Saturday, August 12, 2017

#modi #yogi #avargalunmaigal
இந்தியா வல்லரசு ஆகும்  போது  63 குழந்தைகள் இறப்பது தவிர்க்க முடியாதுதானே


செய்தி :லக்னோ: உ.பி.,மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் உயரிழந்தன.


உ.பி., மாநிலம் கோரக்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களில் சுமார் 63 குழந்தைகள் உயரிழந்தன. இது குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்கி குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை ஏன்?

சம்பவம் குறித்து கோராக்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் கூறியதாவது: ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் நிலுவை தொகை வழங்கவில்லை பண பாக்கிகாரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்றார்.



#modi #yoginath @avargalunmaigal
இந்தியா வல்லரசு ஆகும் போது இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது தவிர்க்க முடியாது. அதனால் இதற்காக மோடி அரசையோ அல்லது அங்கு ஆளும் பாஜகவையோ நாம் குறை சொல்ல முடியாது. அதுமட்டுமல்ல அந்த மாநில முதலமைச்சருக்கே அணிந்து கொள்ள இரண்டு துணிகளுக்கு மேல் இல்லை என்பது எல்லோரும் அறிந்ததே அப்படி இருக்கையில் குழந்தைகளுக்கு செலுத்தும் ஆக்ஸிசன் வாங்க பணம் இல்லை என்றால் அவரை நாம் குறை சொல்லவா முடியும். குறை சொல்லுவது என்றால் நாம் காங்கிரசை குறை சொல்லுவோம் ஆனால் பாராட்டுவது என்றால் மட்டும் மோடி அரசை பாராட்டுவோம்


@avargalunmaigal #modi #BJP # yogai
பரிதாபம் மழலைகள். பெற்றவர்கள் மனம் என்ன பதைபதைக்கும். இதே சம்பவம் பாஜக அல்லாத மாநிலத்தில் நடந்திருந்தால் மீடியா கதறு தறு என்று கதறி இருக்கும் இந்த சொம்புகள். முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கூசாமல் எழுதுவார்கள். ஆனால் இப்போது அரசியல் பேசி பலனில்லை என்று சாதாரணமாக சொல்லி விட்டு கிளம்பி விட்டார்கள். ஏன் யோகியை அல்லது மருத்துவ மந்திரியை தார்மீக அடிப்படையில் பதவிவிலக சொல்லலாமே. மாட்டை காப்பாற்ற நினைக்கும் யோகிக்கு பிஞ்சு குழந்தைகளை காப்பாற்ற மனமில்லையா என்ன?

இதற்கு காரணம்கர்த்தாவான அனைவருக்கும் உடனே தகுந்த தண்டனைக்கு வழி வகுப்பாரா யோகி அல்லது கும்பகோணம் நீதியைத்தான் செயல்படுத்துவாரா?





அன்புடன்
மதுரைத்தமிழன்
12 Aug 2017

9 comments:

  1. வருத்தப்பட வைக்கும் செய்தி. பணம் பண்ணும் வேலையில் இருக்கும் அதிகார எல்லைகள் தங்கள் கடமைகளை சரிவரச் செய்வதில்லை.

    ReplyDelete
  2. கொடுமை .மீண்டும் எங்குமே நிகழக்கூடாது

    ReplyDelete
  3. அங்க எல்லையில் ராணுவ வீரர்கள் கொத்து கொத்தா செத்து விழுறாங்க. சின்ன குழந்தைங்க செத்ததுக்கு ஒப்பாரி வைக்குறீங்களே

    ReplyDelete
  4. அறுபத்திமூன்று குழந்தைகளுக்கு பதிலாக அறுபத்திமூன்று மாடுகள் செத்திருந்தால் குமுறி இருப்பார்கள்.

    ReplyDelete
  5. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் பாலாரும் தேனாறும் ஓடும் என்பார்களே !ஒரு வேளை,யோகிக்கும் மோடிக்கும் ஒத்து வரவில்லையோ :)

    ReplyDelete
  6. கொடுமையும் வேதனையும் தரும் விஷயம்! நம்மூரில் மருத்துவம் என்பது வியாபராமகச் செயல்படுவதால் நடப்பது...கொடுமை...வளர்ந்த மேலை நாடுகளைப் போல இங்கும் இப்படியான மருத்துவத்திற்கு மக்கள் கேஸ் போட்டு மருத்துவர்கள் அலல்து நிர்வாகம் தங்கள் லைசன்ஸையும், சொத்தையும் இழக்க வேண்டிய நிலைமை இருந்தால் இப்படி நடக்குமா? சட்டமும் நம்மூரில் என்ஃபோர்ஸ்டாக இல்லை என்பதும் வேதனை.

    கீதா

    ReplyDelete
  7. கொடுமை வேறு எங்கும் நிகழக் கூடாது

    ReplyDelete
  8. இந்தியாவின் வல்லரசு வளர்ச்சியில் 63 அல்ல
    இன்னும் நிறைய என்று டிசைன் சொல்லுதே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.