Sunday, January 30, 2022

 

@avargal unmaigal

உங்க நல்ல மனசுக்கு ஒன்றும் ஆகாது

நேற்று நடந்த ஒரு சிறு நிகழ்விலிருந்து தப்பிதத்தைச் சிறு பதிவாக பேஸ்புக்கில் போட்டு இருந்ததற்கு நண்பர்  Felix Raj கவலை படாதீங்க. உங்க நல்ல மனசுக்கு ஒன்றும் ஆகாது என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

 அவர் சொன்னதை நினைத்துப் பார்த்த போது, நல்ல மனசு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிகழ்வது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது..அது தொடர்பாகக் கடந்த சில ஆண்டுகளில் எனக்கு நேர்ந்த நிகழ்வுகளை மனம் அசை போட்டது..

 கொரோனா ஆரம்பித்த சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  1 மாதத்திற்கு மேலாகச் சிகிச்சை எடுத்துத் தப்பித்தேன் . (அப்போது இங்கே மக்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டு இருந்தார்கள் ) அடுத்த 6  மாதத்தில் மாடியிலிருந்து விழுந்து விலா எலும்பை முறித்துக் கொண்டேன்.

நான் , வேலை பார்த்த இடத்தில் எப்போதும் அதிக ரிஸ்க்தான். இப்படித்தான் கடந்த வருடத்தில் உடன் வேலை பார்த்தவர் 16 அடி உயரத்திலிருந்து 3500 (பவுண்ட் ) எடையுள்ள பொருட்களை கீழே இறக்கும் போது அது அப்படியே தவறி கீழே விழுந்தது..  அது நடந்த இடத்தில் 8 அடி துரத்தில்தான் நான் நின்று கொண்டு அவருக்கு இன்ஸ்டரக்ஷன் கொடுத்துக் கொண்டு இருந்தேன் ,


இது போல உடன் வேலை பார்த்தவர் மிக அதிக எடையுள்ள பொருளை மெஷினில் வைத்துக் கொண்டிருந்தார் அவர் அருகில் நின்று கொண்டு பேசிக் கொண்டு இருந்த போது கவனக் குறைவாக அதை மேலும் கீழே இறக்கிய போது என் காலில் உள்ள பெருவிரல் மேல் இறக்கிவிட்டார் உடனே நான் வலியில் கத்திய போது  அடுத்த நொடியில் மிக அவசரமாகச் செயல்பட்டு உடனே உயர்த்தியதால் கால் விரல் தப்பித்தது ஆனாலும் வலி சில மாதங்கள் நீடித்தது


அடுத்தாக சென்ற வாரத்தில் மகள் கல்லூரியிலிருந்து வந்து இருப்பதால் அவளுக்குப் பிடித்த முறுக்கை, என் மனைவியும் அவளும் வெளியே சென்ற போது  செய்து கொண்டிருந்தேன் ,முடிக்கும் தருவாய் இருக்கும் போது அவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள் .அப்போதுதான் நான் கடைசியாக இருந்த மாவைச் சிறிது உருட்டி சில உருண்டைகளாகப் போட்டு இருந்தேன் அதைப் போட உடனே எடுக்க வேண்டும் .காரணம் அதில் நான் சீரகம் சேர்த்து இருந்தேன். அப்படி சேர்க்கும் போது உருண்டைகளாக எண்ணெய்யில் போடக் கூடாது. இல்லையென்றால் வெடித்துவிடும் .அந்த சமயத்தில் மனைவி வந்து பேச்சுக் கொடுத்ததால், மேலும் சில நொடிகள் ஆனதால் ,அந்த  உருண்டைகள் வெடித்துச் சிதறின அதோடு சேர்ந்து கொதிக்கும் எண்ணெய்யும்  ரூம் முழுவதும் தெரித்ததோடு  என் கழுத்திலும் தெரித்தது நல்ல வேலை முகத்தில் தெரிக்கவில்லை இப்போது கழுத்து பகுதியில் தோல் வெந்த  காயத்துடன் இருக்கின்றேன்


எப்போதும் எதிலும் கவனமாக இருந்தாலும் நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது அதிலிருந்து கடவுள் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கிறார். நமக்கு என்று நேரம் வரம் போது அவர் அழைத்துக் கொள்வார் அதனால்  நான் சாவிற்கு எப்போதும் பயப்படுவதில்லை பயந்ததும் இல்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

