Sunday, August 27, 2017

@avargalunmaigal
தமிழக கிளி ஜோசியர் குருமூர்த்தி(துக்ளக்)  ஸ்டாலினுக்கு சொல்லும்  அரசியல் பலன்


தமிழகத்தில் இப்போது  புதிதாக வந்துள்ள அரசியல் கிளி ஜோசியர்  தான் நிர்வாகிக்கும் துக்ளக் பத்திரிக்கையில் இந்த மாதம் ஸ்டாலினுக்கு  கிளி ஜோசியம் பார்த்து எதிர்கால பலனை சொல்லி இருக்கிறார். அதுதான் இந்த பதிவு. சிவப்பு எழுத்தில் இருப்பவை மதுரைத்தமிழனின் கருத்துக்கள் மற்றவை குருமூர்த்தி துக்ளக்கில் எழுதி பதிவிட்டதாக பேஸ்புக்கில் வெளிவந்த கட்டுரை



கேள்வி: அதிமுக இவ்வளவு பிளவுபட்டும்,அது திமுகவுக்கு சாதகமாக அமையாதது ஏன்?

பதில்: இதற்கு காரணம் காலத்துக்கு ஏற்றார் போல் திமுக மாற மறுப்பதுதான். திமுகவின் ஹிந்து ஆன்மீக விரோத மனப்பான்மை மாறவேண்டும். ஸ்டாலின் நடை, உடை மாறினால் மட்டும் போதாது.( அப்ப ஆன்மீக ஆதரவு மனப்பான்மை கொண்ட பாஜகவீற்கு ஏன் அது சாதகமக அமையவில்லை  மோடியின் காவி வேஷம் மட்டும மாறினால் போதுமா? அதற்கான பதிலை இவர் சொல்லாதது ஏன்?)

திமுகவிலிருந்து பிரிந்த அதிமுகவை மக்கள் எப்படி ஏற்றனர்?

திமுகவிலிருந்து பிரிந்த அதிமுகவை தேசியப் பார்வை கொண்டதாக எம்ஜிஆர் படிப்படியாக மாற்றினார். மறைந்த காமராஜர் கூறியதுபோல் திமுக அதிமுக இரண்டும் ஓரே குட்டையில் ஊறிய மட்டையாகத்தான் இருந்தன.( அந்த காமராஜ் இப்போது உயிரோடு இருந்தால் பாஜகவும் காங்கிரஸ்  இரண்டும் ஓரே குட்டையில் ஊறிய மட்டையாகத்ததான் இருக்கின்றன என்று நிச்சயம் சொல்லி இருப்பார் )

எம்ஜிஆர் கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவை திமுகவிலிருந்து வித்தியாசப்படுத்தினார்.

1975ல் அதிமுகவை அகில இந்திய அதிமுக என்று, திமுக ஒதுக்கி வைத்திருந்த தேசியத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டார்.

ஆட்சிக்கு வந்த1977லிருந்து 1980வரை காமராஜர் ஆட்சி போல நாணயமான அரசை நடத்தினார்.

1980ஆம் ஆண்டு திமுக-காங்கிரஸ் சந்தர்ப்பவாதக் கூட்டணியால் எம்ஜிஆர் தோல்வி அடைந்த பிறகுதான், அதிமுக நாணயமான அரசியலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நழுவ ஆரம்பித்து, இன்று அதிமுக ஊழல் அதிகமா,திமுக ஊழல் அதிகமா என்கிற போட்டி ஏற்பட்டிருக்கிறது.(இந்த போட்டியில் தேசியகட்சியான பாஜகவும் இணைந்து இருக்கின்றன என்று சொல்ல மறந்தது ஏன் குருமுர்த்தி )

மூன்று ஆண்டு ஆட்சியில் ஓரு ரூபாய் கூட ஈட்டாத எம்ஜிஆர், சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற சத்யா ஸ்டுடியோவை 80லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்து தேர்தல் செலவு செய்ய வேண்டி இருந்தது.அதற்கு பிறகுதான் தேர்தல் செலவுக்கு பணம் ஈட்டியே ஆகவேண்டும் என்பதை எம்ஜிஆர் உணர்ந்தார். அப்படிதான் அதிமுகவில் ஊழல் செய்வது துவங்கி, இன்று பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது.

நேர்மையாக நடந்த அதிமுக அரசுக்கு, 1980 நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் போனது பெரும் துரதிர்ஷ்டவசம்.இதை சோ என்னிடம்
ஓருமுறை கூறினார்.

1980களில் திமுகவின் நாத்திகத்தை தான் ஓதுக்கியதை,வெளிப்படுத்த ஊரறியும்படி எம்ஜிஆர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார். நடமாடும் தெய்வம் என்று உலகமே போற்றிய காஞ்சிப் பெரியவரைச் சென்று தரிசனம் செய்தார்

திராவிட நாத்திகப் புயலிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த தமிழகத்தின் மனநிலைக்கு ஏற்றார்போல், தன்னுடைய கட்சியின் போக்கை மாற்றினார்.அதனால்தான் புது வாக்காளர்கள் அதிமுகவை ஆதரித்தனர்.

