Thursday, June 1, 2017

எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?


ஒரு நாள் என் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த போது நான் அவரிடம் கேட்டேன் அம்மா நான் உனக்குதான் பிறந்தேனா அல்லது எங்காவது அனாதை ஆசிரமத்தில் இருந்து என்னை தத்து எடுத்தீர்களா என்று கேட்டேன்.



அதற்கு அவர்   எனக்கு என்ன பைத்தியாமா பிடிச்சிருக்கு உன்னை மாதிரி லூசு  பயலை தத்து எடுப்பதற்கு என்று சொல்லி சிரியோ சிரி என்று  சிரித்தார்.....



சரி அதைவிடுங்க ஒரு நாள் மனைவியிடம் உனக்கு அறிவு இருக்குதா என்று கேட்டேன் அதற்கு அவள் சொன்னாள் உண்மையிலேயே எனக்கு அறிவு இல்லைங்க அது மட்டும் இருந்திருந்தால் லூசப் பயலான உங்களை கல்யாணம் பண்ணி இருக்கவே மாட்ட்டேனே என்றாள்


நானும் என் மனைவியும் இந்தியாவிற்கு வந்த போது ஒரு கோயிலுக்கு அருகே ஒரு ஜோசியகாரன் அம்மா வாங்கம்மா எங்கிட்ட ஜோசியம் பாருங்க என்றான்.

என் மனைவியும் உடனே ஒகே என்றாள் உடனே அந்த ஜோசியக்காரன் அம்மா உங்க கணவரின் எதிர்காலப் பலனை சொல்லுகிறேன் என்றான்

உடனே என் மனைவி குறுக்கிட்டு ஜோசியக்காரரே அவரின் எதிர்காலம் என் கையில்தான் இருக்கிறது அதனால அதை பற்றி சொல்ல வேண்டாம் அவரின் வாழ்க்கையில் கடந்த காலங்களில் நடந்ததை மட்டும் சொல்லுங்கள் என்றாள்.


நான் உடனே பதறி போய் என் மனைவிக்கு தெரியாஅமல் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை அவன் கண்ணில் படும்படி தரையில் நழுவவிட்டேன் அவன் புத்திசாலி ஜோசியக்காரன் அதன் பின் அவன் என்னை பற்றி நாலு நல்ல வார்த்தை சொன்னான். நல்லவேளை அன்று என் தலை தப்பியது



ஒரு நாள்ஷாப்பிற்கு மனைவி மற்றும் மகளுடன் சென்று இருந்தேன் அப்போது மனைவி ஒரு பொருளை பார்த்து அதை வாங்குவோம் என்றாள் நான் ஒகே ஆனால் 100 பவுண்ட் வெயிட்டுக்கு மேலாக இருக்கும் அதனால் அதை என்னால் தூக்க முடியாது  அதனால் அதை  வீட்டிற்கு டெலிவரி செய்ய சொல்வோம் என்றேன்

அதை கேட்ட என் குழந்தை குறிக்கிட்டு டாடி நீ பக்கத்து வீட்டு ஆண்டியை அன்று தூக்கினதை நான் பார்த்தேன் அந்த ஆண்டி 100 பவுண்டுக்கு மேல் இருப்பாளே அவளையே தூக்கிய உனக்கு இது எல்லாம் சஒரு வெயிட்டா என்று கேட்டாள்


அவ்வளவுதாங்க அதுக்கு அப்புறம் என்னை நாலுபேர் ஸ்டெச்சரில் தூக்கி   ஹாஸ்பிடலுக்கு டெலிவரி பண்ணினாங்க


அன்புடன்
மதுரைத்தமிழன்
01 Jun 2017

16 comments:

  1. கடந்த காலத்தை மறைக்க 1000 ரூபாயா!!!

    நகைச்சுவைத் துணுக்குகள் ரசித்தேன்.

