Friday, December 3, 2021

 
@avargal unmaigal

அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் சொல்லும்  "இந்த"  பொழுது போக்குகள் உங்களை புத்திசாலிகளாக்கும் 


அறிவு என்பது கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட பரிசு என்றும் , நீண்ட காலமாக, மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலான புத்திசாலித்தனத்துடன் பிறக்கிறார்கள் என்றும், வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த செயல், நமது திறனைப் பொறுத்து வாழ்வதே என்றும் நம்பப்பட்டது. நாம் உண்மையில் நமது திறனை அதிகரிக்கவும், செயல்பாட்டில் மகிழ்ச்சியடையவும் முடியும் என்பதை விஞ்ஞானிகள் இப்போது நிரூபித்துள்ளனர். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் மூளையானது புதிய நரம்பியல் பாதைகளை உருவாக்குகிறது, அது வேகமாகவும் சிறப்பாகவும் செயல்படும் என்பதை இப்போது நாம் அறிந்து கொள்ள முடிகிறது




 

அப்படி அறிவியலால் நிரூபிக்கப்பட்ட "அறிவுத்திறனை வளர்க்கும் பொழுது போக்குகளை நாம் பார்க்கலாம்"


புத்தகம் படிப்பது :

வாசிப்பதன் பலன்கள் ஒன்றே. வாசிப்பு மன அழுத்தத்தைக் குறைக்கிறது, இது உங்களைப் பற்றி நன்றாக உணர வைக்கிறது, மேலும் மூன்று வகையான நுண்ணறிவை அதிகரிக்கிறது -- crystallised, fluid and emotional.. இது சிக்கலைத் தீர்ப்பதற்கும், அன்றாட வாழ்க்கையை சிறப்பாக வழிநடத்துவதற்கும், வெவ்வேறு அறிவை ஒன்றிணைப்பதற்கும், வடிவங்களைக் கண்டறிவதற்கும், செயல்முறைகளைப் புரிந்துகொள்வதற்கும், மற்றவர்களின் உணர்வுகளைத் துல்லியமாக விளக்குவதற்கும் பதிலளிப்பதற்கும் உதவுகிறது.

நாம் வேலை செய்யும் இடத்தில் , இது விஷயங்களை எப்படிச் செய்வது என்பதை நன்கு புரிந்துகொள்வதற்கும் சிறந்த நிர்வாகத் திறன்களுக்கும் படிப்பறிவு உதவுகிறது


புத்தகம் படியுங்கள் .அதை ஆர்வத்துடன் படியுங்கள், வாசிப்பது நல்ல பொழுது போக்கு இது பல்வேறு வழிகளில் நமக்கு உதவுகிறது. வாசிப்பு முக்கியமாக நமது அறிவுத்திறனை  அதிகரிக்க உதவுகிறது. வாசிப்பு மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் உங்களை நீங்களே உணர வைக்கிறது. இது ஒரு நேர்மறையான நல்வாழ்வுக்கான மிக முக்கியமான அடித்தளங்களில் ஒன்றாகும். அது மட்டுமல்ல ஒரே நேரத்தில் பல உணர்வுகளை அனுபவிக்க வாசிப்பு உதவுகிறது.( இங்கே வாசிப்பு என்று நான் சொல்வது மோடி பக்தர்களால் எழுதப்பட்டு அதை பார்வோர்ட் செய்வதை சொல்லவில்லை அது அறிவுத்திறனை வளர்க்காது அது  இருக்கும் அறிவையும் மழுங்கச் செய்யும் )

வாசிப்பு ஒரு நபரைப் பல வழிகளில் முழுமையாக நிரப்ப உதவுகிறது. அது பல பாடங்களில்  விஷயங்களில் உங்கள் அறிவை மேம்படுத்துகிறது. புத்தகங்களைப் படிப்பது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாஜ இருபதோடு , சவால்களைச் சமாளித்து நமது இலக்குகளை அடைய உதவுகிறது. புனைகதைகளை வாசிப்பது வேடிக்கைக்காக மட்டுமல்ல பெரும்பாலான வெற்றிகரமான நபர்களும் நிறையப் புனைக்கதைகளைப் படிப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது


ஒரு இசைக்கருவியை வாசிக்க கற்றுக் கொள்ளவும்

இயசையை வாசிப்பது படைப்பாற்றல், பகுப்பாய்வு திறன், மொழி, கணிதம், சிறந்த மோட்டார் திறன்கள் மற்றும் பலவற்றிற்கு உதவுகிறது.