திகவைப் போலவே தொடர்ந்து இருந்து வந்த திமுகவுக்கு புது வாக்காளர்களை ஈர்க்கும் தன்மை இல்லை. இன்றும் கூட அப்படி மாறும் திராணி இல்லாததால் தேசியம் கலக்காத திராவிடத்தையும் ஆன்மீகம் கலக்காத அரசியலையும் இற்றுப் போன ஹிந்தி எதிர்ப்பையும் திமுக இன்னும் இறுக்கக்கட்டி பிடித்து கொண்டிருக்கிறது.

தவிர ஊரறிந்து கருணாநிதி குடும்பம் ஏராளமான சொத்துக்களைச் சேர்த்த பிறகும் 2ஜீ போன்ற மெகா ஊழல்களிலும் அது சிக்கியிருக்கிறது.( திமுக ஊழலை பற்றி பேசும் யோக்கியரின் கண்களுக்கு பாஜகவின் ஊழல்கள் கண்ணில் படவில்லையோ சாதாரண பாமர மக்களுக்கு தெரிந்தது கூட நாளிதழின் ஆசிரியரின் கண்களி தென்படாதது ஏன்?)

திமுக வுக்கும் அதிமுகவுக்கும் ஊழலில் அதிக வித்தியாசம் இல்லை என்றாலும், மற்ற வகையில் அதிமுக பரவாயில்லை என்று இன்றும் மக்கள் நினைக்கிறார்கள்.இதனால் தான் அதிமுக பிளவுபட்டும். திமுக எழுச்சி பெறவில்லை.

இப்போது தமிழ்நாட்டுக்கு ஆன்மிகம் கலந்த, ஹிந்து மற்றும் தேசிய விரோதம் இல்லாத,நேர்மையான ஓரு மாற்றுத் தேவை.(தமிழகத்திற்கு என்று சொல்லுவதற்கு பதில் பாஜக கூட்டணி சேர ஒரு மாற்றுகட்சிதேவைன்னு சொல்ல வேண்டியதுதானே. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து பொது தேர்தலை சந்தித்தால் மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என்ற பயம் வந்துடுச்சா என்ன? )

அப்படி திமுக மாறினால் தான் தமிழக அரசியல் சூழல் திமுகவுக்கு சாதகமாகும். அப்படி திமுக மாறும் என்று 2014ல் மு.க.ஸ்டாலின் மீது எனக்கு ஏற்பட்ட நம்பிக்கை இப்போது குறைந்திருக்கிறது.( ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான குள்ள நரி குருமூர்த்தி பாஜகவிற்கு சாதகமாக ஆலோசனை சொல்லாமல் திடிரென்று  திமுகவிற்கு சாதகமாக  நீலக் கண்ணிர் வடிப்பதேன்?)


நன்றி : ஆசிரியர் : ஆடிட்டர்குரூமூர்த்தி - துக்ளக் 30/08/2017
jai hind



15 comments:

  1. ட்றுத் நலம்தானே? அரசியலாகவே இருந்துது அதனால் இப்பக்கம் வரவில்லை.. ஆனா இன்றும் அரசியல் என்பதால் நலம் கேட்கலாமே என வந்தேன்.. நானும் சைபர்கிளி யோசியம் அடிக்கடி பார்க்கிறறான்:) கூகிளில்:).

    ReplyDelete
    Replies
    1. யக்க்கோவ் எப்படி யக்க்கோவ் இருக்கிறீங்க? நலமாக இருக்கிறீங்களா? இப்படி சின்ன புள்ளையை தனியாக தவிக்கவிட்டு போயிட்டூங்க்ளே

      Delete
    2. ஒரு மியாவ் வந்துடுச்சு இன்னொரு ஹெல்ல்தி மியாவ் எங்கே நடந்தே தென் ஆப்பிரிக்கா போயிடுச்சா என்ன?

      Delete
    3. என்னாது யக்கோவாஆஆஆஆஆஆஆஅ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. யாராவது நேக்கு சுட்டாறிய தண்ணி ஊத்துங்கோ.. மீ பெயிண்ட் ஆகிறேஏஏஏஏஏன்ன்ன்:).. ஹொலிடேயில போனதோடு ட்றுத்துக்கு என்னமோ ஆச்சு:)..

      இன்னொரு மியாவ் அது ஓவர் ஹெல்த்தியாகி எழும்ப முடியாமல் தவண்டு திரிவதா.. ஐ மீன் உருண்டு திரிவதாகக் கேய்வி:)... ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ.. வந்திடுவா விரைவில்:).

