Wednesday, August 9, 2017

எங்க ஊரு கூத்து

ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் புகாரின் பேரில் அபிராமபுரம் காவல் நிலையம் எஃப்.ஐ.ஆர். போட்டுள்ளது. 89 கோடி ரூபாய் பணம் பங்கு பிரிக்கப்பட்டதாகக் கிடைத்த ஆவணத்தின் அடிப்படையில்தான் ஆர்.கே. நகர் தேர்தலே நிறுத்தப்பட்டது. இதில் முதலமைச்சரோடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மின்துறை அமைச்சர் தங்கமணி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் பெயர்களும் இருக்கின்றன..


இவர்கள்தான் இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் இவர்கள்தான் ஜனநாயக முறைப்படி போராடிய வளர்மதி என்ற பெண்ணை குண்டர் தடை சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கின்றனர்..


இந்தியாவில் நல்லாட்சி செய்கிறார் ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றுகிறார் என்று சொல்லப்படும் மோடி அவர்கள்தான் இந்த எடப்பாடியை அடிக்கடி சந்திக்கிறார். எடப்பாடியின் தவறுகள் மோடியின் கண்ணுக்கு தெரியவில்லை ஆனால் தினகரன் கட்சி சின்னத்தை கைப்பற்ற பணம் கொடுக்க முயற்சித்தார் என்று சொல்லி அவர் மீது வழக்கு தொடுத்து சிறையில் அடைத்தது மோடி அரசு


அடுத்து பன்னீர் செல்வம் முதலமைச்சாராக இருந்து ஊழல் செய்து கோடிக் கணக்கில் சம்பாத்தித்தும் அவர் மீது ஒரு வழக்கு கூட இல்லை..

ஊழலை ஒழிப்பதாக சொல்லும் மோடி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று அம்பிகள் கேள்வி கேட்பதில்லை


ஆனால் இதை நாம் சொல்லிக் காட்டினால் சொல்லுபவர்கள்தான் கேணப்பயல்கள்.....
.

நல்லா இருக்கய்யா எங்க ஊரு கூத்து

அன்புடன்
மதுரைத்தமிழன்




7 comments:

  1. நீங்க ஆன்டி இந்தியன்

    ReplyDelete
  2. கேப்புல எங்கள
    கே...ய னு சொல்றீரா
    மாப்பு..

    ReplyDelete
  3. ஊர் கூத்து யாரு வேணா வேஷம் கட்ட முடியும் கூத்து
    தைரியமான உரிமைக்குரல்

    ReplyDelete
  4. ம்ம்ம்... தொடர்ந்து கூத்து பார்த்து போரடிக்காதோ....

    ReplyDelete
  5. மதுரை ! எங்க ஊர்ல ஆட்சி நடக்குதா என்ன??!! ஓ ஸாரி அதான் நீங்களே கூத்துனு சொல்லிட்டீங்களே!

    கீதா

    ReplyDelete
  6. do not blame mody...peoples are foolish

    ReplyDelete
  7. சைக்கிள் காப்பில் தமிழகத்துக்குள் நிழையப் பார்க்கும் மைய அரசின் ........தனம் .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.