Tuesday, September 28, 2010

உயரமான, வேகமான ரோலர் கோஸ்டர்களில் மக்கள் செல்லும் போது வழக்கமாக சொல்வது இதுதான்.. ஒ மை .காட்..... ஒ ஒ ஒ ஒ நோ........ ஒரு தடவை ஆசைக்கு நானும் என் மனைவியும் உலகத்திலே மிகவும் உயரமான ரோலர் கோஸ்டரில் சென்றதுண்டு. இனிமேல் செல்வதாக ஆசை ஏதும் கிடையாது. இதை படிக்கும் உங்களுக்கு ஆசை ஏதும் இருந்தால் நான் உங்களை அங்கே இலவசமாக அழைத்து செல்கிறேன். என் வலைப்பக்கத்திற்கு வந்த உங்களுக்கு இதை நான் செய்யவில்லை என்றால் நானெல்லாம் ஒரு மதுரைக்காரனல்ல.


Kingda Ka: மிகவும் உயரமான வேகமான ரோலர் கோஸ்டர்கள்.

இது அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸ்சி மாநிலத்தில் (Six Flags Great Adventure) உள்ளது. இது மணிக்கு 128 மைல் வேகம் செல்லக்கூடியது. ரைடின் முடிவில் இது 456(139 மீட்டர் ) உயரம் சென்று இறங்கும். படமும் விடியோவும் கிழே...









2. Dodonpa இது ஜப்பானில் உள்ள உயரமான ரோலர் கோஸ்டர்

மக்கள் உட்கார்ந்தவுடன் இது முதலில் ஒரு இருட்டு குகைக்குள் இருந்து ஆரம்பிக்கும். திகிலுடன் ஆரம்பிக்கும் இந்த பயணம் 90 டிகிரியில் 170 அடி உயரத்திற்கு 107 mph வேகத்தில் சென்றுவரும். படமும் விடியோவும் உங்களை அங்கு அழைத்து செல்லும்.



3. Steel Dragon .

இதுவும் ஜப்பானில் உள்ளது. இது உலகத்திலேயே மிகவும் நீளமான ரோலர் கோஸ்டர். இது 8,133ft நீளமானது. கவலைப்பாடாதிர்கள் இதிலும் நான் உங்களை இலவசமாக அழைத்து சென்று காண்பிக்கின்றேன்.



கலைஞர் இலவசம் கொடுத்தால் வோட்டு போடுறீங்க.. எனக்கு வோட்டு போடவேண்டாம். கமண்ட்ஸ் மட்டும் போடுங்க.. ஒகேவா?

2 comments:

  1. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு முன்னால் வி.ஜி.பி. கோல்டன் பீச்சுக்கு ஜெர்மன் துபாஷி செய்வதற்காக போயிருந்தேன். அதில் உள்ள ரைட்களில் ஒன்றில் பிரச்சினை.

    வேலை நடுவில் நானும் ஜெர்மானிய நிபுணர் மட்டும் தனியே அருகில் இருந்த ரோலர் கோஸ்டரில் ஒரு ரைடுக்கு சென்ரோம். நாங்கள் இறங்கும் சமயம் பார்த்து முதலாளி தலைதெறிக்க ஓடி வந்து, சாதாரணமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களை அழைத்துச் செல்ல யோசிப்பார்கள் என்றும், அவர் பார்க்காதிருக்கும் போது அறுபது வயதைத் தாண்டிய நாங்கள் இருவரும் அதில் ஏறிச்சென்றது அடாவடி என்றும் ஆட்சேபித்தார்.

    பெரிசுகள் அடிக்கும் லூட்டி அவருக்கு தாங்கவில்லை என நினைக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. த்ரில் அனுபவங்களை அனுபவிக்க எனக்கும் அசாத்திய தைரியம் தான்..ஆனால் எங்கே போனாலும் நான் மட்டுமே முந்தி போவேன்..எல்லாரும் பின் வாங்கிருவாங்க..பெங்களூர்,கேரளா வில் தீம் பார்க் போகும்போது எங்க கும்பலில் யாருமே எந்த மினி கோஸ்டர் இலும் ஏற தயாராவே இல்லை..ஒரே ஆளா போயிட்டு வந்தேன்..நினைவுகளை தட்டி எழுப்பியதுக்கு நன்றி...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.