நேற்று நடந்த நிகழ்வு

இங்கே வெள்ளி இரவு  பலமான காற்றுடன் Snow storm தொடங்கியது  அது சனிக்கிழமை காலை வரை தொடர்ந்தது.  சனிக்கிழமை காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்து ரோட்டில் கிடக்கும் பனிமேல்  அடிமேல் அடி எடுத்து வைத்துக் கூடவே நாயைக் கூட்டிக் கொண்டு காலை வாக் பண்ணிவிட்டு காரின் மேல் இருந்த Snow வை தள்ளிவிட்டு வேலைக்குச் சென்றேன்... ரோட்டில் இங்கே ஒன்று அங்கே ஒன்று என்று சில கார்கள் மட்டுமே சென்றன அப்படிச் செல்கையில் சில இடங்களில் கார் வழுக்கியது அதனால் வேகத்தைக் குறைத்து மெதுவாகவே ஒட்டினேன்.. அப்படிச் செல்லுகையில் ஒரு இடத்தில் சற்று அதிகமாகவே வழுக்கியது அப்படி கார் வழுக்கும் போது உடனடியாக பிரேக்கை மிதிக்கக் கூடாது அது போற போக்கில் போயி மெதுவாக ஸ்டிரிங்கை  திருப்பனும்.. நானும் அப்படித்தான் செய்தேன் நல்லவேளை நான் மெதுவாகச் சென்றதால் உயிர் பிழைத்தேன் என்று சொல்லலாம் கொஞ்சும் வேகமாகச் சென்று இருந்தால் என் கார் நதியில் போய் விழுந்திருக்கும் காரணம் என் கார் வழுக்கிய இடத்திலிருந்து ஐந்து அல்லது ஆறு அடி தூரத்தில்தான் நதி பனியால் மூடி இருந்தது... வீட்டிலிருந்து 15 நிமிட தூரத்தில் இருக்கும் என் வேலை இடத்திற்கு இன்று நான் செல்ல 40 நிமிடங்கள் ஆகியது இன்று. மாலை ரோடு க்ளீன் பண்ணிவிட்டதால் திரும்பும் போது பிரச்சனைகள் ஏதும் இல்லை... வீட்டிற்கு வந்து சமைத்துச் சாப்பிட்டு பாத்திரங்களை டிஸ்வாசரில் போட்டுவிட்டு நாய்க் குட்டியை இரவு வாக் அழைத்துச் சென்று விட்டு பேஸ்புக் பக்கம் வந்தால் முதலில் கண்ணிற்குத் தென்பட்டது அமெரிக்க வாழ் பிரபல பேஸ்புக் பதிவர்  அவர் வீட்டு ஜன்னலிலிருந்து  Snowவை விடியோவாக எடுத்துப் போட்டிருந்தார்.. அதைப் பார்த்த பல ஆண்கள் டேக் கேர் என்றும் பீ சேஃப் என்றும் டோண்ட்வொரி என்றும் இப்படி 500க்கும் மேல் கருத்துச் சொல்லி இருந்தார்கள். அதைப் பார்த்ததும் அடப்பாவிகளா அந்த பெண் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கு அவர் வீட்டுக்குள் இருந்து ஜன்னல் வழியாகத்தான் போட்டோ எடுத்துப் போட்டேன் என்று அப்படி இருந்தும் இவர்கள் எப்படி எல்லாம் கவலைப்பட்டு ஆறுதல் சொல்லுகிறார்கள் ஹூம்ம்ம்ம் இதுக்குதான்யா சொல்லுகிறது பேஸ்புக்கில் அக்கவுண்ட்  வைச்சா பெண்ணின் பெயரில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்பது


15 comments:

  1. என்ன நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

    இருப்பினும் கவனம் தேவை தமிழரே...

    ReplyDelete
    Replies

    1. எப்போதும் கவனமாகத்தான் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றேன் ஆனாலும் பிரச்சனைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இருக்கும் அதனால் அதை பற்றி கவலைப்படுவதில்லை. பேஸ்புக் பதிவிற்கு கருத்து சொல்லும் போது எனக்கு நடந்ததை பதிவாக போட்டுவிட்டேன் அவ்வளவுதான் கில்லர்ஜி

      Delete
  2. சிறிதும் பெரிதுமாக ஏகப்பட்ட சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.  மிக கவனமாக இருங்கள்.  சிலவற்றைப் படிக்கும்போதே ஆண்டுக்கமாக இருக்கிறது.   நம் ஜாதகத்துக்கு சிரமதசை நடக்கும்போது இப்படி நிகழலாம்.  இறைவன் உங்கள் பக்கம் துணை இருப்பார்.

