Monday, August 28, 2017

விவேகமும் ப்ளூ சட்டைகாரர் விமர்சனமும்


விவேகம் படம் வசூல் மிக அதிகம் என்றும் சொல்லும் வேளையிலே அந்த படத்தை விமர்சனம் செய்த ப்ளூசட்டைகாராரின்  விமர்சன வீடியோ யூட்யூப் இணைய தளத்தில் 18 லட்சம் பார்வைகளை கடந்து போய்க் கொண்டு இருக்கின்றது.இவது விமர்சன வீடியோ பார்வைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க சினிமா துறையினருக்கு ப்ளட் பிரசர் அதிகரிக்க தொடங்கி சகட்டுமேனிக்கு திரைத்துறை பிரபலங்கள் கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.  அதுமட்டுமல்லாமல்  மரியாதை குறைவாக விமர்சனம் செய்து இருக்கிறார் என்று சொல்லி அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டு இருக்கின்றார்கள் என்று தகவல் எல்லாம் வருகின்றது


சினிமா படம் எடுப்பது என்பது மிகவும் எளிதல்ல அது ஒரு குழுவினரின் கடின முயற்சியால் வெளிவருகின்றது அதுவும் ஒரு குழந்தை பிரவசம் போலத்தான் என்றும் சொல்லுவதுண்டு. ஒரு திரைப்பட டைரக்டர் தான் பார்த்த ரசித்த அனுபவங்களையும் கதைகளையும் தன் கற்பனை திறனையும் பயன்படுத்தி ஒரு வடிவத்திற்கு கொண்டு வருகிறார் அந்த வடிவத்தை ஒரு நடிகர் தன் நடிப்பு திறமையால் வெளிப்படுத்தி உயிர்பிக்கிறார்.. அது போல மற்ற கலைஞர்களும் அதற்கு உயிர் கொடுக்கிறார். இந்த திறமைகளை தனக்கு லாபமாக்கி கொள்ள திரைப்பட தாயாரிப்பாளர் முதலீடு செய்து வெளியிடுகிறார். அப்படி அவர்கள் வெளியிடும் போதுதான் பிரச்சனைகள் வருகிறது, பிரச்சனைகள் வரக் காரணம் அந்த திரைப்படம் தனிப்பட்டவர்களுக்காக அல்லாமல் பொது வெளியில் வரும் போது பொது மக்களும் விமர்ச்சிக்க ஆரம்பிக்கிறார்கள்.


பொதுவில் வரும் எதும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல அதை யாரும் தடை செய்ய முடியாது. அப்படி விமர்சனம் செய்யும் போது அவரவர்கள் அவர்களின் தரத்திற்கு ஏற்பதான் விமர்சனம் செய்வார்கள். முன்பு எல்லாம் செய்திதாள்கள் மற்றும் வார இதழ்களில் மட்டும்தான் விமர்சனங்கள் வரும் அதுவும் அந்தந்த பத்திரிக்கைகளின்  தரத்திற்கு ஏற்பவும் பத்திரிக்கை முதலாளிகளின் ஆதரவுக்கு ஏற்பவும் ஆசிரியர்களின் ஆதரவிற்கு ஏற்பவும்தான் எடிட் செய்யப்பட்டு வரும். ஆனால் இணைய வளர்ச்சிக்கு பின் கடைக்கோடியில் வசிக்கும் குப்பனும் சுப்பனும் கூட தனக்கு தெரிந்த வகையில் சினிமா மட்டுமல்ல எல்லா விஷயங்களிலும் கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இன்றைய இணைய சுதந்தரத்தில் அதை கட்டுபடுத்த வரையரறுக்க எந்த வித சட்டங்களும் இன்னும் நம் நாட்டில் இயற்றப்படவில்லை என்பது உண்மை.