      Delete
    4. மதுர சூப்பர்!! யக்கோவ்!!! ஹாஹாஹாஹாஹா!! அதிரா ஹாஹாஹா ஹிஹிஹி...ஹூஹூஹூ!! என்ன சந்தோஷம்பா இந்த கீதாவுக்கு!! மதுர யக்கோவ்னு சொல்லிட்டாருனு...அதெல்லாம் சரி மதுர என்னது இது அதிரா பாட்டியில்லையோ...இப்படி யாக்கோவுனு சொல்லி உங்க வயசைக் கூட்டிக்கிட்டீங்களேனு கொஞ்சம் வருத்தமா இருக்குதே!!! ஹிஹிஹி

      கீதா

      Delete
    5. அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு அதிரா வந்து அழகு சிகிச்சை பண்ணியதற்கு அப்புறமும் அவர்களை பாட்டி என்ரு கூப்பிட்டால் மன வருத்தம் அடைவார்கள் என்ப்தால்தான் அவர்களை யக்கோவ் என்று கூப்பிட்டேன் அவ்வளவுதான்

      Delete
  2. Replies
    1. அப்பதான் உங்களுக்கு தோணுதா?

      Delete
  3. அரசியல் அசிங்கங்கள் ஒவ்வொரு நாளும் விதம் விதமாய் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. எதைச் சொல்ல, எதை விட.....

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. வர வர ரொம்பவே மோசமாகி கொண்டே போகிறது மக்களும் அதை கண்டும் மெளனமாக போகிறார்கள் ஹும்ம் என்னத்த சொல்ல

      Delete
  4. நல்ல காலம் மோடி ஊழல் பேர்வழின்னு சொல்லல , ப.ஜா கா தான் என்று சொல்றீங்க , எடியூரப்பா , ஊழல்னு சொல்வீங்க , ஆனால் கோர்ட் என்ன சொல்லியது என்ற பார்க்க மாட்டீர்கள் ( அவர் ஊழல் செய்யவில்லை என்று சொல்லியது ), பின்ன ராஜஸ்தான் லலித் மோடி என்பீர்கள் , லலித் மோடி என்னோவெல்லாமோ செய்து விட்டு , ஊரை விட்டே ஓடி விட்டார் , அவர் ஒரு பெரிய கில்லாடி ( பெரும் பணக்காரரும் கூட ) ..அப்பறம் ஜார்கண்ட் /சத்தீஷ்கார் - ஏதோ காடு நிலம்ன்னு பேப்பர்ல ஓடியது , உண்மை இருந்தால் கோர்ட்டுக்கு போய் இருக்கலாம் , யாரும் ஏதாவது போனதாக தெரியல . குஜராத் , ஒரு ஊழலும் நடந்த மாதிரி செய்தி இல்லை - ஏதோ குஜராத் பெர்டிலிஸிர் என்று கொஞ்ச நாள் ஓடியது - குஜராத்ல பல லட்சம் ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெற்றது . மோடியின் அம்மா , அண்ணன் , அண்ணி , குடும்ப உறுப்பினர்கள் மிகவும் சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்கிறார்கள் .உங்கள் கண்ணுக்கும் தெரியாது , காதும் கேட்காது . மனோகர் பாரிக்கர் - மிகவும் சாதாரண ஆசாமி . வியாபம் ஊழல் , உச்ச நீதி மன்றம் ,CBI - இன்னும் விசாரித்து கொண்டே இருக்கிறது , ஹரியானாவில் ஊழல் கிடையாது , முக்கியமாக உபியில் யோகி சுத்தமாக ஊழல் கிடையாது , ஏதாவது கிடைக்குமா என்று சல்லடை போட்டு பார்க்கிறார்கள் . மத்திய அரசாங்கத்தில் யார் ஊழல் என்று சொல்லுங்கள் .

    நீங்கள் இதை தி .மு கா வுடன் ஒப்பீடு செய்கிறீர்கள் ..என்ன சொல்வது ..மோடி போபியா தான் .

    ReplyDelete
    Replies
    1. மோடி மற்றும் பாஜக தலைவர்கள் ஊழல்கள் செய்வதே இல்லை ஆனால் என்ன மோடியின் ஆதரவாளர்கள்தான் ஊழல்கள் செய்கிறார்கள். இந்த பதில் உங்களை சந்தோஷப்படுத்தும் என நினைக்கிறேன்

      Delete
    2. மோடியை சந்திக்கும் எடப்பாடி பன்னீர் செல்வம் எல்லோரும் ஊழல்வாதிகள் அல்ல சுத்தமானவர்கள் இல்லையென்றால் இந்நேரம் மோடி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பார் அல்லவா?

      போங்கய்யா போங்க யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி ஓளிச்சு வையுங்க என்று சொல்வது மாதிரி இருக்குது

      Delete
  5. அரசியல் வாதிகளில் யாரும் சுத்தமானவராகத்தெரியலைஆனால் அதிகாரம் கையில்கிடைத்டபோது பழிவாங்கும் குணம் மோதியிடம் அதிகமாகவே காண்கிறதுமோடி எனும்போது அவரையும் இயக்கும் பலரையும் சேர்த்தே சொல்ல வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீங்கய்யா

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.