Tuesday, December 16, 2014
 பேஸ்புக்கில் படித்ததில் எனக்கு  பிடித்தது ( சிரிக்க & சிந்திக்க 2 பதிவுகள் )


 ஆல் கடவுளும் எஸ்கேப்.

ஒரு பெண் புருஷனோட சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய மலை உச்சிக்கு போய்விட்டாள் .
அங்கே இருந்து கீழே பார்த்ததும் அவளுக்கு பயம்.அப்புறம் குழந்தைகள், அப்பா அம்மா, குடும்ப கவலை வேறு இருந்தாலும் புருசன் மீது செம கோபம்.தற்கொலை செய்யாமல் அங்கேயே உட்கார்ந்து விட்டாள் . ஆனாலும் அவள் உதடுகள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

இரண்டு நாளாக அவள் அங்கேயே அமர்ந்திருந்திருந்தால் அவள் யாரை நினைத்து வேண்டிக் கொள்கிறாள் என்று சிவன் பிரம்மா விஷ்ணு மூவருக்கும் ஒரே குழப்பம்.

அவள் யாரை நினைத்து தவம் செய்கிறாள் என்று. குழப்பத்தை தீர்த்து கொள்ள பூலோகம் வருகிறார்கள். அவள் உதடு அசைவதை வைத்து தன்னைத்தான் நினைத்து தவம் செய்கிறாள் என்று மூன்று கடவுளும் சண்டை போட ஆரம்பித்தார்கள்.

இவர்களின் தீராத சண்டையை கண்டு நாரதர் அவர்கள் முன் தோன்றி ஒரு யோசனை சொன்னார் . " நான் போய் அவளை எட்டி உதைக்கிறேன் யார் பெயரை சொல்லி கீழே விழுகிறாளோ அவர்கள் சென்று அவளை காப்பாற்றி,அவள் கேட்கும் வரங்களை கொடுங்கள்" என்றார்.

இந்த யோசனை மூவருக்கும் நல்லதாய் தோன்ற அதை ஆமோதிக்கிறார்கள். நாரதரும் அவள் பின்னால் சென்று அவளை எட்டி உதைக்கிறார். அவள் மலையிலிருந்து கீழே விழும் போது கத்தினாள் "எந்த கம்மணாட்டி பரதேசி பயடா என்னை எட்டி உதைச்சது"..

அட் எ டைம்ல ஆல் கடவுளும் எஸ்கேப்.

இதனால நான் என்ன சொல்ல வரேன்னா பெண்களோட மனசுல உள்ளதை ஆன்டவனாலும் கூட தெரிஞ்சிக்க முடியாது


இந்த ஜோக்கில் வந்த பெண்மணி என் மனைவி இல்லை என்று சொன்னால் நீங்க நம்பவா போறீங்க
 

ஒரு ஊருல "அப்படி, இப்படி"அப்படின்னு ரெண்டு பேர் இருந்தாங்க
ஒரு நாள் அப்படி இப்படி கிட்டே, "எப்படி இருக்கீங்க"ன்னு கேட்டார்.
இப்படி "எப்படியோ இருக்கேன்"னார்
அதுக்கு அப்படி, "இப்படி சொன்னா எப்படி? அப்படி இருக்கேன் இல்லன்னா ..இப்படி இருக்கேன்னு சொல்லுங்க"ன்னு சொன்னாரு.
உடனே இப்படிக்கு அப்படி ஒரு கோவம்.
"நான் எப்படி இருந்தா உனக்கென்ன"ன்னு கேட்டார்.
அதுக்கு அப்படி, "அப்படியெல்லாம்ஒன்னுமில்லீங்க... சும்மா எப்படி இருக்கீங்கன்னு கேட்டேன்" அப்படின்னு சமாதானப் படுத்தினார்.
அப்புறம் எப்படியோ அப்படியும் இப்படியும் நண்பர்கள் ஆகிட்டாங்க.அதெல்லாம் விடுங்க...
நீங்க எப்படி இருக்கீங்க??? 
 கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!

இன்னுமொரு 50 வருடங்கள்
கழித்து வாங்கியிருக்கலாம்...

🔭அதற்குள் நாடுமுழுவதும் உள்ள
அத்தனை நதிகளையும்
இணைத்துவிட்டிருப்பான்
அந்த வெள்ளைக்காரன்,
நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே!

நாடு முழுவதும் எப்போதோ
புல்லட் ரயில் வந்திருக்கும்,
நாம் இப்போது தான் மீட்டர்
கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்!

🚇ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த
வெள்ளைக்காரன்,
நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டெண்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!

🏤நாடு முழுவதும் வெள்ளைக்காரனால்
கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான
கட்டிடங்களும் பாலங்களும்
அணைகளும் அப்படியே இருக்க
முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது!

