பிக் பாஸும் கூறுகெட்ட தமிழர்களும்
பிக் பாஸ் ஷோவிற்கு கமல்ஹாசனின் விளம்பரம் வந்து கொண்டிருந்த போது அறிவிஜிவியாக தன்னை கருதும் கமலஹாசன் ஒரு அறிவார்ந்த ஷோ ஒன்றை நடத்த போகிறார் போல என்று நான் நினைத்து கொண்டிருந்தேன். ஒரு நாள் டிவியை ஆன் செய்யும் பொது அன்றுதான் பிக்பாஸின் தொடக்க ஷோவாக இருந்த சரி இந்த ஷோவில் அப்படி என்னதான் சொல்லப் போகிறார்கள் என்று நினைத்த போது இது ஒரு மேலை நாட்டு ஷோவை காப்பி அடித்து தமிழக மக்களுக்கு ஏற்ற வகையில் தரப்படும் ஒரு ஷோ என்று புரிந்தது. அப்பதான் எனக்கு புரிந்தது அறிவுஜிவி கமலஹாசன் ஒரு அறிவார்ந்த ஷோதருவார் என்று நாந்தான் அறிவு கெட்டதனமாக நினைத்து கொண்டு இருந்திருக்கிறேன்
கூத்தாடிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பணம் சம்பாத்தித்து சமுகத்தில் ஒரு உயர் நிலையை அடையும் போது தமிழர்களாகிய நாம் அந்த சமுகத்தால் உயர் நிலை அடைந்த அந்த கூத்தாடிகள் இந்த சமுகத்திற்கு நல்லது செய்வார்கள் என்று நம்புவது வழக்கமாகிவிட்டது. ஆனால் சமுகத்தில் நல்ல நிலையை அடைந்த கூத்தாடிகள் தாங்கள் நல்ல நிலைமைக்கு வந்தாலும் நாங்கள் கூத்தாடிகளாகவே இருப்போம் இந்த சமுகத்திற்கு ஒரு துளிகூட நல்லது செய்யமாட்டோம் என்று நினைக்கிறார்கள் போல அதனால்தான் கமலஹாசன் ரஜினி போன்ற உயர் நிலையை அடைந்த கூத்தாடிகள் சமுகம் பற்றி சிந்திக்காமல் தங்கள் நலனை மட்டும் சிந்தித்து கொண்டிருக்கிறார்கள் அதனால்தான் இந்த கண்றாவி ஷோ அல்து மோசமான அரசியல்வாதிகளுடன் சேர்ந்து செயல்படுவது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று கொண்டிருக்கின்றனர்
பிக் பாஸ் ஒரு ரியாலிட்டி ஷோ என்று புரிந்ததும் அதுவும் அது விஜய்டிவி தயாரிப்பு என்றதும் அது எப்படி இருக்கும் என்று புரிந்தது. விஜய் டிவி ஷோ என்றாலே அதில் உண்மை துளிக் கூட இருக்காது அது நீயா நானா ஷோவாக இருந்தாலும் சரி. எல்லாமே முன்பே திட்டமிடப்பட்டு என்ன கருத்தை எப்படி திணிப்பது எப்படி மக்கள் உணர்வை தூண்டுவது அதில் விளையாடுவது அதன் மூலம் டி ஆர் பி ரேட்டை ஏற்றி அதன் மூலம் விளம்பரங்களை அதிகம் பெற்று பணத்தை அறுவடை செய்வதுதான் அவர்களுது தலையாண நோக்கம்..