    ReplyDelete
  2. ஹாஹாஆ :) அம்மா சரியா சொன்னாங்க :)
    உங்க மனைவியும் தான் மிக சரியா சொன்னாங்க ,
    மாமி :) அடுத்த முறை ஜோசியம் பார்க்க போகும்போது இவர் ரெண்டு கையையும் பின்னால் கட்டிடுங்க கண்ணையும் வாயையும் கூட விட்டு வைக்காதிங்க அப்போதான் கடந்த நிகழ் எதிர் காலம்லாம் ஜோஸ்யக்காரர் வாயிலிருந்து தங்கு தடையில்லாம வரும் .
    மாமி இங்கே வாங்க இன்னொரு விஷயமும் இருக்கு நேத்து இவர் அதிராவின் ஸ்கூல் டீச்சர் அதான் குளுகுளு டீச்சர் அட்ரஸை கேட்டாரா அதிராகிட்ட நோட் திஸ் point :)
    அடிக்கடி ஸ்ட்ரெச்சரில் ரெஸ்ட் எடுக்கும்போதே எவ்ளோ கலாட்டா பாருங்க மக்களே இவருக்கு :)

    ReplyDelete
  3. வடிவேலு சொல்கிற மாதிரி
    பூராவும் வில்லங்கமா இல்லை இருக்கு
    அப்புறம் ஸ்ரட்சரில் போகாமா
    சாரட்டிலா போக முடியும் ?
    விரைவில் குணம் பெற வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  4. உங்க நிலைமை பாவமாக இருக்கிறதே நண்பரே...
    த.ம.

    ReplyDelete
  5. இம்மாதிரி கிளுகிளுப்பான பதிவுகள் அடிக்கடி வருவதாலன்றோ தாங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள்!

    ReplyDelete
  6. அருமை பூரிக்கட்டை அடி சூப்பர்))) ஆஸ்பத்திரியில் இருந்து மீண்டுவிட்டீங்க)))

    ReplyDelete
  7. அதே ஹாஸ்பத்திரி?! அதே பெட்டா?!

    ReplyDelete
  8. நாம மதுரைல பெரிய ப்ளே பாய்ன்னு அண்ணிக்கு தெரியாமலேயே போய்டுமோ?!

    ReplyDelete
    Replies
    1. மதுரை, அமைதி பூங்காவா இருக்கிற ரகசியம் இப்போதானே தெரியுது :)

      Delete
  9. அருமை
    ரசித்தேன்

    ReplyDelete
  10. அரசியல் பகடி தவிர வேறு விதமாகவும் எழுதுகிறீர்களே வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ஜி எம் பி சார்! இப்படி எழுதித்தானே பூரிக்கட்டை உலகம் முழுக்க ஃபேமஸ் ஆனது!! இன்னும் இப்படி நிறைய எழுதியிருக்கார். பழைய பதிவுகளைக் கிண்டினால் கிடைக்கும் சார்...

      கீதா

      Delete
  11. துளசி: ஹஹஹஹஹ் இப்படி எல்லாம் மகளிடம் மாட்டிக் கொண்டீர்களா மதுரைத் தமிழன்.....

    கீதா: வாசித்துச் சிரித்துக் கொண்டே வந்தோம்....உங்க பொண்ணு சொன்னதை வாசித்ததும் குபுக்கென்று சத்தமாகச் சிரித்து....ஐயோ ...நீங்க மட்டுமா பூரிக்கட்டை அடிவாங்கி ஆஸ்பத்திர்யில? நாங்க வயிறு வலிச்சு ஆஸ்பத்திரியில..ஹஹஹ...

    ReplyDelete
  12. சரி சரி கடந்த காலத்துல நீங்க மதுரைல ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணிடம் கடலை போட்டத எப்பவோ சொல்லியிருந்தீங்களே...அதை நாங்க சொல்லிடறோம்..என்ன சொல்றீங்க மதுரை...
    ஹஹஹ்
    கீதா

    ReplyDelete
  13. குசும்புகளின் தொகுப்பு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.