Monday, August 7, 2017

மோடியிலிருந்து எடப்பாடி வரை அனைவரும் தமிழர்களுக் ஏற்ற தலைவர்கள்தான்


வளர்மதி இயற்கைப் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர். பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்தவர். விவசாய நிலங்களைப் பறிப்பது மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைக்கும் அச்சுறுத்தலாக அமையும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தும்படி வலியுறுத்தி துண்டுக் காகிதங்கள் கொடுத்தார் என்று கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.


அவர் பொது நல சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவில்லை.பொது மக்களுக்கு தீங்கு ஏற்படும் நிகழ்வுகளிலும் ஈடுபடவில்லை அவர் செய்தது எல்லாம் தன் கருத்தை சொல்லி துண்டு காகிதம் மூலம் பிரசுரம்தான் செய்தார். இந்த துண்டு சீட்டில் தேசத்திற்கு எதிரான எந்த கருத்துகளையும் அவர் பரப்பவில்லை.


இப்படி ஜனநாயக நாட்டில் கருத்துகள் சொன்ன அவர் மேல் ஒன்றுக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள், தொடர் கொள்ளைகள், தொடர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவர்மீது பாயும் குண்டர் சட்டம், ஒரு கல்லூரி மாணவியான வளர்மதி மீது பாய்ந்துள்ளது. இது பற்றி முதலமைச்சரிடம் கேட்டால், இவர் தொடர்ந்து போராட்டங்களில் பங்கெடுத்து வருபவர்’ என்று சட்டமன்றத்தில் விளக்கம் சொல்கிறார்.

மக்கள் பிரச்னைக்காகத் ஜனநாயக முறையில் தொடர்ந்து போராடுவது தவறா? மத்திய, மாநில அரசாங்கத்தை ஒருவர் விமர்சிக்கவே கூடாதா என்ன?

ஜனநாயகம் என்ற பெயரால் வெளியே போராட்டம் நடத்திக்கொண்டு இருந்தால் மாநில சட்டம் ஒழுங்கை எப்படிப் பேணிப் பாதுகாக்க முடியும்?’ என்று கேட்கிறாராம் முதலமைச்சர்.

அய்யா முதலமைச்சரே இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கை துண்டுப் பிரசுரம் கொடுப்பதால் வளர்மதிகள் கெடுத்துவிட முடியுமா என்ன?உண்மையிலே அவர் தேசத்திற்கு எதிராக சதியில் ஈடுபட்டு இருந்தால் அவர் மீது வழக்கு தொடுத்து கோர்ட்டில் தண்டனை வாங்கி கொடுத்து இருக்கலாமே அதைவிட்டுவிட்டு ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் தேவையா என்ன?

சாதியின் பேரால் நடக்கும் வன்முறை வெறியாட்டங்கள், மதத்தின் பேரைச் சொல்லி நிகழ்த்தப்படும் வன்முறைகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன. அப்படி செய்பவர்கள் மீது ஏன் குண்டர் தடை சட்டம் பாயாதது ஏன்?


அதிகாரம் பதவிகள் இருக்கும் வரை இவர்கள் இப்படிதான் ஆடுவார்கள் ஆனால் பொதுமக்களே இப்படி சமுக நல பிரச்சனைகளுக்காக போராடும் பெண்ணுக்கு நடந்த அநீதியை தட்டிக் கேட்காமல் பிக்பாஸில் வரும் ஒவியா ஜுலிக்காக நீங்கள் சமுக வலை தளங்களில் பேசிக் கொண்டிருக்கிறீர்களே உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா அல்லது சமுக உணர்வுதான் இருக்கிறதா என்ன? பிக்பாஸ் என்ன சமுக நலனை கருத்தில் கொண்டு நடத்தப்படும் ஷோவா என்ன?நீங்கள் பிக் பாஸ் பாருங்கள் அல்லது பார்க்காமல் இருங்கள் ஆனால் அந்த நிகழ்ச்சிகளில் வரும் பெண்மணிகளுக்காக சமுக தளங்களில் பெரும் விவாதங்கள் செய்கிறீர்கள் அதனையும் செய்யுங்கள் அதை தடுக்கவில்லை ஆனால் இந்த ஜனநாயக முறையில் போராடிய இந்த வளர்மதிமீது குண்டர் தடை சட்டம் பாய்ந்து இருக்கிறதே அதற்கு எதிராக க்ய்ரல் கொடுத்து இருக்க வேண்டாமா என்ன?  உங்களுக்கு பொது நலத்தை விட பொழுது போக்குதான் முக்கியமா என்ன?


