Wednesday, July 5, 2017

#narendramodi
எனக்கு பிடித்த மோடியை உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்


அது என்னவோ தெரியலைங்க எனக்கு இப்போவெல்லாம் மோடியை ரொம்பவே பிடிக்கிறதுங்க... அதுக்கு காரணம் என்னவென்று யோசித்த பின் மனதில் தோன்றியது இதுதானுங்க...


காங்கிரஸ் ஆட்சியில் ஆரம்பித்து வைத்த திட்டங்களை மோடி இப்போது அதை திறந்து வைப்பதும் , காங்கிரஸ் ஆட்சி காலங்களில் கொண்டு வர முயற்சித்த திட்டங்களை எல்லாம் அப்போது கடுமையாக எதிர்த்த மோடி அதை இப்போது செயல்படுத்தி கொண்டு இருப்பதால் எனக்கு மோடியை ரொம்ப பிடிக்கிறதுங்க.....


இந்திய தேசபக்தர்கள் அமெரிக்கா அதிபர் டோனால்ட் ட்ரெம்பை கடுமையாக எதிர்த்த போதும் அமெரிக்க அதிபரிடம் இருந்து பாராட்டை பெற்ற மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கிறது.

அமெரிக்க வரும் போது H1B விசாவை பற்றி டோனல்ட் டிரம்பிடம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு அமெரிக்க  வந்த பின் அதிபரிடம் எடுத்து கூறிய போது அதற்கு டிரெம்ப் உமக்கு அமெரிக்க வர தொடர்ந்து விசா வேண்டுமா அல்லது இந்திய மக்களுக்கு H1B விசா வேண்டுமா என்று கேட்ட போது எனக்கு மட்டும் விசா கொடுத்தால் போதும் என்று பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்ட மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கிறது

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட்டும் விண்வெளிக்கு தொடர்ந்து ராக்கெட்டும் விடும் திறமை நமக்கு இருந்தும் நமது நட்பு நாடான அமெரிக்காவின் நலிவுற்ற பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்காக அமெரிக்காவிடம் இருந்து நூற்றுகணக்கான போர்விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்த மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கிறதுங்க

நமக்கு தொல்லை தரும் பாகிஸ்தான் அரசையும் இராணுவ வீரர்களையும் கொஞ்சமும் பாதிக்காத வகையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற விடியோவை மட்டும் எடுத்து வெளியிட்டு மனித சேதம் இல்லாமல் இந்திய தேசபக்தர்களை மகிழ்விக்கும் மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கிறதுங்க


காரச்சியில் பிறந்தவர்  அத்வானி அவர் தன் கட்சியின் தலைவாராக ஒரு காலத்தில் இருந்த போதும் அவருக்கு ஜனாதிபதவிற்கு வாய்ப்பி தராமல் இருந்த மோடியின் தேசபக்தியை கண்டு என் மனம் புல்லரிப்பதால் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கிறதுங்க


இந்திய விவசாயம் அல்லது விவசாயிகள் அழிந்தாலும் மனம் தளராமல் இந்தியாவை எப்படியாவது வல்லராசாக்கிவிடுவது என்று மன உறுதியுடன் டிஜிட்டல் இந்தியாவிற்க்காக உழைக்கும் மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கிறதுங்க


கங்கையை சுத்தம் செய்கிறேன்  என்று சொல்லி இந்தியாவையே சுத்தம் செய்யும் மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கிறது.

மருத்துவ சீட்டிற்க்காக இந்தியா முழுவதும் நீட் என்ற பொது தேர்வை அறிமுகப்படுத்திவிட்டு தனக்கு வேண்டிய மாநிலங்களுக்கு மட்டும் எளிமையான கேள்விதாளை அறிமுகப்படுத்திய  மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கிறது.