அதனால் இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவிலும் அழுகையும் சண்டையும் நிச்சயம் வரும் அதுவும் கமல்ஷாசனும் பங்கேற்று நடத்துவதால் அதில் கட்டிபிடி வைத்தியங்களும் முத்தங்களும் கண்டிப்பாக இடை பெறும் என்று முதல் நாள் ஷோவை பார்த்தது நினைத்தேன் அதன்படியே அந்த ஷோவும் நடை பெறுவதாக அறிகிறேன். அறிகிறேன் என்று நான் சொல்வதற்கு காரனம் முதல் நாள் ஷோவைதவிர மற்ற நாட்களில் வந்த ஷோவை நான் பார்க்கவில்லை ஆனால் நேற்றுமட்டும் டிவி ஆன்பண்னியதும் அந்த ஷோ வந்தது சில நிமிஷங்கள் அதை பார்த்தேன் அதில் கஞ்சா கருப்பை வெளியேற்றும் நிகழ்ச்சி நடை பெற்று கொண்டிருந்தது.அவரை ஏன் ஏதற்காக வெளியேற்றுகிறார்கள் என்ரு தெரியவில்லை ஆனால் ஒன்றுமட்டும் புரிந்தது கமல்ஹாசனுக்கு அந்த ஷோவை நடத்த கூட தெரியவில்லை என்பது பார்த்த 10 நிமிடங்களும் படு கேகலமாக இருந்தது. இதையா தமிழக மக்கள் விழுந்து விழுந்து பார்க்கிறார்கள் . ஹும்ம்ம்
முதல் ஷோ நடந்ததும் சமுக வலைதளங்களில் இந்த நடத்தும் கமலஹாசன் பெர்பமன்ஸ் சரியில்லை என்ரு கருத்துக்கள் பரவ ஆரம்பித்ததும் என்னடா கமலஹாசனை நம்பி இவ்வளவ செலவு செய்து நாம் ஷோவை நடத்துகிறோம் ஆனால் அதற்கு எதிர்மறையாக கருத்துகள் வர ஆரம்பிக்கிறது இப்படி வந்தால் நம்ம பிழைப்பிற்கு கஷ்டம் என நினைத்து அதற்கு அடுத்து வரும் நாட்களில் ஆட்களை வைத்து சமுக வலைத்தளங்களில் பிக்பாஸில் பங்கேற்ப்வர்களை பற்றி முக்கியமாக ஜுலியா என்ற பெண்னை கிண்டல் கேலி செய்து மீம்ஸ் மற்றும் கருத்துகளை பகிர்ந்து உலாவவிட்டது. அதனை தொடர்ந்து சமுக வலைதள பதிவர்கள் மீம்ஸ் க்ரியேட் பண்னுவர்களும் உடனே பிக்பாஸை வைத்து செய்ய ஆரம்பித்தார்கள் இதைத்தான் விஜய்டிவி நிர்வாகமும் எதிர்பார்த்தது. அவர்கள் எதிர்பார்த்து போலவே இந்த சமுகவளைதளங்களில் வந்த எதிர்மறையான கருத்துக்கள் மக்களை சென்று அடைந்து எல்லா மக்களும் இந்த ஷோவை பார்க்கவைத்துவிட்டன. நம்ம தமிழர்களுக்குதான் ஒரு பயனுமில்லாத விஷயமாக இருந்த்தாலும் மற்றவ்ர்கள் பேசுகிறார்கள் என்பதால் அதையே தாங்களும் பேசி தங்களை பாதிக்கிற விஷயங்களை மறந்துவிடுவார்கள் அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது தமிழகத்தில் மக்களின் வாழ்வு ஆதாரங்களை பாதிக்கும் பல நிகழ்வுகள் பரவாலாக நடந்து கொண்டிருந்த போதிலும் அதில் கவனம் செலுத்தாமல் வீணாப் போனஷோவை பார்த்து கருத்துகள் சொல்லி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். உடனடியாக பாதிக்கிறவர்கள் கூக்குரல் இடும் நேரத்தில் அதை கண்டுக் கொள்ளாமல் அதனால் வருங்காலத்தில் தாங்களும் பாதிக்கப்படுவோம் தங்க சந்ததிகளும் பாதிக்கப் படுவோம் என்று கூட சிறிதும் சிந்தனை இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்காக குரல் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்
இந்த நிகழ்ச்சியை நடத்தும் விஜய்டிவி நிர்வாகத்தினர் கோடிக்கணக்கிலும் அதில் பங்கேற்றபவர்கள் கோடியிலும் லட்சத்திலும் சாம்பாதிக்க்கிறார்கள் ஆனால் தமிழக மக்களோ அதை பார்த்து தங்கள் வாழ்வாதாரங்களை பாதிக்கும் நிகழ்வுகளை பற்றி அறியாமல் காலத்தை வீணாக்கி கொண்டு இருக்கிறார்கள்
விஜய் டிவி இந்த ஷோவிற்க்காக 100 கோடி அளவிற்கு முதலீடு செய்து நடத்துகிறது இதில் கமலிற்கு மட்டும் 30 கோடி என்றும் மற்ற பங்கேற்ற்பாளர்களின் தகுதிகளுக்கு ஏற்றவாறு வாரத்திற்கு ஒரு லட்சத்தில் லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரையும் மீதி விளம்பரங்களுக்கும் ஷோ நடத்துவதற்கும் பயன்படுத்தபடுகிறது என்றும் செய்திகள் வந்து இருக்கிறது.இதில் பங்கேற்றபவர்கள் முதல் இரண்டு மாதத்திற்கு கண்டிப்பாக பங்கேற்றக்கவேண்டும் அப்படி இல்லாமல அவர்கள் விலகினால் விஜய் டிவி நிர்வாகம் சொன்னபடி பணம் தர வேண்டியது மட்டுமல்லாமல் பங்கேற்பவர்கள் மிகப் பெரிய அபராதம் செலுத்த வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம்.
