Monday, January 24, 2022

 

@avargal unmaigal

மதமாற்றங்களால் இந்துமதம் அழிந்துவிடுமா? அதைச் சட்டத்தால்தான் காப்பாற்ற முடியுமா? 


ஒரு சில இடங்களில் நடக்கும் மத மாற்றங்களை  இந்துக்கள் அல்ல, இந்துத்துவா ஆட்கள் பெரிது படுத்தி, ஓலமிட்டு ,அதன் மூலம் தாங்கள் ஆட்சியில் ,அதிகாரப் பதவியில்  "தொடர்ந்து" உட்கார துடிக்கிறார்கள். அவர்களின் நோக்கம் இந்துமதம் அழிந்துவிடும் என்பதல்ல, இந்து மத்தின் பெயரைச் சொல்லி தாம் அதிகாரப்பதவியில் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.

இந்துமதம் பரந்து விரிந்து மண்ணில் பலமாக வேரூன்றிய ஆலமரத்தைப் போன்றது. அது மற்ற மதங்களைப் போலத் தோற்றுவிக்கப்பட்ட மதம் அல்ல..அது ஒரு வாழ்க்கை முறை .அது ஒரு தனித்துவமான unique மதம்.


அது அழியவே அழியாது... நல்ல கவனித்துப் பாருங்கள். இந்தியாவில் எத்தனை கோடி இஸ்லாமியர்கள் ,கிறிஸ்துவர்கள்  வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் என்ன வேறு நாடுகளிலிருந்து வந்தவர்களா என்ன? அவர்களும் இங்கேயே பிறந்து, வாழ்ந்து பல காலங்களுக்கு முன்பு மதம் மாறியவர்கள்தானே.. அவர்கள் எல்லாம் அப்படி மாறியதால் ,இந்து மதம் அழிந்து போய்விட்டதா என்ன?

150 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா பல அந்நியர்களால் ஆளப்பட்டது, அவர்கள் பெரும்பாலும் முஸ்லீம் மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள்  (கிறிஸ்துவ) ஆட்சியாளர்களாக இருந்தனர். இந்து  மதத்தின் மீது வெறுப்பு கொண்டு, பெரும்பாலான ஆட்சியாளர்கள் இந்து கோவில்கள், இந்து நம்பிக்கைகள், இந்து கலாச்சாரம் போன்றவற்றை அழித்து வந்தனர் ஆனால் இந்து  மதம் ஒருபோதும் அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை, இவ்வளவு துன்புறுத்தலுக்குப் பிறகும் இந்து மதம் தலை நிமிர்ந்து நிற்கத்தானே செய்தது .  ஒரு பெரிய மலை போல் கம்பீரமாகத்தானே நின்றது.அப்போது அழியாத இந்து மதம் .இப்போது ஜனநாயக நாடா சுதந்திரமாக  இருக்கும் போதுதான் அழிந்துவிடுமா என்ன?


ஏன் 2014க்கு முன்னால் அழியாத இந்துமதம் மோடி ஆட்சியில் அமர்ந்ததும் அழிகிறதா என்ன? இல்லையே ஆனாலும் அவர்கள் ஏன் அப்படி கூக்குரல் இடுகிறார்கள்? பதில் ரொம்ப சிம்பிள் எங்கே நாட்டை குட்டிச் சுவராக்கிய நம்மை மக்கள் வெறுத்துவிட்டால் பதவியில் எப்படித் தொடர்ந்து  இருக்க முடியும். அதனால் இப்படி இந்துத்துவா கோஷங்களை எழுப்பி, மக்களைக் குழப்பி,   குறிப்பாக இந்து மக்களைக் குழப்பி, அதன் மூலம் ஆட்சியில் தொடர்ந்து இருக்க விரும்புகிறார்கள் .அப்படிப்பட்ட அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் நன்றாகத் தெரியும் .இந்து மதத்திற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று .அப்படியும் அவர்கள் அதை ஆதரிக்கக் காரணம் அவர்களும் ஆட்சியில் உள்ளவர்கள் போலப் பதவி வெறி பணவெறி ஆசையால்தான்.