இறுதியாக இந்திய மக்கள் அனாவசியமாக  பேங்கில் வைத்திருக்கும் பணத்தை எல்லாம்  ஜிஎஸ்டி வரி மூலம் திரட்டி கொண்டிருக்கும் மோடியை ரொம்பவே பிடிக்கிறது இந்த வரி போதாது இன்னும் அதிக அளவில் வரி விதித்து மக்களை மேலும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த வாழ்த்துக்கள்



எனக்கும், தமிழிசை பொன்.இராதா , ஹெச்.ராசா, வானதி மற்றும் இந்திய தேசபக்தர்களுக்கும் மேலே சொன்ன காரணங்களுக்காக மோடியை ரொம்ப பிடிக்கிறது...... இதை படித்த பின் நீங்கள் தேசபக்தர்களாக இருந்தால் உங்களுக்கும் நிச்சயம் மோடியை பிடிக்கும்



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இணையத்திற்கு வர முடியாத சூழ்நிலையில் இருந்ததால் என்னால் பதிவுகள் போட இயலவில்லை. அந்த நேரத்தில் அன்போடு விசாரித்த விசு மற்றும் கீதா இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

10 comments:

  1. எனக்கும் பிடிக்கும்...... ஆனா..... பிடிக்காதூ
    த,ம,1

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி

      Delete
  2. தங்கள் பதிவுகள் இல்லாதது
    எதையோ இழந்ததைப் போலவே
    இருந்தது.ஆயினும் ஏற்கெனவே
    கூடுதல் பணி நிமித்தம் வர இயலாத
    காரணத்தைச் சொல்லி இருந்ததால்
    கொஞ்சம் எதிர்பார்ப்பை அடக்கி வைத்திருந்தோம்

    இந்த வாரம் வரவில்லையெனில்
    அதற்கென தனிப்பதிவு வெளியிட
    ஆயத்தமாகி அதற்கென பல்லவி
    கூடத் தயார் செய்து விட்டேன்

    "தேரோட்டம் இல்லாத திருவிழாபோல
    நீரோட்டம் இல்லாத காவிரி போல
    கண்ணவனில்லாத கோகுலம் போல..."

    நல்லவேளை இன்று பதிவு போட்டு
    ஒரு கவிதையைக் காப்பாற்றி விட்டீர்கள்

    வழக்கம்போல் வித்தியாசமான
    சுவாரஸ்யமான அரசியல் ஆதங்கப்பதிவுடன்
    தொடங்கிய பதிவுகள் இனி
    வழக்கம்போல் தொடர வேண்டி
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. இந்த கருத்தே கவிதையாகத்தான் இருக்கிறது, இன்னும் ஒரு வாரம் தாமதித்து வந்து இருந்தால் ஒருவேளை காவியமே வந்து இருக்குமோ ஹும்ம்ம் அதை கெடுத்துவிட்டேனோ?

      Delete
  3. ஹை! அட! வாங்க மதுரை!!! வந்துட்டீங்களா!! சூப்பர்...வரும் போதே இப்படி ஒரு பதிவுடன் ஹஹஹ்...நாங்க நினைச்சோம் பூரிக்கட்டை அடி இந்த வாட்டி கொஞ்சம் அதிகம் போல அதான் ஆளைக் காணலை..அடி பற்றி கூட எழுத முடியாத அளவுனு ஏன்னா உங்க கடைசி பதிவு அப்படியான பதிவு இல்ல??!! ஹஹஹஹ் வந்தது மிக்க சந்தோஷம்....கலக்குங்கபா வழக்கம் போல...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காகவே இந்த பதிவு.....முன்பு போல அடிக்கடி பதிவு இட முடியாவிட்டாலும் அவ்வப்போது முடிந்த வரையில் பதிவுகள் இடுகிறேன்..
      .

      Delete
  4. உணமை நண்பரே!

    ReplyDelete
  5. நேக்கும் பிடிச்சுருக்கு அத்திம்பேர்

    ReplyDelete
  6. அருமை நண்பரே

    ReplyDelete
  7. வலையுலகில் கலகலப்பான பதிவுகள் தருவது மதுரைத் தமிழன் மட்டுமே.எழுதாவிட்டாலும் அவ்வப்போது ரசித்துப் படித்து மகிழ்வது உண்டு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.