Wednesday, December 28, 2011


தமிழ் திரைப்பட கூத்தாடிகளின் போலி முகங்கள்



முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மிக மோசமான விளைவுகளை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. அரசியலுக்கு அப்பால் நின்று அனைவரும் தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுத்து கொண்டு வருகின்றனர்.  கேரளாவின் பொய்ப் பிரச்சாரம், விஷமத்தனம், தமிழகத்தின் உரிமையை பறிக்க அவர்கள் நடத்தும் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும் பணியில் தாங்களாகவே முன்வந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னணி இயக்குநர்கள் பலரும் இதில் அக்கறை காட்டுகின்றனர்.

ஆனால் தமிழக நடிகர்களோ இந்த விஷயத்தை உலகின் மூலையில் உள்ள ஏதோ ஒரு சிறு கிராமத்தில்  நடக்கும் ஒரு சிறு நிகழ்ச்சியாக கருதி வாய் மூடி  இமய மலை அடிவாரத்தில் இருக்கும் யோகிகள் போல அமைதிகாத்து கொண்டிருக்கின்றனர்..



இந்த மெளன யோகி நடிகர்களுக்கு தமிழகத்தில் தேர்தல் வரும் ஒர் ஆண்டுகளுக்கு முன்புதான் முதலைமச்சராகும் ஆசையில் மெளனத்தை கலைத்து சமுக பிரச்சனைகளுக்காக ஆதரவு தருவார்கள். உணர்ச்சி வசப்பட்டு பேசுவாரகள்.



இந்த கூத்தாடிகளை நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் முல்லை பெரியாறு விஷயமாக தமிழ் மக்களுக்கோ அல்லது கேரளாகாரர்களுக்கு ஆதரவாக பேச வேண்டாம். நியாம் எந்த பக்கம் உள்ளதோ அதை ஆதரித்து பேசுங்கள். இதை செய்ய உங்களால் முடியுமா?



நிச்சயமாக உங்களால் முடியாது ஏனென்றால் படத்துக்கு படம் அரிதாரம் பூசி தினம் நடித்து வரும் நீங்கள் வேசதாரிகளாகவே மாறிவிட்டீர்கள். அதனால் உங்களால் நியாம் எது என்று உங்களால் அறிய முடியாது. உங்களுக்கு தெரிந்ததெல்லாம் உங்கள் படங்கள் வெற்றியடைய வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்விர்கள்.ஏன் உங்கள் தாய் குடி இருக்கும் வீட்டை இடிப்பவன் உங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடைய செய்பவன் என்றால் அதையும் பார்த்து கொண்டிருப்பிர்கள் இல்லை உங்கள் தாயை பலாத்தகாரம் செய்பவன் உங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடைய செய்பவன் என்றால் அதையும் மெளன யோகிகள் போல பார்த்து கொண்டிருப்பிர்கள் என்பது உண்மைதானே.



உன்னை வளர்த்தவள் தாய் என்றால் உன் நடிப்பை பார்த்து உன்னை இந்த பிரபல நிலைக்கு வளர்த்த இந்த தமிழகமும் தமிழ்மக்களும் உனக்கு தாய்தானே.

நீங்கள் எல்லாம் ஒரு ஆண்மகன் என்றால் வாய் திறந்து தமிழகத்துக்காக அல்ல கேரளாகார்களுக்காக அல்ல நியாத்துக்காக குரல் கொடு...



அது உன்னால் முடியுமா? ஆண்மகன் என்று உன்னால் இந்த சமுகத்துக்கு நிருபிக்க முடியுமா?

11 comments:

  1. நியாயமான கேள்வி .

    ReplyDelete
  2. F/W மின்னஞ்சலில் இருந்து சிறு பகுதி ..பகிர விரும்புகிறேன் ..

    முதலாவதாக -
    பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் -
    மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து -
    நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான்
    வந்தடையும்.
    பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்
    (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,
    நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு
    உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய
    போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.
    வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி
    இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு
    அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம்
    ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து
    தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !
    எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்
    என்கிற பேச்சே அபத்தமானது.

    இரண்டாவதாக -

    1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.
    1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது
    என்று குரல் எழுப்பினார்கள்.
    பயத்தைக் கிளப்பினார்கள்.
    சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
    2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை
    அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி
    அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.

    கேரளா சொல்வது போல்
    இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
    ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல்
    40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே
    செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்
    உள் செலுத்தப்பட்டது.

