Tuesday, August 29, 2017

அமெரிக்கன் என்று பெருமைபட  நடந்த ஒரு நிகழ்வு


சில நேரங்களில் சில விஷயங்கள் நம்மை பெருமைபட வைக்கின்றன அதே சமயத்தில் சில நிகழ்வுகள் நமக்கு தலை குனிவையும் ஏற்படுத்துவிடுகின்றன. சென்னையில் பெரும் வெள்ளம் வந்த போது ஜெயலலிதா அரசு ஸ்டிக்கர்மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது ஆனால் சென்னை பொது மக்களோ சமுக வலைத்தளங்கள் மூலம் தகவல் பறிமாறி ஒருவருக்கொருவர் உதவி அந்த வெள்ள நேரத்தை சாமாளித்தது. அந்த சமயத்தில் அரசாங்கத்தை எண்ணி தலை குனிந்தாலும் சமுக வலைத்தளம் மூலம் பொதுமக்கள் ஆற்றிய பங்கு நம்மை பெருமைபட வைத்ததது.


அது போலவே இப்போது அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலம் ஹரிக்கேன் Harvey யால் அடித்து துவைத்து போட்டு வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது, அரசாங்கம் பல்லாயிரக் கணக்கான மக்களை ஷெல்டரில் தங்க வைத்து பாதுகாத்து வருகிறது. பல மாநிலங்களில் உள்ள rescue குழுவும் விரைந்து சென்று உதவிக் கொண்டிருக்கிறது அதுமட்டுமல்ல அந்த மாநிலத்தில் உள்ள பொது மக்கள் தாங்கள் வைத்திருக்கும்  படகுகளை எடுத்து தன்னார்வத்துடன் உதவ செல்லுகிறார்கள். அப்படி அவர்கள் செல்லும் இந்த வீடியோவை பார்க்கும் போது மனித நேயம்  செத்துவிடவில்லை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பது புரிகிறது. இந்த வீடியோவை பார்க்கும் போது அமெரிக்கன் என்று பெருமைபடாமல் இருக்க முடியவில்லை

This is the kind of thing that makes me proud to be an American. Huge line of civilians bringing their boats to provide search and rescue assistance to those hit by Hurricane Harvey.










அன்புடன்
மதுரைத்தமிழன்



29 Aug 2017

5 comments:

  1. உண்மை. மனித நேயம் இன்னும் இருக்கிறது என்பதை உணரமுடிகிறது.

    ReplyDelete
  2. பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  3. இடுக்கண் களையும் நட்புகள் வாழட்டும்

    ReplyDelete
  4. உண்மையும்தான்.. எவ்வளவு கோபம் சண்டை மனஸ்தாபம் இருப்பினும்.. “தனக்குத் தனக்கெண்ணும்போது, சுளகு படக்குப் படக்கெண்ணுமாம்”.

    ReplyDelete
  5. மனித நேயம் மரிக்கவில்லை....பாராட்டுவோம் மனம் நிறைந்து! எல்லோரும் வாழ்க நலமுடன்!

    துளசி, கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.