இந்த ப்ளு சட்டைக்காரரின் விமர்சனம் மக்களின் திரைப்பார்வையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்றிருந்தால் இப்படி ஒட்டுமொத்த திரைத் துறையினரும் கொதித்து எழுவார்கள் என்று பாருங்கள்


இப்படி சினிமா துறையினர் கொந்தளிக்க காரணம் சினிமாவை பற்றிய விமர்சனத்திற்காக அல்லது பிரபல அஜித்தை அவன் இவன் என்று பேசியதலா? எது காரணம் அஜித்தை அவன் இவன் என்று பேசி இருந்தால் அதற்க்காக அஜித்தான் பதில் பேச வேண்டும் அல்லவா அதைவிட்டு பிரபலமானவர் என்பதால் அஜித்திற்காக திரைப்பட துறையினர் வக்கலாத்து வாங்கி இவரை தூஷிப்பது ஏன்? இதற்கு முன் சினிமா துறையினரை வேறு யாரும் அவன் இவன்  என்று பேசியது இல்லையா என்ன அப்போது எல்லாம் வாயில் என்ன வைத்திருந்தீர்கள்?

நல்லா இல்லாத படத்தை கூட நாலு பேர்கள் பார்க்க கூடிய இந்த காலத்தில் பிரபலமானவர் டித்த படம் நன்றாக இல்லை என்றாலும் இன்னும் அதிக நாள் ஒடத்தானே செய்யும் அப்படி இருக்க படம் இவர் விமர்சனம் செய்தபடி இல்லாமல் நன்றாக இருந்தால் பிச்சுக்கிட்டுதானே ஒடும். அப்படி இருக்க திரைப்படை துறையினர் ஏன் பதட்டபட வேண்டும். இவர் விமர்சனம் செய்வதை வைத்துதான் படம் ஒடும் ஒடாது என்ற நிலையா இருக்கிறது என்ன?அப்படி இருந்தால் இவர்தானே அஜித்தைவிட பிரபலமானவர்


சினிமாதுறையினர் மட்டுமல்ல பொதுமக்களும்  உண்மையிலேயே படம் நன்றாக இருந்ததா இல்லையா என்றுதான் பார்க்கணும் . அதில்லாமல் என்னதான் ஒருவர் பொய்யாக ஒரு நல்ல படத்தை சரியில்லை என்று சொன்னால் அந்த படம் ஓடாமல் போய்விடுமா என்ன?


படம் நன்றாக போனால் ப்ளுசட்டைகாரரை யாரும் சட்டை செய்யவே மாட்டார்கள்  அதே நேரத்தில் படம் சரியாக போகவில்லையென்றால் ப்ளூ சட்டைக்காரர் சொன்னது சரிதான் என்றாகிவிடும். அப்படி இருக்க ஏன் இந்த சினிமாத்துறையினர் பதட்டம் அடையவேண்டும்,



சினிமா துறையினர்  படம் எடுக்கும் போது ஒன்றை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். படம் எடுத்து தங்கள் வருமானங்களை அதிகரிக்க விரும்பினால், மக்களுக்கு பிடிக்கும் வகையில் எடுக்க வேண்டும் அதைவிட்டுவிட்டு உங்களுக்கு பிடிக்கும் வகையில் எடுத்துவிட்டு, அதை மக்கள் பாராட்ட வேண்டும். அதை அதிக விலை கொடுத்து பார்க்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம்.


இணையம் வந்த பின் இன்றைய சூழ்நிலைகள் முற்றிலும் மாறிவிட்டன். அதை சினிமா துறையினர் மட்டுமல்ல எல்லா துறையினரும் அதை உணர வேண்டும். இன்றைய  சூழ்நிலையில் தங்களின் படிப்பிற்கு ஏற்ப வளர்ப்பிற்க்கு ஏற்ப அவர்கள் வாழும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தரா தரத்துடன் பேசியும் எழுதியும் வருகிறார்கள், அந்த தராதரம் ஒருவருக்கொருவர் நிறைய மாறித்தான் இருக்கிறது. ஒருவர் அவர் வட்டார சூழ்நிலைக்கு ஏற்ப பேசும் பேச்சு மற்ற வட்டாரத்தினருக்கு தரக் குறைவாக இருக்கலாம் அதனால் தன்னைப்பற்றிய விமர்சனங்களை படிக்கும் போது பிரபலங்கள் அதில் உள்ள முக்கியமான விஷயங்களைத்தான் கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர வார்த்தைகளுக்கு வார்த்தை அர்த்தம் பார்த்து கொண்டிருக்க கூடாது.


