள் அனைத்தும் நம் தமிழக தலைவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். இருந்தும் அவர்கள் இப்படி கூக்குரலிடுவதற்கு காரணமே அவர்கள் மக்களிடம், "நாங்கள் இன்னும் அரசியல்வாதிகளாகத்தான் இருக்கிறோம், எங்களை மறந்து விடாதீர்கள்" என்று தெரிவிப்பதக்காகத் தான்.

    ReplyDelete
  4. மிகச் சரியான நடு நிலைப்பதிவு
    டிஸ்கி மிகப் பிரமாதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கோவில் கொடியவர்களின் கூடாரம் என்று விட்டு விட்டிருப்பாரோ!
    ஒரு வேளை, பராசக்தியில் அவர் எழுதிய வசனம் ஞாபகம் வந்திருக்கும்!

    ReplyDelete
  6. கீதை தேசிய நூலானால், அந்த கருமத்தை விமரிசிப்பது தேசத்துரோகம் என்பார்களே?

    ReplyDelete
  7. மன்னிக்கவும். என்னால் இதை ஏற்கவே முடியாது. அந்த சின்னங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டபோது அப்படி ஒன்று உருவாக்கபட்டிருகிறது என்பது வெகுஜனத்திற்கு தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. இன்று போல் அன்று கருத்து சுதந்திரம் இல்லை. பெருபாலானவர்களின் நூல், தேசியநூல் என்றால் மானகெட்ட தனமாக ஏன் இன்று மதசார்பற்ற நாடு என்று சொல்லிகொள்ளவேண்டும். இந்து நாடு என்று அறிவித்து விடவேண்டியது தானே! அமேரிக்காவின் தேசிய பறவை கழுகு! எல்லோர் வீட்டிலும் வளர்கிறார்களா என்ன? ஒவ்வொரு சின்னமும் ஒரு குறியீடு! தாமரை என்பதே பலவேறு அளவான இதழ்கள் ஒன்றாய் இருக்கும்போது அழகாக இருக்கும் என்ற வேற்றுமையில் ஒற்றுமை காணும், சிறிய இதழ்களும் இருந்தால் தான் தாமரை அழகு எனும் குறியீடுதான். புலி நம் நாட்டில் மட்டுமே பெருவாரியாக இருந்த காலகட்டத்தில் நம் பெருமையாக அது பெருமையாக தேசியவிலங்காக அறிவிக்கப்பட்டது. இப்படிதான் அறிவிப்போம். புடிக்காதவன் உன் மதம் பெருவாரியாக இருக்கும் நாட்டுக்கு போ என்றும் மற்றொரு மதவெறியாகதான் இது எனக்கு தெரிகிறது. கருத்து பி.ஜே.பி க்கு தான். உங்களை புண்படுத்த அல்ல.

    ReplyDelete
    Replies
    1. நான் என் மனதில் பட்டதை சொல்லுகிறேன் ஆனால் அதில் தப்புகள் இருக்கலாம் ஆனால் அடை யாருமீதும் திணிப்பதில்லை. சில சமயங்களில் மாறுபட்ட கருத்டு சொல்லும் போது அது மிகவும் சரியாக இருக்கும் அதன் பிறகு நான் எனது கருத்தை மாற்றிக் கொள்வேன் அதனால் நீங்கள் மட்டுமல்ல எல்லோரும் மாறுபட்ட கருத்தை சொல்லாம் விமர்சிக்கலாம் அதை நான் தப்பாக எடுத்து கொள்ள மாட்டேன். கவலை கொள்ளாமல் கருத்துகளை பதியுங்கள்

      Delete
    2. athuthan onnum ahaporathu illana apm ethukunga national booka arivikanun ?

      Delete
  8. தமிழா நமது நாடு செக்குலர் நாடு என்று சொல்லிக் கொண்டு ஒரு மதத்தைச் சார்ந்த நூலை மட்டும் இப்படிச் சொல்லுவது சரியல்லவே. எந்த மதத்தைச் சார்ந்த நூலையும் இப்படி அறிவிக்காமல் இருப்பதே நாம் செக்குலர் என்று சொல்லிக் கொள்ள முடியும்....

    ReplyDelete
  9. அனைத்திலும் அரசியல்!....

    ReplyDelete
  10. தமிழ் மொழி செம்மொழி என்று அறிவிக்கப் பட்டதால் என்ன நன்மை தமிழுக்கு கிடைத்தது என்று தெரியவில்லை . அதேபோல பகவத் கீதை தேசிய நூலாக அறிவிக்கப் படுவதால் கூடுக பெருமை ஏதும் அதற்கு கிடைக்கப் போவதுமில்லை.நீங்கள் சொல்வது போல பைபைளுக்கோ குர்ரானுக்கோ பெருமை நிச்சயம் குறையப் போவதுமில்லை. அடுத்த் ஆட்சி வந்து மற்ற மத நூல்களையும் தேசிய நூல்களாக அறிவிக்கும் . எந்த நூலாக இருந்தாலும் அதில் ஆர்வம் உள்ளவர்களே விரும்பிப் படிக்க முடியும். படித்தாலும் யாரும் அதைப் பின்பற்றப் போவதுமில்லை. வாழக்கை நெறிமுறையை சொன்ன திருக்குறளை படித்து அறிந்தவர் பலபேர் உண்டு ஆனால் உண்மையில் அதன் நெறிப் படி வாழிகின்றோர் யாருமில்லை.

    ReplyDelete
  11. ஏதோ இந்த நாடு உங்கள் பாட்டுச் சொத்து என்பது போலவும், அதில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,அதைக் கேள்வி கேட்கக் கூடாது என்றும் கூறி உள்ளது ஒரு திமிர் வாதம். நாட்டில் இறந்துபோன வடமொழி ஒன்றுதான் உயர்மொழி எனக் கூறுவது, இறந்த புதைக்கப்பட்ட குழிப் பிள்ளையைத்தோண்டி மறுபடியும் இழவு கொண்டாடுவது போல் உள்ளது.
    இந்தியாவில் வேறு உயர்ந்த நூலோ மொழியோ இல்லையா? இல்லை என்பதை எப்படி முடிவு செய்தார்கள்.குழு அமைத்தார்களா? பரிந்துரைகள் வரவேற்றார்களா? கேவலமான நரித்தனம்.
    திருக்குறள் இந்திய நூல்
    2300 ஆண்டுகள் பழைமையானது
    தமிழ் பழைமையான மொழி
    உயிரோட்டமுள்ள வாழும் மொழி
    கீதை திருக்குறளை விட 1000 ஆண்டுகள் பிற்பட்டது
    கீதையின் கருத்துக்கள் அனைத்துமே திருக்குறளை ஒட்டி, வேதக் கருத்துக்களுக்கேற்ப, திருத்தி எழுதப்பட்டதே.
    இதற்கான விளக்கம் என் வலைப் பதிவில்
    www.philosophyofkuralta.blogspot.in

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.