ஒருவேளை நான் சொல்வது தப்பு அவர்கள் செய்வது சரியென்றால், மாற்று மதத்திற்கு இந்து மதத்திலிருந்து பலர் தொடர்ச்சியாகப் போகிறார்கள் என்றால், இப்படிக் கூக்குரலிட்டு இருப்பதை விட்டுவிட்டு ,அப்படி அவர்கள் செல்லக் காரணம் என்பதைக் கண்டறிவதுதானே சிறப்பு

ஒருவன் தன் மதத்தைவிட்டு வேறு ஒரு மதம் மாறுகின்றான் என்றால் ,அவனுக்கு அவன் மதத்தைப் பற்றிய முழு அறிவு இல்லாமல் இருக்கலாம் அதனால் மாற்று மதங்களைப் பற்றி அறியும் போது, அது சிறப்பாக இருப்பதாகக் கருதி அதற்கு மாறுகிறான்.. அப்படி  நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்காக  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அதைவிட்டுவிட்டு கோவிலைத் திறந்தோம் ,கடவுளை அலங்காரம் செய்தோம், மணி அடித்து ,வேதம் ஒதி பூஜை செய்தோம். அதன் பின் பிரசாதம் கொடுத்து தட்சணை பெற்றுக் கோவிலை அடைத்தோம் என்று இருக்காமல், அந்த கோவிலேயே பூஜை முடிந்ததும் மதத்தைப் பற்றி ,கடவுளைப் பற்றி சிறிய விளக்க உபதேசங்களைக் கொடுக்கலாமே? அதுமட்டுமல்லமால்  மதம் சார்ந்த பல  இடங்களில் கடவுளைப் பற்றி ஆரோக்கியமான சொற்பொழிவுகளை கிருபானந்தவாரியார் காஞ்சி பெரியவர் ஆற்றியது போல எல்லா பிரிவு அதாவது சாதி மக்களும் புரிந்து கொள்ளும்படி எடுத்துரைப்பது மிகச் சிறப்பாக இருக்குமே. அப்படிச் செய்யாமல் கூக்குரல் மட்டும் இட்டுக் கொண்டு இருப்பது சரியா சிந்தியுங்களேன்.


சரி நாங்கள் இப்படிச் செய்தாலும் கஷ்டப்படும் இந்துக்களுக்குப் பணத்தைக் கொடுத்து மதம் மாற்றிவிடுகிறார்களே என்றால், மாற்று மதத்தவர் பணத்தைக் கொடுத்து மதம் மாற்றும் போது, தன் சொந்த மதத்தில் இருக்கும் ஒருவன் கஷ்டப்படுகின்றான் என்றால், அவனுக்கு ஒடி உதவுவதுதானே நீங்கள் பின்பற்றும் மத தர்மாக இருக்க முடியும். அப்படி உதவினால் அவர்கள் ஏன் மாற்று மதக்காரர்களை நோக்கி ஓடுகிறார்கள்


முக்கியமாகச் சாதிய தடைகளை உடைப்போம். சக மனிதர்களிடையே அன்பைப் பரப்புங்கள். ஒரு நபரின் பொருளாதார வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருங்கள். ஒருவருக்கொருவர் உதவுங்கள், நேர்மையாக இருங்கள். மதத்தை யாரும் திணிக்காதீர்கள். இந்தியாவிலிருந்து வந்த மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இந்துக்களாக இருந்தனர். சக இந்துக்களிடையே உருவாக்கப்பட்ட பலாத்காரம், பணம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றால் அவர்கள் மதம் மாறினார்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து ஒவ்வொரு மனிதரையும் அவர்களுக்கு உரிய மரியாதையுடன் நடத்துங்கள். நம்புங்கள் மற்றும் நம்பகமானவர்களாக இருங்கள். அவர்கள் உங்களை  நேசிப்பதோடு ள் இந்து மதத்தை விட்டு வெளியேற மாட்டார்கள்.


இந்து மக்களுக்காகக் கூக்குரல் இடும் இந்துத்துவா தலைவர்கள் .இந்திய மக்கள் நலம் பெற நல்லா பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொண்டாலே பலரும் சிறப்பாக வாழமுடியுமே. அதன் பின் அவர்கள் ஏன் மாற்று மதக்காரர்கள் கொடுக்கும்  எச்சில் பணத்தை நோக்கி ஓடப் போகிறார்கள்.