இந்த காலத்தில் பல லட்சக் கணக்கான மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவரான மோடியாக இருக்கட்டும் அல்லது அந்த காலத்தில் இருந்த காமராஜ் ,ராஜாஜி,  எம்ஜியார், கலைஞர், ஜெயலலிதா  ஏன் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களாக இருக்கட்டும். அவர்களையும் பல சமயத்தில் படித்தவர்கள், படிக்காதவர்கள் தரக் குறைவாக இணையம் வருவதற்கு முன்பே  விமர்சனம் செய்துதான் இருக்கிறார்கள். அதையும் அந்த தலைவர்கள் கடந்துதான் வந்து இருக்கிறார்கள், அப்படி இருக்க கலாச்சாரத்தை சீரழித்து படங்களை எடுத்து மக்களை கெடுத்து கொண்டிருக்கும் நீங்கள்  ஒன்றும் புனிதமானர்வர்கள் அல்லவே...



அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு: தமிழ் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க அதைப் பற்றி பேசாமல் பல பெண்கள் குறிப்பாக ஒரு பெண் மனநல மருத்துவர் ஒரு பெண் போலீஸ் அதிகாரி மேலும் பல பெண்கள் ப்ளுசட்டைக்காரரை பற்றி லைவ் வீடியோவில் வருத்தெடுக்கிறார்கள்... ஏம்மா உங்களுக்கு எல்லாம் திரைப்படங்கள்தான் முக்கியமா இதற்கு வக்காலத்து வாங்கி வீடியோ க்ளிப் போடும் நீங்கள் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை பார்த்து அமைதியாக செல்வது ஏன்? கேட்டால் அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லி சொல்லியே கடைசியில் இந்த சமுகத்தை சாக்கடையாக்கிவிட்டு இருக்கிறீர்கள். கொஞ்சம் யோசியுங்கள். பெண்களே, சினிமாவும் சமையல் குறிப்பும் அழகு குறிப்பும் பிக்பாஸ்மட்டும் முக்கியமல்ல. சமுகம் முக்கியம், அரசியல் முக்கியம் அதில் பங்கு பெற்று சமுக வளர்ச்சிக்கு பாடுபடுங்கள் இப்படி நான் சொல்வதில் சில பெண்கள் விதிவிலக்கு அவர்களுக்கு என் பாராட்டுக்கக்ள்



14 comments:

  1. இவரின் விமர்சனம் 18லட்சம் பார்வைகளை கடந்து விட்டது என்பதில் இருந்தே தெரிகிறது ,அவர் சொல்வது உண்மையென்று :)

    ReplyDelete
    Replies
    1. படம் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் விரும்பிய படி எடுக்கப்பட்டு இருக்கிறது அது போல டைரக்டர் சொன்னபடி அஜித்தும் நடித்து கொடுத்து இருக்கிறார் ஆக இவர்கள் மூவருக்கும் படம் நன்றாக வந்திருப்பதாக திருப்தி... படம் பண்ணியவர்கள் நல்ல வசூலை அள்ளியதாக செய்திஆனால் படம் பார்த்து விமர்சனம் செய்தவருக்கோ அது திருப்தியாக இல்லை அவர் தன் பணம் நஷ்டம் என்பதால அவர் அதை விமர்சனம் செய்து இருக்கிறார்.......செய்தி அவ்வளவுதான் ஆக இந்த நாலு பேர்களும் சும்மா இருக்க இடைபட்ட ஆட்கள்தான் துள்ளி குதிக்கிறார்கள் அதுதான் உண்மை

      Delete
  2. சரியாகத்தான் சொல்லியிருக்கிறீங்க, ஆனா ஒன்று பேச்சு சுகந்திரம் எல்லோருக்கும் உண்டுதானே, பலரும் பத்து விதமாகப் பேசத்தான் செய்வார்கள்.. அதை எல்லாம் கவனத்துக்குக் கொண்டு வந்தால் முன்னேற முடியாது... சினிமாக் காரர்கள் எது சொன்னாலும் பேசாமல் இருப்பார்கள் ஆனா போட்டுவிட்ட முதலுக்கு மோசடி வந்திடுமோ என சந்தேகம் படும்போது பொயிங்குவார்கள்:).. பணம்தானே குறிக்கோள்:).

