Thursday, December 29, 2011


பண்பாடு தவறிய தமிழக தலைவர்கள்



நம் வீட்டில் ஆயிரம் சண்டைகள் சச்சரவுகள் இருக்கலாம் ஆனால் அந்த நேரத்தில் நம் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் சண்டை சச்சரவுகளை மறந்து  வந்தவர் முன்னால் இன்முகம் காட்டி இருப்பதுதான் காலம் காலமாக நம் தமிழர்கள் கடைபிடிக்கும் பண்பாடு.



நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக தலைவர்களான ஜெயலலிதா, அழகிரி, டி.ஆர் பாலு அனைவரும் நம் நாட்டு பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்த போது அவரின் முன்னால் நடந்து கொண்ட விதத்தை பற்றிதான்  இங்கு. குறிப்பிடுகிறேன். அப்போது நடந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது இந்த சிறு பிள்ளைகளையா நாம் தலைவராக தேர்ந்தெடுத்தோம் என்று நினைக்கும் போது வேடிக்கையாக இருந்தாலும் மனது வேதனைப்படுவதை மறைக்க முடியவில்லை.



முதலில் ஜெயலலிதா அவர்களைப் பற்றி இங்கு பார்ப்போம். இவர் தமிழக மக்களின் ஆமோக ஆதரவைப் பெற்று தமிழக முதல்வாராக தேர்ந்தெடுக்கப்பட்டு "அம்மா" என்று அழைக்கப்படுபவர் எதிர்கட்சி தலைவரின் மகனும் மத்திய அமைச்சருமான அழகிரியை பார்த்த போது என்னப்பா செளக்கியமா? நல்லா இருக்கிறாயா என்று ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து கேட்டு தமது மதிப்பை உயர்த்தி இருக்கலாம்.



சரி அதைவிடுங்க.. நம்ம அழகிரி அண்ணை இப்பபோ பார்ப்போம்.



தமிழ் தமிழ் பண்பாடு கலாச்சாரம் என்று மூச்சுக்கு முன்நூறு தடவை பேசிவரும் கலைஞர் தன் குழந்தைகளை தமிழக தலைவராக்குவதற்கு முயற்சி எடுத்த அளவு தமிழ் பண்பாட்டை கற்று கொடுத்து இருக்கலாம். அதுதான் நடக்கவில்லை

அதனால்தான் ஜெயலலிதா அவர்களை அழகிரி பார்த்த போது அம்மா வணக்கம் செளக்கியமா இருக்கிறிர்களா என்று கேட்கவில்லை.



இப்படி இந்த தலைவர்கள் பொது இடத்தில் சந்திக்கும் போது பண்பாடோடு நடப்பதனால் அவர்களின் தரம் குறைந்து போவதில்லை மாறாக தரம் உயர்ந்து மக்கள் மனதில் நல்ல இடத்தை பெறுவது மட்டுமல்லாமல் மக்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் இருந்திருக்கலாம்.





இந்த பழக்கத்தை நம் வட நாட்டு தலைவர்களிடமும் மேலை நாட்டு தலைவர்களிடமும் காணலாம் ஆனால் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த தமிழ் "குடி'மகன்களிடம் மட்டும் இந்த பண்பாடு இல்லை. இது நமக்கு வெட்கமாக தோன்றவில்லையா?



கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று அண்ணாவின் வழியை பின்பற்றும் இந்த இரண்டு கட்சி தலைவர்களும்  அடுத்த முறையாவது எங்காவது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் பண்பாடோடு நடந்து, எதிர்கட்சியாளர்கள் என்பவர்கள் கருத்துகளுக்கு மட்டும்தான்  எதிரி மனிதர்களுக்கு எதிரிகள் அல்ல என்று   மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.





4 comments:

  1. nalla padhivu uraippavargalukku uraiththaal sari adhupogattum neengal therivikkindra ivargal yaarum maraththamizhargal illaye paavam ivargal saidha thavarukku thamizhargal enna saivaargal nandri

    ReplyDelete
  2. நடக்குற காரியமாய்யா அது, உலகமே மாறினாலும் இந்த தலைவருங்க மாறப்போவது இல்லை, இனி நாமதான் இவிங்களை மாற்றணும்...!!!

    ReplyDelete
  3. காமிரா இல்லாத இடத்தில் அவர்கள் சகஜமாக தான் பழகுவார்கள்... ரெண்டு பெரும் தமிழகத்தை குத்தகை எடுத்துக் கொண்ட பொழுதே தெரியவில்லையா

    ReplyDelete
  4. நல்ல கருத்து
    அணால் பண்பாடு கலாச்சாரம் குறித்த
    சொற்களெல்லாம் தமிழகத்தில் மேடைப் பேச்சுக்கான வார்த்தைகளாகி
    வெகு நாட்கள் ஆகிவிட்டன
    அருமையான பகிர்வுக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.