Monday, December 27, 2021

 மனதில் எழும் எண்ணங்கள் இங்குக் கிறுக்கலாக
  

@avargal unmaigal



செத்தால் சுடுகாட்டுக்கு போவெதல்லாம் மனிதர்கள்தான்
ஆனால் அதே நேரத்தில் செத்த விலங்குகள்
நாம் சாப்பிடும் இலையில் அறுசுவை  உணவாக வந்து அமர்ந்திருக்கின்றன



மனிதர்களின் ரோமம் உதிர்ந்தால்  குப்பைக்குள்தான் போகின்றன.
ஆனால்  செடியின் இலைகளோ
நம் கப்பில் தேநீராக மாறுகிறது


யாருக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க  வேண்டாம்.
 என்னதான் நாம் விளக்கம் சொன்னாலும்
மக்களுக்கு  அவர்களுக்கு விருப்பான பதில் கிடைக்கும் வரை
நாம் சொலவது ஏதும் அவர்களுக்கு விளங்குவதில்லை



நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.
அடுத்தவர்கள் என்ன விரும்ப வேண்டும் என்பது அவசியம் இல்லை
அது எனக்கு ஒரு பொருட்டல்ல
அடுத்தவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் இருப்பேன்


மழையில் நனைகின்றேன்
வெயிலில் உருகின்றேன்
பனியில் நடுங்குகிறேன்

என்னப்பா கவிதை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டே
இந்த வயசுலேயும் காதலா?

அடேய்  என் வேலை கட்டிடத்திற்கு வெளியேதான் அதனால்
நான் என் பொழைப்பை பற்றிப் புலம்புகிறேன்
அது உனக்கு காதலாகத் தெரிகிறதா பாவி


அமாவாசை அன்று நிலாவைப் பார்க்க முடியாது என்றான்
எதிர்த்த வீட்டுக்காரன்
இல்லை வரும் என்று சொன்னேன்

அப்படி நான் சொல்லி முடித்த தருணத்தில்
அவன் மனைவி வந்து என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்
அவன் இன்னும் சொல்லிக் கொண்டு இருக்கிறான் வராது என்று
ஆனால் வரும் என்று  சொல்லிக் கொண்டு இருக்கின்றேன்
சொன்ன நானோ வந்த நிலாவை ரசித்துக் கொண்டிருக்கின்றேன்

பக்கத்துவீட்டு பெண்மணி கேட்கிறாள்
 உங்களுக்குப் பிடித்த  என்னை
என் கணவருக்குப் பிடிக்காமல் இருப்பது ஏன்?


வயதானவர்களின்
பேச்சுக்கள் எல்லாம்
அவர்களின் இளமைக்
கால கட்டத்தைப் பற்றிய
பேச்சுகளாகவே இருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்


6 comments:

  1. ஆறாத ஆசைகள் - தோன்றும் - என்னை தூண்டும்...
    ஆனாலும் வாய் பேச - அஞ்சும் - இந்த நெஞ்சம்...
    அவள் பேரை நாளும் - அசை போடும் உள்ளம்...
    அவள் போகும் பாதை - நிழல் போல செல்லும்...
    மௌனம் பாதி மோகம் பாதி - என்னை கொல்லும் என்னாளும்...

    பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா...
    என் மனதில் அம்பு விட்ட நிலா - இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா...
    வாழ்நாள் தோறும் - தினம் தான் காதோரம் பாடல் கூறும்...

    "டங்" - யப்பா என்னா அடி...! ஓ... பூரிக்கட்டையா...!

    ReplyDelete
  2. //நான் நானாக இருக்கவே விரும்புகிறேன்//

    சூப்பர் தமிழரே...

    ReplyDelete
  3. விளக்கம் நல்ல விளக்கம்.

    ReplyDelete
  4. விளக்கம் பற்றியது சூப்பர்.

    நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்// நல்ல விஷயம் மதுரை ஆனால் இது குடும்பத்தைப் பொறுத்தது.

    கடைசி யதார்த்தம்.

    இடையில் மதுரைதமிழனின் வழக்கமான...ஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
  5. கிறுக்கல்களுக்கு இடையில் நல்ல எண்ணங்களும். கிறுக்கல்களும் ரசனைதான்

    துளசிதரன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.