Saturday, February 5, 2022

 

@avargal unmaigal


தமிழில் புத்தகங்கள் எழுதி வெளியிடுபவர்களின் நிலை இதுதான் 


அவர்கள் புத்தகம் வெளியிடுவதற்கு முன்பு

தல நீங்கள் மிக அருமையாக எழுதுகிறீர்கள் உங்கள் எழுத்துகள் புத்தக வடிவில் வெளிவந்து பல மக்களைச் சென்று அடைய வேண்டும்.


சார் உங்கள் எழுத்துக்கள் சமுகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நிச்சயம் நீங்கள் புத்தக வடிவில் வெளியிடுங்கள்.


புத்தகம் வெளியிடுவதற்கான அறிவிப்பு செய்த பின்

1000 லைக்ஸ்கள்

500 பாராட்டுக்கள்

400  வெற்றி பெற வாழ்த்துக்கள்

100 அருமை

100 கலக்கிறீங்க தல

50  மின் புத்தகமாகக் கிடைக்குமா?

10 பிடிஎஃப் லிங்க் ப்ளிஷ்

15 வெளிநாடுகளிலிருந்து அதை எப்படி வாங்குவது

 

#avargal unmaigal




புத்தகம் வெளியிட்ட பின்

வெளியிட்ட புத்தகத்தின் எண்ணிக்கை 500

மொத்த புத்தக விற்பனை 50


புத்தகம் வெளியிட்டவர்களின் மன நிலை


இவனுங்க பாராட்டுதலையும் வாழ்த்தையும் நம்பி நாம் பணம் செலவழித்தது எல்லாம் வேஸ்ட்



இப்படி வாழ்த்தினவர்களும் பாராட்டியவர்களும் தங்கள் குடும்ப விஷேசத்திற்குக் கூப்பிட்டால் அதற்கு இந்த புத்தகத்தைப் பரிசாகத் தந்துவிட வேண்டும்

சிறுகதைப் போட்டி வைத்து மற்ற நண்பர்களையும் பாராட்டி  எழுத வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நம் புத்தகத்தைப் பரிசாகக் கொடுக்க வேண்டும்

அதுமட்டுமல்ல மற்றவ்ரளையும் இப்படிப் பாராட்டி வாழ்த்தி அவர்களை புத்தகங்கள் எழுத வைத்து அவர்களையும் நஷ்டப்பட வைக்க வேண்டும்


அப்புறம் குடிகாரகள் மாதிரி நாமும் புத்தக வெளியீட்டுக்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் புத்தகங்களை வெளியிட வேண்டும்


சமுக வலைத்தளங்களில் வாழ்த்துவதற்கும் பாராட்டுவதற்கும் பணம் செலவாவதில்லை ஆனால் புத்தகங்கள் வாங்குவதற்கு என்றால் பணம் செலவாகும் அப்படியே செலவு செய்து வாங்கினாலும் அதைப் படிப்பதற்கு யாருக்கு நேரம் இருக்கிறது  அதை வைக்கவும் இடம் வேண்டு என்பதால்தான் பலரும் வாங்குவதில்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : புத்தகங்கள் வாங்குவது என்பது படிப்பதற்குதானே தவிர உங்கள் புத்தக அலமாரியை அலங்கரிக்க அல்ல.  உங்களுக்குப் பணம் கொடுத்து புத்தகம் வாங்குவதற்கு வசதி இருந்து ஆனால் படிக்க நேரம் இல்லாவிட்டாலும் புத்தகங்களை வாங்கி அருகில் உள்ள ஏழை எளியவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கலாம் அவர்களும் படித்து தங்களது அறிவை வளர்த்துக் கொள்ளலாம் உலகையும் புரிந்து கொள்ளலாம். புத்தகங்கள் வாங்க முடியாத மாணவ மாணவிகளுக்கு வாங்கியும் தரலாம்



@avargal unmaigal

10 comments:

  1. டிட்டோ!!!

    டிஸ்கி நல்ல கருத்து.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பேஸ்புக்கில் ஒருத்தர் நான் புத்தகம் போடுகிறேன் என்று சொன்னதும் வாழ்த்தியவர்களில் ஒருவர் கூட என் புத்தகங்களை வாங்கவில்லை என்று போட்டு இருந்தார் அதுவே இந்த பதிவிற்கு காரணம். பலர் புக் வாங்காதற்கு காரணம் படிக்க நேரமில்லை என்று சொல்வதால் படிக்க நேரம் இருப்பவர்களில் ப்லருக்கு அதை பணம் கொடுத்து வாங்க முடியாத நிலையில் இருப்பதால் வாங்கி ஷேர் செய்யலாமே என்று சொல்லி முடித்தேன் அது என் மனதிற்கு சரியாகபட்டது

      Delete
  2. நல்ல கருத்து. புத்தகங்கள் போடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. என் அப்பா போட்ட புத்தகங்களின் கதியைப் பாத்தவன் நான்!

    ReplyDelete
    Replies
    1. முந்தையகாலத்தில் படிப்பவர்கள் அதிகம் ஆனால் எழுதுபவர்கள் குறைவு மேலும் அந்த காலத்தில் சமுக இணைய தளங்கள் கிடையாது என்பதால் புத்தகங்கள் அதிகம் வாங்கப்பட்டன. இந்த காலத்தில்லும் படிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றுதான் சொல்லுவேன் இருந்தாலும் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம் எண்ணற்ற புத்தகங்கள் அதிக அளவில் வெளிவருவதால் அவரவர்கலுக்கு பிடித்த புத்தகங்களை வாங்குகிறார்கள் மேலும் இணையத்தில் பலர் மிக அருமையாக எழுதுகிறார்கள் அதை படித்து முடிக்கவே ப்லருக்கும் நேரம் இருப்பதில்லை என்பதுதான் உண்மை

      Delete
  3. புத்தகங்கள் வெளியிடுவது பற்றி சரியாக சொல்லியிருக்கிறீர்கள். அச்சுப் புத்தகம் வெளியிட்டு விற்காமல் அவதிப்பட்ட பலர் பார்த்ததுண்டு.

    ReplyDelete
    Replies
    1. நானும் பார்த்து இருக்கின்றேன் அதனால்தான் பதிவாக என் பாணியில் சொல்லி இருக்கின்றேன். அந்த விஷயத்தில் நீங்கள் மிக ஸ்மார்ட் வெங்க்ட்ஜி. பாராட்டுக்கள்

      Delete
  4. 💯 உண்மை தமிழரே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.