இல்லை இல்லை  இதற்குப் பதிலாகச் சட்டம் கொண்டு வந்து மதமாற்றத்தைத் தடுப்போம் என்றால் நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள். சட்டத்தில் எப்போதுமே ஓட்டை  இருக்கும்.  அதுமட்டுமல்ல வேலிகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதைக் தாண்டிக் குதிக்கும் கால்களுக்கும்  வலு அதிகமாகவே இருக்கும்..


இறுதியாக  முடிவில்   கடவுள் அனைவருக்கும் ஒருவரே. அவர்கள் இந்துவாக இருந்தாலும், முஸ்லீமாக இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும் சரி,  தலித்தாக இருந்தாலும் சரி, சீக்கியராக இருந்தாலும் சரி.

ஒன்றே குலம் ஒருவனே தெய்வம். சக மனிதர்களுக்குள் ஜாதி, மதம், வேறுபாடு கிடையாது. நாம் அனைவரும் ஒன்று, கடவுள் நம் அனைவருக்கும் ஒருவர்.

அதனால் சிந்திப்போம் செயல்படுவோம் சதிகாரர்களை இனம் கண்டு ஒதுக்குவோம்.. சந்தோஷமாக வாழ்வோம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

 


டிஸ்கி : மதம் மாற்றங்கள் பற்றி என் மனதில் பட்டதை எழுதி இருக்கின்றேன். நான் எழுதியதில் தவறுகள் ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.. அல்லது மாற்றுக் கருத்து இருந்தால் சொல்லுங்கள் ஒருவேளை எனக்குப் புரியாதது அல்லது தெரியாத விஷயங்கள் இருந்தால் உங்கள் மூலம் தெரிந்து கொள்கின்றேன். மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும்


9 comments:

  1. இந்தக் கட்டுரை மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் தமிழரே...

    ReplyDelete
  2. மதம் ஏதாயாலும் மனுஷயன் நன்னாயால் மதி என்று மலையாளத்தில் ஸ்ரீ நாராயண குரு கூறியிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஜெயக்குமார்

      Delete
  3. மதம் மனிதத்தை சீரழிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. Á¾ò¾¢ý Á£Ð Á¾õ ¦¸¡ûÇ¡Áø þÕìÌõ Ũà ¿øÄÐ «ôÀÊ þø¨Ä¦ÂýÈ¡ø ¿£í¸û ¦º¡øÅÐ Á¢¸ º¡¢

      Delete
  4. அருமையான, ஆழ்ந்த கருத்துடனான பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies

    1. உங்கள் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக நன்றி சம்பத்

      Delete
  5. யாரோ ஒரு பிற மதத்தவன் கொடுக்கும் பொருளுக்கோ, பணத்திற்கோ அல்லது உதவிக்கோ பணிந்து தன்னுடைய மதத்தை ஒரு மனிதன் மாற்றிக்கொள்ளுவானாகில், தவறு அந்த மனிதனிடத்திலோ அல்லது அவன் அதுவரை பின்பற்றிவந்த மதத்தைப்பற்றிய புரிதலிலோதான் இருக்க வேண்டும். மதமாற்றம் பற்றிக் கூக்குரலிடுவோர் இதைக் கருத்தில்கொண்டு அவனுக்குத் தேவைப்படும் பொருளாதார அல்லது சமூக உதவிகள் அவனுக்குக்கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டபிறகு அவனது புரிதலை மாற்றத்தக்க தங்களது மதம் சார்ந்த ஆன்மீகக் கருத்துக்களை அவனுக்கு ஊட்டிவிடுவதே மத மாற்றத்தினை எதிர்கொள்ளவல்ல சரியான நடவடிக்கை. மற்றபடி தடைச்சட்டத்தின் மூலம் இந்தப்பிரச்சினையை தீர்த்துவிடலாமென்று எண்ணுவார்களேயானால் அது அவர்கள் சார்ந்து நிற்கும் மதத்தின் இயலாமை என்றே கருதப்படும். சுயநல அரசியல்வாதிகள் இதைச்செய்யாமல் குட்டையைக் குழப்பி ஆதாயமடையும் வழி பற்றியே சிந்திப்பார்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.