Thursday, September 16, 2010

இதுதாண்டா வாழ்க்கை......




கடவுள் ஒரு கழுதையை முதலில் படைத்து அதனிடம் சொன்னார். நீ ஒரு கழுதை. நீ உன்முதுகில் நிறையச் சுமைகளைச் சுமந்து காலை முதல் மாலை வரை உழைக்க வேண்டும். உனக்கு மூளை கிடையாது. உனக்குப் புல்தான் உணவு. நீ 50 ஆண்டுகள் வாழ்வாய் என்று சொன்னார்.


அதற்குக் கழுதை பதில் சொன்னது. 50 ஆண்டுகள் ரொம்ப அதிகம். 20 ஆண்டுகள் எனக்கு போதும் என்றது. அதற்குக் கடவுளும் சம்மதித்தார்.






 
-----------------------------------------------------------------------------------------------

கடவுள் ஒரு நாயைப் படைத்து அதனிடம் சொன்னார்.

நீ ஒரு நாய் , நீ மனிதனுக்கு நல்ல நண்பன். நீ அவனது வீட்டைப் பாதுகாக்க வேண்டும்.உனக்கு வேண்டிய உணவை அவன் தருவான்.. நீ 30 ஆண்டுகள் வாழ்வாய் என்று சொன்னார்.


அதற்கு நாய் பதில் சொன்னது. 30 ஆண்டுகள் ரொம்ப அதிகம். 15 ஆண்டுகள் எனக்கு போதும் என்றது. அதற்குக் கடவுளும் சம்மதித்தார்.







----------------------------------------------------------------------------------------------

கடவுள் ஒரு குரங்கைப் படைத்து அதனிடம் சொன்னார்

நீ ஒரு குரங்கு. நீ மரத்துக்கு மரம் தாண்டுவாய்.. பல வித்தைகளைக் காட்டுவாய். நீ 20 ஆண்டுகள் வாழ்வாய் என்று சொன்னார்



அதற்குக் குரங்கு சொன்னது. 20 ஆண்டுகள் ரொம்ப அதிகம். 10 ஆண்டுகள் எனக்கு போதும் என்றது. அதற்குக் கடவுளும் சம்மதித்தார்.






-----------------------------------------------------------------------------------------------

கடவுள் கடைசியில் ஒரு மனிதனைப் படைத்து அவனிடம் சொன்னார்.

நீ ஒரு மனிதன். இந்த உலகில் நீ ஒரு முழுமையான படைப்பு . நீ எல்லா மிருகங்களுக்கும் தலைவன். நீ இந்த உலகத்தையே ஆளுவாய். நீ 20 ஆண்டுகள் வாழ்வாய் என்று சொன்னார்.



அதற்கு மனிதன் சொன்னான். 20 ஆண்டுகள் ரொம்ப குறைவு. எனவே கழுதை வேண்டாம் என்று சொன்ன 30 வருஷங்களையும், நாய் வேண்டாம் என்று சொன்ன 15 வருஷங்களையும், குரங்கு வேண்டாம் என்று சொன்ன 10 வருஷங்களையும் எனக்கு தாருங்கள் என்று கேட்டான். கடவுளும் அதற்கு சம்மதித்தர்.

அதிலிருந்து மனிதன் 20 வருடங்கள் மனிதனாகவும், அதன் பிறகு கல்யாணம் , வேலை செய்து எல்லா சுமைகளையும் முதுகில் சுமந்து 30 வருடங்கள் கழுதைப் போல வாழ்ந்தான்.பிறகு குழந்தைகளை நல்ல படியாகப் பாதுகாத்து வளர்த்து கிடைத்தவைகளை சாப்பிட்டு நாய் போல 15 வருடம் வாழ்ந்து வந்தான். பின் வேலையிலிருந்து ஓய்வு பெற்று 10 வருடங்கள் குரங்கு போல மரத்துக்கு மரம் தாவுவது போல வீட்டுக்கு வீடு, பையன் வீட்டிலிருந்து பொண்ணு வீட்டுக்கும் மாறி மாறி சென்று பேரக் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டி வாழ்ந்து வருகிறான்.

--------------



அன்புடன்
மதுரைத்தமிழன்

16 Sep 2010

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.