Thursday, December 16, 2021

 ஸ்டாலின் அரசைக் கிண்டல் செய்வதாக மோடி அரசைக் கிண்டல் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

மத்திய அரசை காப்பியடிக்கும் திமுக அரசு ! பாஜ விமர்சனம்

https://youtu.be/gXrucvMzjWM






ஸ்டாலின் அரசைக் கிண்டல் செய்வதாக மோடி அரசைக் கிண்டல் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசு எந்தவொரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை மத்திய அரசின் திட்டங்களைத்தான் காப்பி அடிக்கிறது எனக் கூறுகிறார்

 அவர் சொல்வது உண்மையாக இருக்குமானால் அவர் ஸ்டாலின் அரசைக் குறை சொல்லாமல் பாராட்டித்தானே இருக்க வேண்டும். மத்திய அரசும் எங்கள் திட்டங்களைச் செயல்படுத்துகிறஅரசு தமிழக அரசு என்று பாராட்டு பத்திரம் அல்லவா தந்திருக்க வேண்டும்


அதே கூட்டத்தில் மாநில அரசு புதுமையான திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தினால்தான் மாநில மக்களுடைய வாழ்க்கையில் மாற்றம் வரும் எனக் கூறுகிறார். அப்படியானால் மோடியின் திட்டங்களால் மாநிலங்கள் பலனைப் பெறாதா என்ன ? கடந்த ஆறு மாதத்தில் தமிழகத்தில் என்ன புதுமையான திட்டங்கள் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.. அப்படியானால் இவர் சொல்வது போல மோடியின் திட்டங்களைக் காப்பி அடித்துச் செயல்படுத்தியது புதுமையானது இல்லையா என்ன?

அட கூமுட்டை அண்ணாமலை படித்திருந்தால் போதாது பேசும் போது யோசிச்சு பேசவேண்டும் அது கூட தெரியாததானால்தான் நீங்கள் தமிழ சங்கிகளின் கூட்டத்திற்குத் தலைமையாக இருக்கிறாய்

________________________________________________________________________

 
@avargalunmaigal

தத்துவஞானி சாக்ரடீஸ் உயிரோடு இருந்து தமிழனாக இருந்திருந்தால் மோடியிடம் இந்த மூன்று கேள்விகளைக் கேட்டு இருப்பார்



அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. சங்கிகள் தவிர யாரும் சீண்டுவதில்லை...

    ReplyDelete
  2. நியாயமான கேள்விதான் தமிழரே...

    ReplyDelete
  3. திட்டங்கள் அதேவாக இருக்கலாம்.  செயல்படுத்தும் முறை என்று ஒன்று இருக்கிறதே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.