Thursday, July 13, 2017

#Modi @avargal_unmaigal #IndianPoliticalSatire
வாய்ல வடை சுடும் அரசு ?!


1962 இந்தியா தோல்வியின் பாடம் மீண்டும் வேண்டுமா என சீனா பத்திரிகை புகைப்படம் போட்டு செய்தி வெளியிட்டது,
பத்து கோடி ரூபாய் அபராதம் என தமிழக மீனவர்களுக்கு இலங்கை எச்சரிக்கை விடுக்கிறது
அமர்நாத் யாத்ரிகர்கள் மீது துப்பாக்கி சூடு, இன்று இரு இந்திய ராணுவ வீரர்கள் மரணம்.

வாய்ல வடை சுடும் அரசை வைத்துக் கொண்டு என்ன செய்வது ? இதை சாப்பிடாதீங்க அதை சாப்பிடாதீங்க ... இப்படி கல்யாணம் பண்ணனும் அப்படி விவாகரத்து பண்ணனும் இவைகளுக்கு எல்லாம்தான் சட்டம் போட நேரம் சரியாக இருக்கிறது .. பதன் கோட் , ஊரி, போன்ற நாட்டின் ராணுவ தளத்தையே அசைத்து பார்க்கும் தீரவிரவாதம் அரங்கேறியுள்ளது .அதை மோடி அரசு வேடிக்கை மட்டும் பார்க்கிறது வெட்டி பந்தா செயகிறது


வருமானம் ஈட்டும் பாஜக கட்சி உறுப்பினர் சொம்படிக்கலாம் . ஆனால் அதை இந்திய மக்களும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் நீங்கள் கூடிய சீக்கிரத்தில் தட்டை கையில்தான் ஏந்தி செல்ல வேண்டும் இங்கே நீங்கள் ?

கொசுறு :

செய்தி:சீன ராணுவம் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சீன ராணுவ பத்திரிகை கூறி உள்ளதாவது:
சீன ராணுவத்தில் தற்போது 23 லட்சம் வீரர்கள் உள்ளனர். இதில் சுமார் 13 லட்சம் வீரர்களை பணியில் இருந்து விடுவிக்க உள்ளது


ஆமாம் எவ்வளவு நாள்தான் இந்தியாவை அடித்தால் அது பதில் அடி கொடுக்கும் என எதிர்பார்து ஏமாறுவது அதற்கு பேசாமல் ஆட்களையாவது குறைத்துவிடலாம் என நினைத்து இருப்பார்கள்


பாக்., ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு: 2 இந்திய வீரர்கள் வீரமரணம்
அடேய் பாகிஸ்தானி எங்க மோடி வெளிநாட்டுக்கு போய் இருக்கிறார் என்ற தைரியத்தில்தானே வாலாட்டுகிறீர் அவர் வரட்டும் அவரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்லுறோம்




அன்புடன்
மதுரைத்தமிழன்

13 Jul 2017

10 comments:

  1. அத்தனை வீரமரணம் சடைபவர்களெல்லோரையும் ம்மார்டியர்ஸ் என்று கொண்டாடுகிறோமே 12ம் தேதி உபி அசெம்ப்லியில் வெடிமருந்து கண்டெடுக்கப்பட்டதாமே

    ReplyDelete
  2. please avoid anti modi propaganda ....he is the national leader

    ReplyDelete
  3. வேதனைதான்...கொசுறு ரெட்கலர் வரிகள் நல்ல நக்கல்...

    --இருவரின் கருத்தும்

    ReplyDelete
  4. அதெல்லாம் சரி, நீங்க எங்கேங்க தீடிரென காணாமல் போனீர்கள்? ஆளையே காணாமல் தவிச்சி போனோம்ல. பதிவுலகமே திரண்டு தேடியதே?

    ReplyDelete
  5. வந்ததும் சரியில்ல.. வாய்ச்சதும் சரியில்லங்குற மாதிரிதான் இருக்கு தமிழகத்தின் நிலை

    ReplyDelete
  6. வயித்தெரிச்சலை கிளப்புறதே வேலை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.