Sunday, December 28, 2014





விஜயகாந்துடன் ஒரு மினி பேட்டி
மதுரைத்தமிழன் : அண்ணே வணக்கமண்ணே!
விஜயகாந்த் :  வாடா தம்பி வாடா செளக்கியமடா? என்ன விஷயமா என்னை பார்க்க வந்தே
மதுரைத்தமிழன் : அண்ணே உங்ககிட்ட ஒரு சின்ன பேட்டி எடுக்கலாமுன்னு வந்தேன்.
விஜயகாந்த் : டேய் தமிழா பேட்டி சரி. ஆனா உன் முந்தைய பதிவில் மோடியை பேட்டி எடுத்து கலாய்த்த மாதிரி என்னை கலாய்க்கமாட்டேல. அப்படி ஏதாவது பண்ணினால் தொலைச்சு புடுவேன்

மதுரைத்தமிழன் : என்ணண்ணே என்னை பார்த்து இப்படி கேட்டுட்டீங்க நாமெல்லாம் ஒரே ஊர்க்காரங்கண்னே உங்களை போய் நான் கலாய்ப்பானானே அண்ணே
விஜயகாந்த : சரி கேள்வியை கேளு
மதுரைத்தமிழன் : அண்ணே தமிழக அரசியலைப் பற்றி கருத்து சொல்லுங்கண்ணே
விஜயகாந்த் : டேய் தமிழா நாந்தான்  கடந்த ஒரு மாத காலமாக மலேசியாவில் இருந்தேனே அதனால் தமிழ் நாட்டு நிலவரம் எல்லாம் எனக்கு ஒன்று தெரியவில்லை என்று பேட்டி கொடுத்து இருந்தேனே  அதை நீ படிக்க வில்லையா என்ன?
மதுரைத்தமிழன் : ஓ அப்படியா அண்ணே... அது எனக்கு தெரியாமல் போயிடுச்சு அண்ணே
சரி அப்ப மலேசியா நாட்டு அரசியல் பற்றி ஏதும் சொல்லுங்கண்ணே.
விஜயகாந்த: டேய் அங்க அரசியல் பேச்சு எல்லாம் அந்த நாட்டு மொழியில் பேசிக்கிறாங்கடா அதனால எனக்கு ஒன்று தெரியலைடா
மதுரைத்தமிழன் :(மைண்ட் வாய்ஸ் : ஆமாம் மொழி புரிந்தாலும் மப்பூல இல்லாமல் இருந்தாதானே எல்லாம் புரியும்.) நீங்க சொன்னது மிக சரின்னே இதற்குதான் நீங்க முதலமைச்சார வந்து உலகத்தில் எல்லா இடங்களிலும் தமிழ் மொழிதான் முதன்மையான மொழியாக இருக்கணும் என்று சட்டம் கொண்டு வந்துடுங்கண்ணே

