Sunday, August 24, 2014

avargal unmaigal

ஜெயலலிதாவின் கழுத்தை மோடி இறுக்கியதால் அதிமுகவை பா.ஜ வில் அடகு வைக்கும் ஜெயலலிதா





கடந்த லோக்சபா தேர்தலில் மோடி தமிழகத்தில் மாற்று கட்சியினரோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால் அந்த கட்சிகளோடு சேர்ந்து போட்டியிட்டதால் அவருக்கு கிடைத்த லாபம் ஒன்றுமே இல்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை மோடியின் அலையும் இங்கு வேகவில்லை..



ஆனால் லோக்சபா தேர்தலில் தனி மெஜாரிட்டியோட ஜெயித்து ஆட்சியில் அமர்ந்த போதிலும் அவருக்கு மாநிலங்கள் அவையில் அவருக்கு இன்னும் ஆதரவு தேவைப்படுகிறது. அதனால் அவர் குறிவைத்தது சகோதரி ஜெயலலிதாவை நோக்கிதான். அதானல் அவர் ஜெயலலிதாவை டில்லியில் சந்தித்த போது மோடி அவருடன் பேரம் பேசினார். அவர் நினைத்தபடி பேரம் படிந்தது.



அந்த பேரத்தின்படிடி மோடி சகோதரி ஜெயலலிதாவின்(பெங்களுர் சொத்துகுவிப்பு வழக்கு) மானத்தை காப்பாற்ற உதவுவதாகவும் அதற்கு பதிலாக மாநிலங்கள் அவையில் அவருக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.



ஆனால் இந்த முழுப்பூசணிக்காவை சோற்றுக்குள் மறைத்து, பாஜவுக்கு ராஜ்யசபாவில் ஆதரவுக்கரம் நீட்ட காத்திருப்பதன் காரணமாக, அ.தி.மு.க.,வுக்கு, லோக்சபாவில் துணை சபாநாயகர் பதவியை தந்து, பா.ஜ., கவுரவித்திருக்கிறது. இதுதான் உண்மை.



இப்படிதான் சத்தமின்றி ஜெயலலிதா அதிமுகவை பாஜவிடம் அடகு வைத்து, மத்திய பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இடம் பிடித்திருக்கிறது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள, துணை சபாநாயகர் தம்பிதுரை, 'லோக்சபா துணை சபாநாயகர் பதவியை நாங்கள் ஏற்றுக்கொண்டதில் இருந்தே, மத்திய அரசில், அ.தி.மு.க.,வும் பங்கு பெறத் துவங்கி விட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.



இப்படி இவர் சொன்னது மூலம் பாஜவுடன் கூட்டணி வைத்த கட்சிகளிடையே சலசலப்பு தோன்றி இருக்கிறது

இது மத்திய மாநில அரசுளுக்கு இடையிலான உறவில் உண்டான சுமுக நிலை என்றால், அரசியல் ரீதியாக எந்த சலசலப்பும் தோன்றி இருக்காது. ஆனால் பா.ஜவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் மலர்ந்த புது உறவு என்பதால் அதன் எதிரொலி தமிழகத்தில் கேட்காமல் இருக்குமா என்ன?கடந்த வாரத்தில், சென்னை யில் கூடிய பாமக பொதுக் குழுவில் இதுபற்றிய விவாதம் தான் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதாம்.

இந்த கூட்டத்திற்கு பின் பேசிய ராமதாஸ், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இருக்கிறதா, இல்லையா என்பதையும், தேசிய ஜனநாயக கூட்டணி நீடிக்கிறதா என்பதையும், பா.ஜ.,வினர் தான் தெரிவிக்க வேண்டும்' என்று சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார்.இதன்மூலம், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி நீடிக்கிறதா என்ற கேள்வி, இந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த எல்லா கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது. இன்னும் இதற்கு யாரும் பாஜகவில் இருந்து விடையளிக்கவில்லை



அன்புடன்
மதுரைத்தமிழன்

24 Aug 2014

4 comments:

  1. சோழியன் குடுமி சும்மா ஆடாது ன்னு சொல்லுவாங்களே அதே மாதிரித்தான் இருக்குமோ அம்மாவின் மூவ்?!!

    ReplyDelete
  2. இதெல்லாம் நடக்கும் என்று முன்பே தெரிந்ததுதான்! தேமுதிகவும் பாமகவும் விலகினாலும் பா.ஜ.க கண்டு கொள்ளாது!

    ReplyDelete
  3. என்னமோ நடக்கட்டும் நாமதான் வோட்டுக்கு 1000/ வாங்கியாச்சே இனி கேட்க என்ன ? இருக்கு.

    ReplyDelete
  4. அரசியல இதெல்லாம் சாதாரணப்பா:))என்று பெருந்தகை கௌண்டர் அவர்கள் எப்போயோ சொல்லிட்டீடாரே!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.