ஒன்று மட்டும் உறுதியாக சொல்வேன் உங்களுக்கு ஏற்ற தலைவர்கள் தான் நாட்டை வழி நடத்தி செல்லுகிறார்கள் அவர்களை குறை சொல்ல நமக்கு எந்தவொரு தகுதியும் இல்லை

அதனால் மோடி வாழ்க அமித்ஷா வாழ்க பன்னீர் செல்வம் வாழ்க எடப்பாடி வாழ்க மற்றும் அனைத்து சாதி மத தலைவர்கள் வாழ்க என்ரு வாழ்த்தி செல்லுகிறேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : எனது குழந்தைக்காக வசிக்கும் இடத்தை மாற்றம் செய்ததால் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து எழுத முடியவில்லை இணையத்திற்கும் வர முடிவதில்லை அதனால் நண்பர்கள் எழுதும் பதிவுகளையும் படித்து கருத்து எழுத முடியவில்லை இந்த நிலை இன்னும் நீடிக்கும் அதன் பின் வழக்கமாக எனது பதிவுகள் வந்து உங்களை தொந்தரவு செய்யும்.

13 comments:

  1. பிக் பாஸ் பார்க்காதவர்களை யாரும் தமிழினத் துரோகிகள் என்று யாரும் சொல்வதில்லை. அதே சமயம் அந்நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களைக் கிண்டல் அடிப்பதுதான் நடக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. டிவி நிகழ்ச்சிகள் அவர்களது வருமானத்திற்காக நடத்தப்படுகிறது அதனால் அதை குறை சொல்லி பயனில்லை அது போல அதை பார்ப்பவர்களையும் குறை சொல்ல முடியாது காரணம் அவர்களுக்கு அந்த பொழுது போக்கு நிகழ்ச்சி பிடித்திருக்கிறது ஆனால் இந்த நிகழ்ச்சியை பற்றி தேவைக்கும் அதிகமாக சமுக வலைத்தளங்களில் விமர்சிப்பதுதான் என் கண்ணை உறுத்துகிறது அதற்குபதிலாக சமுக நலனுக்காக போராட்டம் நடத்துபவர்களை ஆதாரித்து அல்லது விமர்சனம் செய்து இருக்கலாமே ....

      Delete
  2. சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. மகிழ்ச்சி. விரைவில் வீட்டு வேலைகள் முடிந்து நீங்கள் வரும் வரை காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெங்க்ட் ஜி

      Delete
  3. வழக்கம்போல அசத்தல்

    ReplyDelete
  4. அருமை அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  5. பாப்பாக்காக இடம் மாத்தினதால வரலைன்னு சொன்னீங்க. ஆனா, எங்களுக்கு வந்த தகவலே வேற! பூரிக்கட்டையால செம மாத்து வாங்கி ஹாஸ்பிட்டல்ல இருந்ததா தகவல் வந்துச்சே

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹ்ஹ் ஆமா ராஜி இதையே தான் நான் அப்பவே மதுரைக்குக் கருத்து போட்டுருந்தேன்.....ஹிஹிஹிஹி...

      கீதா

      Delete
  6. அருமை நண்பரே

    ReplyDelete
  7. நல்ல கேள்விகள் நானும் இதை பற்றி போட்டுவிட்டு ரிமூ செய்துவிட்டேன் யாராவதுவந்து திட்ட போறாங்க ஏனென்றால் அவ்வ்ளவு ஆதரவுகள் பெருகிவருகிறது நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சிக்கு

    ReplyDelete
  8. பிக் பாஸை யாரப்பா திட்டுறது? மதுரைத் தமிழன்... அதுலருந்து நம்ம மக்கள் நிறைய கத்துக்கறாங்களாமே!!!

    உங்க வீட்டு வேலையை எல்லாம் முடிச்சுட்டு வாங்க....சகோ!

    கீதா

    ReplyDelete
  9. pothu amathiyai kulathal sattam paayum....

    ReplyDelete
  10. மைய அரசைக் குறை கூறும் தைரியம்பாராட்டத்தக்கது

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.