கலைஞருடன் ஒரு மினி பேட்டி

மதுரைத்தமிழன் : தலைவரே வணக்கம்
கலைஞர் : வாய்யா மதுரை தமிழா என்ன இந்த பக்கம்
மதுரைத்தமிழன் : தலைவரே உங்களிடம் ஒரு மினி பேட்டி எடுக்கலாம் என்று வந்தேன்
கலைஞர் : (மைண்ட் வாய்ஸ் : இந்த இழவு எடுத்தவன் என்ன கேள்வி கேட்க போகிறானோ ) தமிழா நானே கேள்வி பதில் எழுதி வைச்சுருக்கேன் இந்த அதை எடுத்து போய் கலைஞருடன் பேட்டி என்று போட்டுக் கொள்
மதுரைத்தமிழன் : நோ நோ தலவரே அந்த கதை எல்லாம் என்னிடம் வேண்டாம் நான் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும்
கலைஞர் : மைண்ட் வாய்ஸ் : இவ நம்ம தாலிய அறுக்காமல் விடமாட்டான் போலிருக்கே ) சரி கேள்விகளை கேளு தமிழா
மதுரைத்தமிழன் : கட்சி தேர்தல் எல்லாம் எப்படி போய் கொண்டிருக்கிறது
கலைஞர் : மிகவும் அமைதியாக ஜனநாயக முறைப்படி எந்த வித அடிதடி இல்லாமல்  போய்க் கொண்டிருக்கிறது.
மதுரைத்தமிழன் : ஸ்டாலின் ஆட்களை சிறிது ஒரம் கட்டியதாக செய்திகள் வருகின்றதே அது உண்மையா?
கலைஞர்: அது எல்லாம் நாடகமப்பா? ஸ்டாலினை ஒரம் கட்டினால் அவர் என்னை ஒரம் கட்டி விடுவாரப்பா? நான் ஸ்டாலினுக்கு பொது செயலாளர் பதவியை அறிவிக்கலாம் என்று இருக்கிறேன் அதுதான் உண்மையப்பா
மதுரைத்தமிழன் : பொது செயலாளர் பதவி அன்பழகன் வகிக்கும் பதவி ஆச்சே. அப்ப அவரை ஒரங்க கட்டுகிறீர்களா என்ன?
கலைஞர் : இல்லையப்பா அவருக்கு வயது ஆகிவிட்டது முன்பு போல அவரால் ஒடி ஆடமுடியவில்லை அதனால் அவருக்கு வேறு ஒரு பதவியை கொடுத்து அவர் வகித்த பொது செயலாளர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுக்க முடிவு எடுத்து இருக்கிறேன்
மதுரைத்தமிழன் : அப்படி என்ன புதிய பதவியை அன்பழகனுக்கு கொடுக்க போகிறீர்கள்?
கலைஞர்: அது தானப்பா முன்னால் பொது செயலாளர் என்ற பதவியை தரப் போகிறேன்
மதுரைத்தமிழன் : தலைவரே எனக்கு ஒரு சந்தேகம் அன்பழகனால் ஒடி ஆடி முடியாததால் அவர் பதவியை ஸ்டாலினுக்கு தருகிறேன் என்று சொல்லுறீங்க அட்லீஸ்ட் அன்பழகனாவது வீல் சேரில் செல்லாமல் நடந்தாவது செல்கிறாரே. நீங்கள்தான் முன்பு போல ஒடியாடி ஏன் நடக்க கூட முடியாமல் வீல் சேரில் செல்லுகிறீர்கள் அப்படி பார்த்தால் ஸ்டாலினுக்கு கட்சி தலைமை பொறுப்பை தருவதுதானே நியாயம்.
கலைஞர் : (மைண்ட் வாய்ஸ் இப்படி ஏடகூடாமாக எவனாவது கேள்வி கேட்பான் என்றுதானே நானே கேள்வி பதில் எழுதி வெளியிடுகிறேன்) ஏலேய் அங்க யாருடா! இந்த மதுரைத்தமிழனை பிடித்து வெளியில் தூக்கி ஏறியுங்கடா இவன் பாஜாக அனுப்பிச்ச ஆளா இருப்பாண்டா கட்சியில் குழப்பம் விளைவிக்க வந்துட்டாண்டா)

அன்புடன்
மதுரைத்தமிழன்
Dear Readers, It's been a great year! Thanks for being a part of it.


3 comments:

  1. **இவன் ப.ஜ.க ஆளா இருப்பான்டா** என்னே கலைஞரின் சாமர்த்தியம்...எப்டி கண்டுபிடிச்சார் பார்த்தீங்களா:)))

    ReplyDelete
  2. உங்களை பேட்டி எடுக்கிறதுக்கு, உங்க மனைவி ரெடியாக இருக்காங்களாம், ஆனா நீங்க தான் பேட்டி தர மாட்டேன்னு சொல்றீங்களாமே, அப்படியா?
    ஒழுங்கா வீட்டு வேலை செய்யலைன்னாத்தான் பயப்படனும், பேட்டி கொடுக்கிறதுக்கு கூடவா பயப்பிடணும்

    ReplyDelete
  3. கலாய்க்க மாட்டேன்னு சொல்லி செமையா கலாய்ச்சி எழுதி இருக்கீங்க! ஹாஹா! பாராட்டுக்கள்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.