சரி இவ்வளவு செலவு செய்யும் விஜய்டிவிற்கு எப்படி லாபம் கிடைக்கிறது என்று நினைக்கிறீர்களா? எல்லாம் விளம்பரங்களும் மூலம்தான் அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது முப்பது வினாடி வரக் கூடிய விளம்பரத்திற்கு குறைந்த பட்சம் 25 லட்சத்திற்கும் அதிகமாக வசூலிக்கப்படுகிறதாம். விளம்பரங்கள் நிகழ்ச்சியில் 25 நிமிடம் நேரத்தை எடுத்து கொள்கின்றன.
இந்த நிகழ்ச்சிக்கு பல கோடிமக்கள் வாக்களித்தார்கள் பார்க்கிறார்கள் என்று சொல்வதும் ஒரு விளம்பர பொய்யே இப்படி சொல்லுவதன் மூலம் அதிக மக்கள் பார்க்கிறார்கள் என்று நம்பவைத்து மேலும் பார்க்காத மக்களை பார்க்க செய்வதும் விளம்பரதாரர்களிடம் அதிக அளவு பணம் கறப்பதும்தான் விஜய் டிவி நிர்வாகத்தினரின் முயற்சி அதில் அவர்கள் வெற்றி கண்டு கொண்டு இருக்கிறார்கள் என்பதும் நிஜம்
இந்த ஷோவினால் அதிகம் ஏமாந்தவர்கள் யார் என்றால் அவர்கள் விளம்பரதாரர்கள் முன்னனியில் இருக்கிறார்கள் அதன் பின் மக்கள் இருக்கிறார்கள். விளம்பரதாரார்கள் தங்கள் பொருளின் தரத்தை உயர்வாக நினைக்காமல் விஜய்டிவியின் தரமற்ற நிகழ்ச்சிகளை நம்பி தங்கள் பொருட்களை விளம்பரம் செய்வதுதான் பரிதாபத்திற்குரியது.
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஆதங்கம் வழியும் பதிவு....
ReplyDeleteஒன்னும் சரியாகிற மாதிரி தெரியலை
நல்ல வேளை நான்
ReplyDeleteஇந்த லிஸ்ட்டில் இதுவரை இல்லை
நீங்கள் எழுதிய பின் இனியும்
சேராதிருக்கவும் முடிவு செய்துவிட்டேன்
விஜய் டீவி நிகழ்ச்சிகள் எல்லாமே காபிதான்! ஒரு கோடி வெல்லும் கோஈஸ்வரர் முதல் டாக் ஷோ வரை!
ReplyDeleteபணம்... பணம்... பணம்...
ReplyDeleteநன்றி
ReplyDeleteசோழியன் குடுமி சும்மா ஆடாது
ReplyDeleteதுளசி: ஏற்கனவே ஹிந்தியில் நடக்கிறது என்று நினைக்கிறேன். இப்போது தமிழிலும் வந்து விட்டது. அடுத்து கேரளத்திற்கும் வந்துவிடுமோ??!!
ReplyDeleteகீதா: இதெல்லாம் ஒரு ப்ரோக்ராமா? உங்கள் கருத்துகள் அனைத்தும் சரியே! ஆனால், நாம் அதிகம் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசுகிறோமோ? விஜய் டிவியின் ஸ்டார் நெட்வொர்க்கில் விஜய் இருப்பதால் அதன் எல்லா ப்ரோக்ராமுமே ஸ்டார் நெட்வொர்க்கின் மேலை நாடுகளில் நடப்பவற்றின் காப்பி என்றே படுகிறது. நாம் இதைப் பற்றிப் பேசப் பேச இதில் அப்படி என்னதான் இருக்கு என்று இதுவரை பார்க்காதவர்கள் கூடப் பார்ப்பார்களோ என்றும் தோன்றுகிறது சகோ..
இதுவரை பார்க்கவில்லை.ஏனோ என்னை ஈர்க்கவில்லை. எந் நேரத்தில் ஒளி பரப்பப் படுகிறது எனபது தெரியாது/
ReplyDeleteஷோவை விடுங்க அது எப்போதும்போல் ரேடிங்கை குறிவைத்தே நடப்பது இந்த விளம்பரம் பத்தி சொன்னீங்க பாருங்க அதுதான் உண்மை
ReplyDeleteநானும் பார்ப்பதில்லை
ReplyDelete