    ReplyDelete
    Replies

    1. வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் வந்து போய் கொண்டுதான் இருக்கும் அதற்கு நாம் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதில் பயனில்லை ஸ்ரீராம்

      Delete
  3. இது போல் மன உறுதி ஒன்றே போதும் தல...

    ReplyDelete
    Replies

    1. உறுதி என்பதை விட இதுவும் கடந்து போகும் என்ற மனநிலைதான் எனக்கு தனபாலன் இன்னும் எழுத பல விஷயங்கள் இருக்கின்றன தனபாலன்

      Delete
  4. மதுரை என்னப்பா இது நிறைய கஷ்டங்கள் ஒன்றிற்குப் பின் ஒன்றாக....டேக் கேர். ஆமாம் ஸ்னோ விஷயம் ரொம்ப ரொம்ப கேர்ஃபுல்லா வண்டி ஓட்டணும். என் மகனும் சொல்வான். ஐஸாக இருந்தால் ரொம்பவே கஷ்டம். நேரம் சரியில்லை...கவனமாக இருங்க மதுரை. மன வலிமை இருந்தால் எதையும் கடந்துவிடலாம். நடப்பது நடந்தே தீரும். (நல்ல மனசுக்கு ஒன்றும் ஆகாது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாம் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துதான் ஆக வேண்டியுள்ளது)

    என்ன கஷ்டம் வந்தாலும் நகுக என்பது போலக் கடைசில உங்கள் ட்ரேட்மார்க்!!

    கவனமாக இருங்க.

    கீதா




    ReplyDelete
    Replies
    1. நான் நடப்பதை மறந்து அடுத்த வேலையை பார்க்க சென்று விடுகின்றேன்,, ஆஅனால் என் மனைவி அவளும் கொரோனாவால் பாதித்து இருந்தார். ஆனால் அவரால் அதில் இருந்து இன்னும் மீண்டும் வரமுடியவில்லை.. அதன் பயம் இன்னும் இருக்கிரது அவருக்கு....

      Delete
  5. எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும் என்றாலும் கவனமாக இருங்கள் மதுரைத்தமிழன்.... பெண் பெயரில் முகநூல் கணக்கு..... :) சரிதான்! மதுரை தமிழச்சி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்! :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா மதுரைத்தமிழச்சி நல்ல ஐடியாவாக இருக்கே

      Delete
  6. மதுரைத்தமிழன் வழக்கமாக பூரிக்கட்டை அடி என்று படங்கள் போட்டு நகைச்சுவை செய்யும் உங்களின் பதிவு அப்படியான ஒன்றுதானோ என்று நினைத்து வாசித்தால் உண்மையாகவே கண்டம் தான். மன உறுதியோடு கடந்து செல்வது நல்ல விஷயம். நடப்பதை யாராலும் தவிர்க்க இயலாது. கவனமாக இருங்கள் என்று மட்டுமே சொல்ல இயலுகிறது.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் கஷ்டமே இல்லை ஆனால் பூரிக்கட்டையை நினைத்தால்தான் மனம் நடுங்குகிறது துளசி சார்

      Delete
  7. என்னதான் நாம் சிரிப்பாக பேசினாலும் வாழ்க்கையில் உடல்நிலை சரி இல்லாமலோ அல்லது வேறு பிரச்சனை வந்தாலோ சில சமயங்களில் கொஞ்சம் தடுமாறித்தான் போகிறோம் இது நிதர்சனம்
    இருந்தாலும் உங்க நல்ல மனசுக்கு ஒன்றும் ஆகாது என்னும் வார்த்தைகள் ஒரு வைட்டமின் மாத்திரை போல

    ReplyDelete
  8. என்னதான் நாம் சிரிப்பாக பேசினாலும் வாழ்க்கையில் உடல்நிலை சரி இல்லாமலோ அல்லது வேறு பிரச்சனை வந்தாலோ சில சமயங்களில் கொஞ்சம் தடுமாறித்தான் போகிறோம் இது நிதர்சனம்
    இருந்தாலும் உங்க நல்ல மனசுக்கு ஒன்றும் ஆகாது என்னும் வார்த்தைகள் ஒரு வைட்டமின் மாத்திரை போல

    ReplyDelete
    Replies

    1. நம்மால் முடிந்தவரை கவனமாக இருப்போம் மீதி கடவுளின் செயல் என்று இருந்துவிடுவேன். கடவுள் நம்பிக்கை அதிகம் அதே சமயத்தில் மதம் சார்ந்த மூட நம்பிக்கைகள் கிடையாது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.