அவன் ஏன் சுதந்திரத்தை இழக்கின்றான்?
கட்டிப் போட்ட உயிரினங்கள் அனைத்தும்
சுதந்திரத்தை இழக்கின்றன.
இதைப் படித்தவன் அறிவான்.
அப்படி இருந்த போதிலும்
அவன் பெண்ணை தாலியால் கட்டிப் போட்டான்.
இயற்கையின் நிகழ்வு படி
அந்த பெண் சுதந்திரத்தை இழந்திருக்க வேண்டும்.
ஆனால் நடப்பது என்னவோ கட்டிப் போட்டவன் எவனோ
அவன்தான் தன் சுதந்திரத்தை இழந்து நிற்கிறான்
இந்த இணைய உலகில்
பலர் ஒரிஜனல் புகைப்படங்களை
தங்களது புரொபைலில் பதிந்து இருந்தாலும்
அவர்கள் போலித்தனமாகவே இருக்கிறார்கள்
அதனால்
அப்படிப்பட்ட இந்த போலி உலகத்திற்கு
நாம் நிஜமானவர்கள் தான்
என நிரூபிக்கத் தேவையில்லை!
வாய் பேச முடியாதோர்
மட்டுமல்ல...
கருத்தைச் சுதந்திரமாகச் சொல்ல முடியாத
மக்களும்
ஊமைகள் தான் இங்கு
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
நேற்றுவரை சேர்த்துவச்ச
ஆசைகள் வேகுதடி
பணம் (ஐந்து கோடி) வந்து நான் எண்ணிவச்சா
நிம்மதி ஆகுமடி
அன்புடன்
மதுரைத்தமிழன்
உங்களின் கோபம் புரிகிறது...
ReplyDeleteமதுரை தமிழன் உங்களின் ஆதங்கம் நியாயமானதே. கடைசி பாராவில் சொல்லியிருக்கும் டார்க் கறுப்பு எழுத்து வரிகள் சரியே.
ReplyDeleteதுளசிதரன்