    ReplyDelete
    Replies

    1. கடைசி வரியில் உண்மையை போட்டு உடைத்துவிட்டீர்களே ஹீஹீ...

      Delete
  3. Vimarsanam panathukaka thala fans blue satta ya thittala .. thalaya personnel ah thappa pesunathukutha ellarum thitranka ...
    Padathula fulla negative thana ??
    Positive ah illatha mathiri vimarsanam paniruntharu .. so ithu fake nu makkaluku therinju pochu .. neenka ethuku blue sattai ku support pandrinkanu theriyala ...
    Nadunilaiyanavarna ajith ah ethukanumnu illa .. ethu gnayamo atha pesunka

    ReplyDelete
    Replies
    1. அஜித்தை அவர் திட்டினால் பதிலுக்கு அதை அஜித் கவனித்து கொள்வார்தானே அவர் ஒன்றும் சின்ன புள்ளை இல்லையே...சரி அவர்தான் லூசுதனமாக பேசி இருக்கிறார் என்று வைத்து கொள்வோம் அதை பெரிது படுத்தி விஷயத்தை ஊதிவிடனுமா அஜித்தின் ரசிகர்கள்.

      உங்கள் கூற்றுப்படி அந்த ஒரு ஆள் படத்தை நெகட்டிவாக விமர்சனம் பண்ணி இருந்தால்தான் என்ன "அந்த ஒரு ஆளின்" விமர்சனத்திற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்களும் திரைப்பட துறையினரும் படபடப்பது ஏன்?

      படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் அவரை திட்டுவதற்கு பதிலாக படத்தில் உள்ள பாசிட்டிவ் விஷயங்களை எடுத்து சொல்லாலாமே அப்படி செய்யாதது ஏன்? ஒரு வேளை ரசிகர்களுக்கு கூட அந்த படம் புடிக்கவில்லையா என்ன?


      படம் நன்றாக வரவில்லை அதனால் விஜய் ரசிகர் கழுவி கொட்டுவார்களோ என்ற டென்ஷனில் தலையை ஒன்றும் சொல்ல முடியாது அதனால் இந்த ப்ளு சட்டைகாரரை போட்டுதாக்குவோம் என்பது மாதிரியல்லவா ரசிகர்களின் நடவடிக்கை இருக்கிறது


      நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணவில்லை நண்பரே நான் கேள்விபட்ட படித்த செய்திகளை வைத்து பொதுவாக பதிவு எழுதி இருக்கிறேன். அவ்வளவுதான்...

      Delete
    2. உங்கள் ரிப்ளை க்கு நன்றி நண்பரே ..

      நான் அஜித் ரசிகர்தான் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது , லாஜிக் இல்ல , வில்லன் அஜித்தை ஓவரா புகழ்றது மைனாசா தெரிஞ்சாலும் , சிவா படத்துல அத எதிர்பார்த்து போரது தப்புனு தெரியும் .. ஆனால் அவர் இந்த படம் உலக மகா மொக்கைன்ற ரேஞ்சுக்கு பேசிருந்தார் ..
      அவர் எதிர்பார்த்தது , அஜித்தை தவறாக பேசினால் விஜய் ரசிகர்கள் அந்த வீடியோ பார்ப்பார்கள் ..
      விஜய் ய தவறாக பேசினால் அஜித் ரசிகர்கள் பார்ப்பார்கள் , ஆக மொத்தம் நல்லா சம்பாதிச்சிட்டிருந்தார் ..
      ஆனால் இந்த முறை அஜித் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டார் என்பதே உண்மை..
      நடுநிலை யாளர்கள் இவரைப் போன்றோறை என்கரேஜ் பண்ணக்கூடாது என்பதே எங்கள் விருப்பம் ..