இசை  மனித இதயங்களுடன் ஒரு மேஜிக்  கலவையைக் கொண்டுள்ளது. இது சிக்கலான உணர்ச்சிகளையும் உளவியல் நிலைகளையும் தூண்ட உதவுகிறது. இசையைக் கேட்பதன் மூலமும் இசைக் கருவிகளை வாசிப்பதன் மூலமும் நம் நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

 இசை என்பது ஒரு விதமான மருந்து அது ஒரு வகையான இன்பத்தை தருகிறது அதை இசைகக்ருவிகளை இசைப்பாதால் மட்டுமே உருவாக்க முடியுமே தவிர மனிதர்களால் அது ஒரு மருந்து போல தயாரிக்க முடியாது .இசை நமது மூளையைத் தூண்டுகிறது என்பதற்கான ஆய்வுகள் நிறுபித்துள்ளன. மேலும் இசையின் மூலம் நமது அறிவாற்றலையும் நமது வாதத் திறனை சிறப்பாக்க முடியும் என்று கூறியுள்ளது

ஒரு இசைக்கருவியை வாசிப்பதன் மூலமும் சிறிது நேரம் கற்றுக் கொள்வதன் மூலமும் அதை முழுமையாகப் படிப்பதற்கு நேரமும் முயற்சியும் தேவைப்படுவதால் உங்கள் பொறுமையையும் விடா முயற்சியையும் கற்றுக் கொடுக்கிறது


தவறாமல் தியானியுங்கள்


தியானத்தின் முதன்மையான நன்மை உங்கள் மீது கவனம் செலுத்துவதற்கும் உங்கள் உண்மையான சுயத்தை அறிந்து கொள்வதற்கும் உதவுவதாகும் தியானத்தில் ஆழ்ந்து இருப்பது தனி நபர்கள் உயர்ந்த நிலையை அடைய உதவுகிறது


தியானம் நமக்குள் இருக்கும் நபரை அடையாளம் காண உதவுகிறது. தியானம் செய்வது  நம்மால் அடையாளம் காண முடியாத விஷயங்களைப் பற்றி ஆழமாகக் கவனம் செலுத்த உதவுகிறது. இது அமைதியையும் மற்றும் அமைதியான மனதைப் பெறவும் உதவுகிறது. தியானம் மன அழுத்தத்தைக் குறைக்கவும் மற்றும் அனைத்து வகையான பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது, இதன் மூலம் நாம் மிகவும் பயனுள்ள வகையில் விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் சிந்திக்கலாம் மற்றும் திட்டமிடலாம்


வழக்கமான தியானம் உங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த உதவுகிறது உங்கள் புத்திசாலிதனைத்தை மேம்படுத்தும் போது கவனம் சிதறல்கள் மற்றும் சுயக் கட்டுப்பாட்டின் பயனுள்ள முறைகள் பற்றி அறிந்து இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததது



1992 ஆம் ஆண்டில், தலாய் லாமா விஞ்ஞானி ரிச்சர்ட் டேவிட்சனை :தியானத்தின் போது தனது மூளை அலைகளை" ஆய்வு செய்ய அழைத்தார். தலாய் லாமாவும் மற்ற துறவிகளும் தியானம் செய்யவும் இரக்கத்தில் கவனம் செலுத்தவும் கூறியபோது, ​​அவர்கள் ஆழ்ந்த இரக்கமுள்ள மனநிலையில் இருப்பதை அவர்களின் மூளை அலைகள் காட்டியது. முழு ஆராய்ச்சி முடிவுகளும் 2004 இல் "Proceedings of the National Academy of Sciences" மற்றும் பின்னர் Wall Street Journal இல் வெளியிடப்பட்டன, அங்கு அது பெரும் கவனத்தைப் பெற்றது.

தியானம் லட்சியவாதிகளுக்கு சுவாரஸ்யமாக மாறியது, ஏனெனில் நமது சொந்த மூளை அலைகளை கட்டுப்படுத்தலாம் மற்றும் நாம் விரும்பும் போதெல்லாம் நாம் உணர விரும்பும் அனைத்தையும் உணர முடியும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இதன் பொருள், பேச்சுவார்த்தைக்கு முன் அதிக சக்தி வாய்ந்ததாகவும், சம்பள உயர்வு கேட்கும் போது அதிக நம்பிக்கையுடனும், விற்பனை அழைப்பின் போது அதிக நம்பிக்கையுடனும் இருக்க முடியும்.