நாட்டிற்கு வருமானத்தை தரும்
சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான்
வெள்ளைக்காரன்!

பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்விநிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான
கல்விமுறை வந்திருக்கும்!
நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும்,
இடஒதுக்கீட்டுக்கும்
போராடிக்கொண்டு இருக்கிறோம்!

வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட
அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி
வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக்
கொண்டிருக்கிறது,
அடித்து வாங்க சக்தியில்லாமல்
அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்!

மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம்
வாங்கினோம் மக்களுக்கு வாங்க
தவறிவிட்டோம் !

120 கோடி மக்கள் தொகையில்
70 கோடி வறுமைக்கு கீழ்!
பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம்
70 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று!
இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க
பயன்படுவதில்லை நம் நாட்டு ஏழைகள் அங்கு குடியேறி இருப்பதால்!

🇮🇷எப்படி குத்திக்கொள்ளமுடியும்
கொடியை,
ஒவ்வொரு முறை குத்தும்போதும்
இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது!

🗿நம்நாட்டு பெண்களை கூட்டம்
கூடி கற்பழிக்கும் வரை,
நம்நாட்டு குழந்தைகள் தெருவில்
நின்று பிச்சைகேட்கும் வரை,
நம்நாட்டு பெண்சிசுக்கள்
கள்ளிப்பாலில் சாகும்வரை
நமக்கெல்லாம் அருகதையில்லை

சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள!
ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும்,
அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும்
மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும்
என்றால் நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம் நல்ல காலம் வரும்வரை!

டிஸ்கி : இந்த இரு பதிவுகளையும் பலர் பகிர்ந்து இருந்தனர் ஆனால் அதில் ஒன்றில் கூட அதை எழுதியது யாரு என்று கூட கூறிப்பிடபடவில்லை.

அதை ஒரிஜனலாக எழுதியவர் யாராக இருந்தாலும் அவருக்கு என் நன்றிகள்

அன்புடன்
மதுரைத்தமிழன்
என்னங்க அரசியல் பதிவா இருக்கிறது என்று நண்பர் விசு கேட்டு கொண்டதற்குகிணங்க  இந்த பதிவு.


13 comments:

 1. தமிழா... இதிலேயும் பாதி அரசியல் வாடையா தானே இருக்கு. இருந்தாலும் ரசித்து சிரித்தேன்.

  ReplyDelete
 2. எல்லா சிரிப்புமே நல்லா இருந்துச்சு .... 'ஆல் கடவுளும் எஸ்கேப் ' மிக பிரமாதம்...... :-(

  ReplyDelete
 3. ஹஹஹஹ் செம தமிழா! ரொம்பவே ரசித்து சிரித்தோம். ஆம் சுதந்திரம் நாம் பெறவில்லை என்பது உண்மையே!

  ReplyDelete
 4. நான் இலங்கையன், இந்தச் சுதந்திர விடயத்தில் எங்கள் நாடுபற்றியும் இதே சிந்தனையே எனக்கும்!
  நல்ல தொகுப்பு!

  ReplyDelete
 5. அருமையான தொகுப்பு நண்பரே

  ReplyDelete
 6. இந்தியா, சுதந்திரம் பெற்றும் அடிமை நாடு தான்.

  ReplyDelete
 7. ரசிக்க வைத்தது .....இப்படியே தொடருங்க :)
  த ம 4

  ReplyDelete
 8. அருமையான தொகுப்பு.... ரசிக்க வைத்தது... வெள்ளைக்காரன் பற்றியது சிந்திக்க வைத்தது.

  ReplyDelete
 9. சூப்பர் தொகுப்புகள்.
  அந்த மனைவி ஜோக் கலக்கல். எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்லி மாட்டிக்கிட்டீங்களே நண்பரே...

  ReplyDelete
 10. அட!! ஒருபக்கம் செம ஹுமர்:)) !! மறுபக்கம் செம ட்ராஜிடி:(( !!
  எப்படியோ நீங்கள் பல்சுவை பதிவர்னு நிறுவிட்டீங்க தல:))
  எங்க வருணை காணோம்??

  ReplyDelete
 11. இடதுபுறம் உள்ள ஜோக்குகள் அனைத்தும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தன. நன்றாகவே சிரித்தேன். வெள்ளைக்காரன் பற்றியும், டெண்டர் முறையைப் பற்றியும் இன்னும் பேசலாம்.

  பகிர்வுக்கு நன்றி.
  த.ம.4

  ReplyDelete
 12. உங்களுடைய இப்பதிவினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். தங்கள் தகவலுக்காக!

  http://blogintamil.blogspot.in/2014/12/blog-post_31.html

  நட்புடன்
  ஆதி வெங்கட்

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.