      எனக்கு ஒன்று புரியவில்லை , அஜித்தை தவறாக பேச புளு சட்டைக்காரருக்கு உரிமை இருக்கும் பொழுது , புளு சட்டைக்காரரை பேச மற்றவர்களுக்கு உரிமை உண்டு தானே ..

      ஆனால் லாரன்ஸ் போன்றோர் நேரடியாக புளு சட்டைக்காரரை தாக்க முடியாது , அதனால் அஜித் ரசிகர்களை பயன் படுத்திக் கொண்டது உண்மைதான் ..

      Delete
  4. கொசுறில:) நீங்க எப்பூடித்தான் பெண்களைத் திட்டினாலும் நான் அரசியலில் குதிக்க மாட்டேன்ன்ன்ன்:) வேணுமெண்டால் அஞ்சுவைக் குதிக்கச் சொல்றேன்.. நான் பின்னால் நின்று தள்ளி விட ரெடீஈஈஈஈஈ:)..

    என்னமோ தெரியல்ல அப்படி ஒரு வெறுப்பு எனக்கு அரசியல்.. நியூஸ் இப்படியானவற்றில்.. பிடிக்கவில்லை எனில் பிடிக்காதுதானே.. வற்புறுத்திப் பிடிக்க வைக்க முடியுமோ?:)..

    நானும் கொசுறு போடப்போறேன்:
    ஆண்களே.. அரசியல் மட்டும் பேசாமல் அப்ப அப்ப தையல், பூச் செய்தல், குயிலிங் இப்படியும் செய்து போடுங்கோ.. ஹா ஹா ஹா இதுக்கு மேல இங்கின நிற்க மாட்டேன் ஜாமீஈஈஈஈஈஈஈஈ:)

    ReplyDelete
    Replies
    1. ஹலோ நான் சொன்னது பெண்களை சிறு குழந்தைகளை அல்ல அதனால குழந்தை போல உள்ள நீங்கள் அரசியலில் குதிக்க வேண்டாம்... நீங்க குதிக்கிறதுக்குன்னே தேம்ஸ் நதி இருக்கிறப்ப உங்களை போய் அரசியலில் குதிக்க சொல்லுவேணா என்ன

      Delete
  5. கருத்து சரிதான். ஆனால் பொதுவெளியில் நாகரீகம் மிக முக்கியம். நான் அதைப் பார்க்கவில்லை. ஆனால் மற்றவரை மதிக்கும் பண்பு முக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துதான் என் கருத்தும் ஆனால் நாம் நாகரிகம் என்று நினைப்பது மற்றவர்களுக்கு நாகரிகமாக தோன்றுவதில்லை அதுதான் இங்கு பிரச்சனையே..

      உதாரணமாக சேரி பக்கம் சென்றீர்கள் என்றால் அவர்கள் சாதரணமாக பேசும் போது நாம் அசிங்கம் என்று நினைக்கும் சொற்களை அவர்கள் சர்வசாதாரணமாக பேசுவார்கள் அது போல அதிகம் படித்த நாகரிகமானவர்கள் அதே வார்த்தைகளை ஆங்கிலத்தில் பேசிக் கொள்வார்கள் அவ்வளவுதான்


      என்னைக் கேட்டால் சாக்கடை தண்ணீர் நம்மேல் பட்டுவிட்டால் அதை கழுவிவிட்டு செல்வது போல செல்ல வேண்டும் அதற்கு பதிலாக சாக்கடை தண்ணீர் நம் மேல்பட்டுவிட்டதற்காக சாக்கடை உள்ளே விழுந்து சாக்கடையோடு சண்டை போடுவது சரியா என்ன?


