Monday, January 10, 2022

 

@avargalunmaigal

இப்படியாகத்தான் இன்றைய பேஸ்புக் மற்றும் சமுக இணையதளங்களில் 'மேதாவிகளின்' பதிவுகள் இருக்கின்றன.


சமுக வலைதளங்களில் பலரும் பல வித பதிவுகளை தங்கள் கருத்துக்களாக அவரவர்களுக்கு இருக்கும் அறிவிற்கு ஏற்ப , தெரிந்த ,புரிந்த விதத்தில் போடுகிறார்கள். சில சமயங்களில் அந்த  பதிவுகள் தவறாக இருக்கலாம். காரணம் எல்லோரும் மிகச் சிறந்த அறிவாளிகளாக இருக்க முடியாதுதானே. ஆனால் அப்படி கருத்துக்கு மாற்று கருத்துகள் வைப்பவர்கள். தவறான கருத்தைப் பதிந்தவர் தனக்கு  வேண்டப்பட்டவர் நண்பர் என்றால் அதற்கு ஒரு மாதிரியான பதில் கருத்தையும், ஒருவேளை அவர் தனக்குப் பழக்கம் இல்லாதவர் என்றால் ஒரு மாதிரியும் அல்லது அவர் தனக்குப்  பிடிக்காதவர் என்றால் கடித்துக் குதறியும் பதில் கருத்துச் சொல்வது ஏன்? இப்படிச் செய்தால் அந்த பதில் கருத்தும் தவறான கருத்தாகத்தானே இருக்கும்.

ஒரு கருத்து தவறாக இருக்கும் பட்சத்தில், அந்த பதிவை எழுதியவர் தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று பாரபட்சம் பார்க்காமல் கருத்துச் சொல்லும் மேதாவிதானாம் இன்றும் பல பிரபலங்களிடையே இல்லை..


ஓர்  பிரபலம் மற்றொரு பிரபலம் அதுவும் தனக்கு வேண்டப்பட்டவர் என்றால் தடவிக் கொடுத்தது மாதிரி பதில் சொல்லுவது ஏன்? ஒரு வேளை அவர் தனக்குத் தெரியாதவர்களுக்குப் பதில் சொல்லுவது போலக் காட்டமாகப் பதில் சொன்னால் அவரும் பதிலுக்குத் தன்னை தாக்கி  தான் செய்த தவறுகளை அல்லது சொன்ன கருத்துகளை பொதுவில் போட்டு உடைத்து அவமானப்படுத்தி விடுவார் என்ற பயம்தானோ இப்படித் தடவிக் கொடுத்தார் போலப் பதில் கருத்து போட வைக்கிறது?

அப்படிச் செய்தால் அறிவில்லாமல் போட்ட மற்றவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்??


நன்றாக இணையத்தைக் கவனித்து பாருங்கள். பிரபலங்கள் மற்றொரு பிரபலத்தின் கருத்துக்கு மாற்றுக் கருத்து  சொல்லும் போது சாந்தமாக ,மிக நட்புடன்தான் கருத்துச் சொல்வார்கள் .அவர்கள் எதிர் எதிர் கட்சியை அல்லது கொள்கையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அமைதியாகத்தான் பதில் அளிப்பார்கள். ஒருவேளை அவர்கள் பிரபலமாக இல்லை என்றால் பதில் வேற மாதிரியாகத்தான் இருக்கும்.


அதுமட்டுல்லமல்ல தவறான கருத்துகளைச் சொல்பவர் ஒரு வேளை பிரபலமாக இருந்தாலோ அல்லது மிகப் பெரிய பதவியில் இருந்தாலோ அல்லது தொழில் முனைவராக இருந்தாலோ பலர் அதற்குப் பதில் கருத்துச் சொல்லாமல் மௌனமாகக் கடந்துவிடுவார்கள். அதே ஒத்த கருத்தை வேறு யாரும் சொல்லி இருந்தால் காட்டமான பதில் கருத்தோ அல்லது அன்பிரண்ட் பண்ணுவதோ அல்லது ப்ளாக் பண்ணுவதோ நடக்கும்.


அது என்ன நியாயம்?


யோசிங்கடா கூமுட்டைகளா?


அன்புடன்
மதுரைத்தமிழன்


10 Jan 2022

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.