    2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -
    நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி -
    லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,
    கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்
    கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக -
    ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல்,
    கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட்
    அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

    ReplyDelete
  3. அய்யா எப்படி நீர் இந்தமாதிரி நடிகர்களை கேட்க முடியும், இதனால் இந்தியா ஒருமைபாட்டுக்கு களங்கம் வந்துவிடும். ஆனால் மலையாளிகள், மற்ற மாநிலத்தவர் ஏதுவேண்டுமானாலும் செய்யலாம். தமிழன் மட்டும் தான் ஒருமைபாட்டை காக்கவேண்டும். லண்டனில் பிறந்து லண்டனில் வாழும் இசைப்புயலுக்கு தமிழ்நாட்டில் நடப்பது எதுவும் தெரியாமல் டேம் 999 படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைக்க வாழ்த்தியுள்ளார். இசை நிகழ்ச்சியை தவிர்க்க விரும்புகிறேன் என்று சொன்ன இசைஞானிக்கு பலரும் கண்டனம் (இட்லிவடை பதிவு) தெரிவித்துள்ளார்கள், ஏனென்றால் இசை மொழி மதம் எல்லாவற்றையும் தண்டியதாம், நிலைமை இப்படி இருக்க நீர் என்னவென்றால் நடிகர்களை போராட்டம் நடத்த சொல்கிறீரே, எவன் வேண்டுமானாலும் நம் முகத்தில் எதை வேண்டுமானாலும் துப்பி விட்டு போகட்டும். நாம் மட்டும் தேசிய ஒருமைபாட்டை காத்துக்கொண்டிருப்போம்
    ஜெஹிந்த் !

    ReplyDelete
  4. எல்லாம் தலை எழுத்து!!

    ReplyDelete
  5. @ஸ்ரவாணி

    @குமரன்

    @தனசேகரன்.எஸ்

    உங்களின் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தமிழ் நடிகர் போல கோழைகளாக இல்லாமல் உங்கள் மனதில் பட்ட கருத்துகளை தைரியாமாக சொன்னதற்கு உங்களுக்கு சல்யூட் & நன்றி

    ReplyDelete
  6. //உங்கள் தாயை பலாத்தகாரம் செய்பவன் உங்களை வைத்து படம் எடுத்து வெற்றி அடைய செய்பவன் என்றால் அதையும் மெளன யோகிகள் போல பார்த்து கொண்டிருப்பிர்கள் என்பது உண்மைதானே.//ரோஷம் வந்திடப்போகுது.சொரணை கெட்ட ஜென்மங்கள்.

    ReplyDelete
  7. யாரைப்பார்த்து ஆண் மகனா என்று கேட்டீர், பணம் புகழுக்காக சேலை கட்டி நடிக்கும் கூத்தாடிகளையா ஆண் மகனென்று கேட்டீர், நாயை விட கேவலமா இவனுகளை திட்டியாச்சி இன்னும் இவனுகளுக்கு ரோஷம் வரலை...!!!

    ReplyDelete
  8. இரு மாநில எல்லையில் நிலவும் பதட்டமான சூழ்நிலையால் பேருந்துகள் செல்ல முடியவில்லை, ஐயப்பன் கோவிலுக்கு தமிழக பக்தர்கள் போக முடிய வில்லை. கேரளாவிற்கு செல்லும் தமிழக காய்கறிகள் தேங்கி அழுகும் நிலை. ஆனாலும்.................... தமிழக ஆறுகளில் இருந்து கள்ளத் தனமாக கடத்தப் படும் மணல் மட்டும் இவற்றையெல்லாம் மீறி கேரளம் செல்கிறது. ஆற்று மணல் கொள்ளை போனால் நமது ஆறுகளின் எதிர்காலம் என்னவாகும்? பணத்துக்காக வீட்டிலுள்ள பெண்களையும் கூட்டிக் கொடுக்கும் இம்மாதிரியான அயோக்கியர்களை கொண்டிருக்கும் இம்மாநிலம் எங்கே அய்யா உருப்படப் போகிறது? இதில் நடிகனை மட்டும் குறை சொல்லி என்ன பயன்?

    ReplyDelete
  9. // நாங்க எல்லாம் தமிழ் ப்ளாக் படிக்க நேரமே இல்லை //
    என்பார்கள் இந்த கயவாளிகள்.
    தன் மானமும் ரோஷமும் ,வீரமும், இன உணர்வும் இந்த இந்த பேடிகூட்டங்களிடம் நாம் ஏன் எதிர்பார்க்கவேண்டும். இவனுகளுக்கு கட்டவுட், தோரணம், போஸ்டர் ஒட்டுவது, பீர் ,பால் அபிஷேகம் பண்ணும் பராரி நாய்களை இனிமேல் கண்டால் அங்கேயே ஓட ஓட அடித்து விரட்டலாம். விரட்டனும்!

    ReplyDelete
  10. neththiyadi padhivu vaazhththukkal
    aanaal thamizhaga makkal avvalavu elidhdhil thirundhdhamaattaargal madapayalugal

    ReplyDelete
  11. //நீங்கள் எல்லாம் ஒரு ஆண்மகன் என்றால் வாய் திறந்து தமிழகத்துக்காக அல்ல கேரளாகார்களுக்காக அல்ல நியாத்துக்காக குரல் கொடு...



    அது உன்னால் முடியுமா? ஆண்மகன் என்று உன்னால் இந்த சமுகத்துக்கு நிருபிக்க முடியுமா?//

    சொரன கெட்வைங்க

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.