      நான் பல அரசியல் பதிவுகள் போடுகின்றேன் அதை பேஸ்புக்கில் சில குருப்பில் போடும் போது அந்த கட்சியை சார்ந்தவர்கள் மிக தரக் குறைவான வார்த்தைகளில் திட்டுவார்கள் அவர்களை நான் திட்டுவதற்கு பதிலாக உங்கள் கருத்து மிக அருமை என்று சொல்லிவிட்டு போய் கொண்டே இருப்பேன். பல சமயங்களில் போட்டவர்களே வெட்கி போவார்கள்... சதாரணமான நானே இப்படி செய்யும் போது பிரபலங்களும் அல்லது அவர்கலுக்கு வேண்டியவர்களும் இப்படி சென்றுவிட்டால் பிரச்சனைகள் தோன்றதே

      Delete
  6. // வெலியிடுக்கிறார், வெளிபடுத்தி , உயிர்பிக்கிறார், வக்கலாத்து , என்ரு , பிரபலமானவர் படித்த படம், படம் ஒடத்தானே செய்யும், ஒடும் ஒடாது , பதட்டபட , சரியில்லை என்று சொனால், தாராதாரம், தாரா தரத்துடன், வருதெடுக்கிறார்கள், யோசுயுங்கள், ...//

    ஒரு பதட்டத்திலேயே பதிவு எழுதி இருக்கிறீர்கள் போல!

    ReplyDelete
    Replies

    1. சாதாரணமாக பதிவு எழுதியவுடன் ஒரு லுக் விடுவேன் இன்று அப்படி செய்யாமல்விட்டுவிட்டேன் சில சமயங்களில் தவறு என்று தெரிந்தாலும் நான் சொல்ல வரும் விஷயம் மக்களுக்கு புரியும் அதனால் இதற்க்காக அதிக மெனக்கெடுவானே என்று விட்டுவிடுவேன்...

      நீங்கள் தவறை சுட்டிக்காட்டிய பின் அவைகளை திருத்திவிட்டேன் சுட்டிக்காட்டியதற்கு நன்றி ஸ்ரீராம்

      Delete
  7. இந்த இடுகையைப் படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது ஒரு சம்பவம். ஓபிஎஸ் அவர்கள் முதல்வராக இருந்தபோது, ஜல்லிக்கட்டு போராட்டம் மெரீனாவில் நடைபெற்றது. அரசுக்கு எதிராக ஓபிஎஸ்ஸுக்கு எதிராக சமூகவெளியில் நிறைய பின்னூட்டங்கள். அதைப் பற்றி ஒரு நிருபர் ஓபிஎஸ்ஸிடம் கேட்கிறார். அதற்கு ஓபிஎஸ் அவர்கள் (அப்போது முதலமைச்சர்), 'பொதுவாழ்வுக்கு வந்துவிட்டால் விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும்' என்று சொன்னார். எனக்கு அப்போதுதான் அவரைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது.

    இன்னொன்று.. இப்போ எல்லாருக்கும் சினிமா போவது என்பது மிகவும் செலவு பிடிக்கும் விஷயமாக இருக்கிறது (அதைவிட, அந்தப் படத்தை டவுன்லோடு செய்து பார்ப்பதற்காகச் செலவழிக்கும் நேரமும் முக்கியமாகப் படுகிறது). அதனால் உடனுக்குடன் விமரிசனத்தைப் பார்க்கிறார்கள். வாய்வழியாக எதிர்மறை விமரிசனம் வந்தால், அது சினிமா பார்க்கவரும் கூட்டத்தை மிகவும் பாதிக்கும் (ஆரம்ப நாட்களில்). அதுதான் சினிமாக்காரர்களைப் பதட்டப்பட வைக்கிறது. அஜித் படம் தோல்வி அடைந்தாலும், அவருக்கு முதல் ஒரு வார வசூல் உண்டு, மற்ற விதங்களிலும் அவர் படங்களுக்கு வருமானம் உண்டு. ஆனால், சாதாரணப் படங்களுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. இதனால்தான் சினிமாக்காரர்கள் பதட்டப்படுகின்றனர். ஒரு சிவப்புச் சட்டைக்காரர், படத்தை, 'ஆஹா ஓஹோ' என்று பாராட்டினால், சினிமாக்காரர்கள் நன்றி தெரிவிக்கப்போவதில்லை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.