நக்கீரற்க்கோ ஒரு சந்தேகம் எனக்கோ பல சந்தேகம்.
இதைத் தீர்த்து வைப்பவர்களுக்கு ஆயிரம் அல்ல பல்லாயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும்.பரிசு பற்றி விபரம் கடைசியில் கொடுத்துள்ளேன்.
இதைத் தீர்த்து வைப்பவர்களுக்கு ஆயிரம் அல்ல பல்லாயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும்.பரிசு பற்றி விபரம் கடைசியில் கொடுத்துள்ளேன்.
1. நாய் உணவு விளம்பரத்தில் நியூ & இம்புருவ் டேஸ்டிங் என்று விளம்பரப்படுத்தியுள்ளார்கள். அதை டேஸ்ட் பண்ணியது யார்?
2. காப்பிரைட் சிம்பலை யாரும் காப்புரிமை பண்ணி வைத்துள்ளார்களா?
3. தண்ணீர்க்குள் உங்களால் அழுக முடியுமா?
4. நாம் நாய்போல வேலை செய்கின்றோம் என்று சொல்கிறோம். ஆனால் நாய் எப்போதுமே உட்கார்ந்துதானே இருக்கிறது.? பின் ஏன் அப்படி கம்பேர் பண்ணுகிறோம்?
5. மீன்களுக்குத் தாகம் எடுக்குமா?
6. வட்ட வடிவமான ருமில் இருக்கும் போது உங்கள் குழந்தை தவறு செய்தால் நீங்கள் கோ டூ கார்னர் (Go To Corner) என்று சொன்னால் உங்கள் குழந்தை எங்கே போய் நிற்கும்?
7. கார்னில் இருந்து கார்ன் ஆயில் தயாரிக்கிறார்கள், வெஜிடபிலிருந்து வெஜிடபல் ஆயில் தயாரிக்கிறார்கள், பேபி ஆயில் பேபியை யூஸ் பண்ணியா தாயரிக்கீறார்கள்?
8. டி.வியை ஒரு டிவியாக இருந்தாலும் ஏன் டி.வி செட் என்று கூறுகிறார்கள்?
9. தியோட்டரில் உள்ள சீட்டில் உள்ள எந்த (arm rest) கைவைக்கும் இடம் நம்மது?
10. காரில் உள்ள ஸ்பிடோமீட்டரில் ஏன் 130 மைல் அளவு ஸ்பீடு வைத்துள்ளார்கள்? எந்த நாட்டிலும் அந்த அளவு ஸ்பிடில் ஒட்ட அனுமதியில்லை? ஏன்?
11. மருத்துவர் அலுவலகத்தில் நாம் ஆடை மாற்றும் போது முனைவர் அல்லது செவிலியர் ஏன் வெளியே போகிறார்கள்? எப்படியும் அவர்கள் நம்மை நிர்வாணமாகத்தான் பார்க்க போகிறார்கள்.
12. ஒரு லெஸ்பியன் பெண் இன்னொரு பொண்னிடம் மட்டும்தான் உடலுறவு உறவு வைத்துள்ளாள் ஆண்களிடம் உறவே வைக்கவில்லை, அவள் இன்னும் வெர்ஜின் தானா? இல்லையா?
13. ஒரு கை உள்ளவனை போலிஸார் எப்படி கைவிலங்கு போட்டுக் கூப்பிட்டுச் செல்வார்.?
14. கடலில் உள்ள எல்லா கப்பலையும் வெளியே எடுத்துவிட்டால் கடலின் நீர் மட்டம் குறையுமா?
15. நாம் குளிச்சிட்டு ரொம்ப சுத்தமா வெளியே வந்து துண்டை வைத்து துடைத்த பிறகு ஏன் அந்த துண்டை அழுக்கு துண்டு என்று சொல்லி அழுக்கு கூடையில் போடுகிறோம்?
என் சந்தேகத்தைத் தீர்த்து வைத்துவிட்டு கிழேயுள்ள பொற்காசுகளை எவ்வளவு வேண்டுமோ பிரிண்ட் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
"Everytime you smile at someone, it is an action of love, a gift to that person, a beautiful thing." — Mother Teresa
அன்புடன்
மதுரைத்தமிழன்
மதுரைத்தமிழன்
யோசிங்க யோசிங்க...
ReplyDelete:)
1.டேஸ்ட் பார்த்தது நாய் ஓனர் தான் ( உணவு செஞ்சது நாய் ஓனர் பொண்டாட்டி)..நாய் ஓனர் தான் நாய் உணவு கம்பனி ஓனர்(ஹி..ஹீ..முதல் பதிலை படிச்ச வுடனே தலை தெரிச்சு ஓடுர சத்தம் கேட்குதே..இத தான் எதிர்பார்த்தேன்..;-)) )
ReplyDeleteஎனக்கும் பல சந்தேகம் வந்திருச்சு???
ReplyDelete