பொதுவான கருத்து என்னவென்றால், மூளை மேலும் வளர்ச்சியடையும் மற்றும் நீங்கள் அதை வேண்டுமென்றே செய்யலாம். வெவ்வேறு செயல்பாடுகள் உங்கள் மூளையின் வெவ்வேறு பகுதிகளைத் தூண்டுகின்றன, எனவே உங்கள் பலத்தில் தோற்கடிக்க முடியாதவர்களாகவும் உங்கள் பலவீனங்களை மேம்படுத்தவும் நீங்கள் பணியாற்றலாம். மூளையில் சுய-மேம்பாட்டிற்கு கவனம் செலுத்துவது ஒரு நல்ல யோசனையாகும், அவர்கள் தங்கள் தொழில்முறை உச்சத்தில் இருப்பதாக உணரும் எவருக்கும் (அல்லது ஒருவேளை நன்றாக வருவதை நிறுத்தியிருக்கலாம்), லட்சிய வல்லுநர்கள் மற்றும் நிச்சயமாக தங்கள் திறனை அதிகரிக்க விரும்பும் தொழில்முனைவோர்.


உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள்

பெரும்பாலோர் தங்கள் உடலைப்பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள் அவர்கள் தங்கள் உடலை பாரமரிக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் மட்டுமே முயற்சிக்கிறார்கள் ஆனால் உங்கள் உடலை மட்டுமல்ல உங்கள் மூளையையும் நல்ல நிலையில் வைத்திருக்க உடற்பயிற்சி தேவை இது திறன்களை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நமது மூளையைக் கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது

சுடோகு ,புதிர்கள் , செஸ் கேரம் பொன்ற பலகை விளையாட்டுகள் மற்றும் புதிர்கள் போன்ற ஏராளமான கேம்களை விளையாடுவதன் மூலம் நம் மூளைக்கு வேலை கொடுக்கலாம். இந்த நடவடிக்கைகள் புதிய இணைப்புகளை இணைக்கவும் உருவாக்கவும் உதவுகின்றன. ஆக்கப்பூர்வமான வழிகளில் பதிலளிப்பது இந்த மூளைப்பற்சிகள் மூலம் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஒரு விஷயமாகும், நீங்கள் பல்வேறு விஷயங்களை பல்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கிறீர்கள் இது உங்களின் திறைமையை அறிவை மேம்படச் செய்யும்

அடிக்கடி உடற்பயிற்சி செய்யுங்கள்


எப்போதாவது உடற்பயிற்சி செய்வது  பலனைச் கொடுக்காது . ஒவ்வொரு முறையும் கடின உழைப்பை விட வழக்கமான உடற்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது, ​​செல்கள் BDNF உடன் நிரம்பி வழிகின்றன, இது நினைவகம், கற்றல், கவனம், செறிவு மற்றும் புரிதலுக்கு உதவும் புரதமாகும். இது பெரும்பாலும் மனக் கூர்மை என்றும் குறிப்பிடப்படுகிறது.

சில விஞ்ஞானிகள் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது எதிர் விளைவை ஏற்படுத்துகிறது மற்றும் உண்மையில் நம் மூளை வேலை செய்வதைத் தடுக்கிறது என்று ஊகிக்கின்றனர்

அடிக்கடி உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான மூளையைப் பெற உதவுகிறது. மூளை உடலில் ஒரு தசையாகவும் செயல்படுகிறது, வழக்கமான உடற்பயிற்சி உடலில் சீரான செயல்களுக்கு உதவுகிறது இது  பதற்றத்தையும் குறைத்து நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது

பல்வேறு ஆய்வுகள் எலிகள் மற்றும் மனிதர்கள் மீதான ஆராய்ச்சிகள்  இதயப் பயிற்சிகள் மூலம் புதிய மூளை செல்களை உருவாக்க முடியும். மூளைக்குச் சிறந்த இரத்த ஒட்டம் என்பது மூளையின் செயல்பாடுகளை இருப்பதாக மருத்துவர்களும் ஒப்புக கொள்கிறார்கள் ஒட்டு மொத்தமாக இது மூளையின் வடிவமைப்பை மேம்படுத்துகிறது


ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள்

நீங்கள் ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்வது நல்லது ஒரு புதிய மொழியைக கற்றுக் கொள்வது எளிதான காரியம் அல்ல ஆனால் நீங்கள் அதைச் செய்தால் நீங்கள் நிச்சயமாகப் பல நன்மைகளைப் பெறுவீர்கள் இது உங்களைப் புத்திசாலியாகவும் ஆக்குகிறது
இலக்கண கட்டமைப்புகளைப் பகுப்பாய்வு செய்தல் மற்றும் புதிய சொற்களை கற்றுக் கொள்வது போன்ற பணிகளில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் புத்திசாலிதனத்தையும் மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் அதிக அளவு வாய்மொழி மொழி நுண்ணறிவு கொண்டவர்கள் திட்டமிடுதல் முடிவெடுப்பது மற்றும் சிக்கலைத் தீர்ப்பதில் மிகச் சிறந்தவர்கள் என்று சில சோதனைகள் நமக்குக் காட்டுகின்றன

உங்கள் நினைவாற்றலை மேம்படுத்த புதிர்களைத் தீர்ப்பதை மறந்துவிட்டு, அதற்குப் பதிலாக வெளிநாட்டு மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு மொழியை மட்டுமே பேசுபவர்களை விட இருமொழி பேசுபவர்கள் புதிர்களைத் தீர்ப்பதில் சிறந்தவர்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. புதிய மொழிகளை வெற்றிகரமாகக் கற்றுக்கொள்வது உங்கள் மூளைக்கு மனதளவில் தேவைப்படும் எந்தப் பணியையும் சிறப்பாகச் செய்ய உதவுகிறது. திட்டமிடல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது போன்ற வழக்கமான நிர்வாக திறன்கள் இதில் அடங்கும்.

உங்கள் உணர்வுகளை எழுதுங்கள்

உங்களின் ஒட்டும் மொத்த அறிவுத்திறனை அதிகரிப்பது உட்பட எழுத்திலிருந்து நீங்கள் பெறக் கூடிய பல நன்மைகள் உள்ளன. எழுத்து மொழி திறன்களை மேம்படுத்த உதவுகிறது மற்றும் கவனம் படைப்பாற்றல் கறபனை மற்றும் புரிந்து கொள்ளுதல் போன்ற திறன்களை வளர்க்க உதவுகிறது.

பொதுவாக எழுத்தாளர்கள் பெரும்பாலும் மிக உயர்ந்த அறிவுத்திறன் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள் .நீங்கள் பல்வேறு வழிகளில் விஷயங்களை எழுதலாம் ஒவ்வொரு நபரும் வெவ்வேறு வழிகளில் பல விஷயங்களைப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு நபருக்கும் அவரவர் கண்ணோட்டம் உள்ளது. உங்கள் டைரி குறிப்புகள்  மூலம் விஷயங்களை எழுதலாம் அல்லது உங்கள் சொந்த வலைப்பதிவை உருவாக்கலாம். நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் மனதில் உள்ள உருவங்களுக்கு வார்த்தைகளைக் கொடுக்கிறீர்கள். உங்களைத் தெளிவாக வெளிப்படுத்த கற்றுக் கொள்வது உங்கள் புத்தி சாலித்தனதை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும் மற்றும் ஒரு சிறந்த மன அழுத்த நிவாரணமாகும்

இப்படிப்பட்ட பொழுது போக்குளை நாம் செய்து நம்மை ஸ்மார்ட் ஆக ஆக்கி கொள்வோமா அல்லது  மோடி பகதர்களாகி பதிவுகளை ஃபார்வோர்ட் செய்து நமது மூளைகளை மட்டுமல்ல நமது சந்ததியினரின் மூளைகளையும் அறிவித்திறன்களையும் சேதப்படத்திக் கொள்வோமா?

எதை தேர்வு செய்யப் போகிறீர்கள்
 
 
@avargal unmaigal

 



அன்புடன்
மதுரைத்தமிழன்

 

டிஸ்கி : இணையத்தில் நான் படித்து கற்றதை இங்கு என் வழியில் மொழியாக்கம் செய்து இருக்கின்றேன். மோடி பக்தர்களின் ஃபார்வோட் பதிவுகளை படிப்பதை விட இது போல உள்ள பதிவுகளை படிப்பதால் ஒரு சிலராவது பயன் அடைவார்கள் என்பதன் காரணமே இந்த பதிவு

03 Dec 2021

4 comments:

  1. Replies
    1. இதை படிக்கும் முன் இதில் உள்ள ஆலோசனைகளில் எதை முன்பே கடைபிடிக்கிறீர்கள் எதை புதிதாக செயல்படுத்தப் போகிறீர்கள் தனபாலன்

      Delete
  2. Replies
    1. இதை படிக்கும் முன் இதில் உள்ள ஆலோசனைகளில் எதை முன்பே கடைபிடிக்கிறீர்கள் எதை புதிதாக செயல்படுத்தப் போகிறீர்கள் நெல்லைத்தமிழன்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.