Monday, July 4, 2011


வலைப் பதிவுகளில் ஆபாசங்கள் மற்றும் பின்னோட்டங்கள் ( ஒரு கண்ணோட்டம் )



கம்புயூட்டர் மூலம் பலவிதமான விஷயங்கள்,பல விதமான அனுபவங்கள்  பல்வேறு நாடுகளிலுள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் பல நூற்றுகனக்கான பதிவுகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன.மாறி வரும் அவசர உலகில்  கம்புயூட்டர் நமது குடும்பத்தில் இன்றியமையாத ஒரு உறுப்பினர் ஆகி நமது பெட்  ரூமுக்கும் வந்துவிட்டது. இதை சிறுவர், சிறுமிகள் , மாணவர்கள், இளைஞர்கள், குடும்பத் தலைவிகள் என்று அனைவரும் உபயோகிக்க தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அநேக நபர்கள்  வலைத்தளம் தொடங்கி எழுதி கொண்டிருக்கின்றனர்

இவர்கள் பல்வேறு இனம்,மொழி வேறுபட்ட நாடுகளில்  வசித்தும் மாறுபட்ட கருத்துகளை கொண்டிருந்தும் தமது அனுபவங்களையும் எண்ணங்களையும் தமிழில் எழுதி கொண்டு வருகின்றனர். ஆரம்ப கால கட்டங்களில் தரம் வாய்ந்த பதிவுகள், அதற்கு நாகரிகமான பின்னூட்டங்கள்   ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்கள் என்று நல்லவிதமாக போய்க்கொண்டிருந்த வலைப்பதிவுலகம் இப்போது திசை மாறி போய்கொண்டிருகின்றன, ஆனால் இப்போது பின்னுட்டம் என்ற பெயரில் தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளை எல்லாம் போட்டு யாம் பெற்ற இன்பம் இவ் வையகம்  பெறுக என்று சில நபர்கள் மற்றும் சில கூட்டங்கள் அசிங்கபடுத்தி வருகின்றனர்.


சாதி மத இன துவேசம் கொண்டவர்கள், நடிகர்கள் , அரசியல் வாதிகள் மற்றும் பலவிதமானகுழுக்கள்  இவர்களுக்கூ பின்னால் ஒரு கூட்டமே உள்ளது. இப்படி பல கூட்டங்கலில்  இருப்பவர்கள் தான் படித்த படிப்புக்கும் ,வாழும் வாழ்க்கைக்கும், பண்புக்கும் குணத்துக்கும்  சிறிது கூட சம்பந்தம் இல்லை என்பதனை நிரூபிக்கின்றனர். பல அனானிகள் யார் யாருடைய பெயர்களில் எல்லாமோ பின்னூட்டம் இடுகின்றார்கள். இப்போது யார் போலி யார் உண்மை என்றே தெரியாமல் இருக்கிறது.  அதனை  தெரிந்து கொள்வதற்கே பெரும் நேரம் செலவழிக்க  வேண்டியிருக்கிறது. ஒருவருடைய பெயரினை உபயோகித்து அப்படி ஆபாசபின்னூட்டம் இடுவதில் என்ன சந்தோஷம் இவர்களுக்கு என்று தெரியவில்லை.


ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதனை மதத்தின் முலமும்  சாதியின் மூலமாகவும் பார்க்காதிர்கள்.இது வலைப் பதிவாளர்களுக்கு மிகவும் பொருந்தும். ஒருவர் தனது கருத்தை ஒரு பதிவின் மூலம் எழுதுகிறார் என்றால் அது அவரின் சொந்த கருத்து அதற்கு எல்லோரும் ஒத்துபோவார்கள்  என்று எதிர் பார்ப்பது தவறு. நமக்கு என்று ஒரு சொந்த கருத்து இருப்பது போல நாலு பேருக்கும் நாலு கருத்து இருக்கும் அதை அவர்கள் சொல்வார்கள்.  வலைப்பதிவின் மூலம் ஒரு கருத்தினை எழுதுபவருக்கு எந்த அளவு எழுத  உரிமை இருக்கிறதோ அதை போலவே  மற்றொருவருக்கும் அக் கருத்தினை ஆதரித்தோ அல்லது மறுத்தோ பேச உரிமை உண்டு

பழைய காலங்களில்  பத்திரிக்கை உலகில் யாராவது ஒரு கருத்தை சொல்லி இருப்பார் அதற்கு பதில் சொல்ல வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அது அந்த பத்திரிக்கை ஆசிரியரின்  எடிட்டுக்கு பிறகுதான் முழுமையகவோ அல்லது அரை குறையாகவோ வரும். ஆனால் இங்கே வலைபதிவில்  எல்லோருக்கும் பேச்சுரிமை எழுத்துரிமை இங்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் அது உலகத்தின் கடைக்கோடிக்கும் சென்று அடையும். அதனால் நமக்கு இங்கு கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி  அந்த எழுத்துரிமை முலம் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாமலும், மனத்தினை குத்தி கிழிக்காமலும்  இருப்பதுதான்  சிறப்பு.



நமது முகம் யாருக்கு தெரியப் போகிறது என்று அலட்சியமாக எழுதாதீர்கள்.உங்கள் மனைவி ,குழந்தைகள் பெற்றோர்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  இவற்றினை எங்கே படிக்க போகிறார்கள்  என்ற தைரியம் தானே உங்களை இப்படி தரக்குறைவாக எழுத தோன்றுகிறது? இந்த புதிய உலகில் உலகம் மிக சிறியதாகிவிட்டது. அதனால் நீங்கள் எழுதுபவகளை சிந்தித்து தரம் வாய்ந்ததாக எழுதுங்கள் .தமிழர்களே சிறிது சிந்தியுங்களேன்   விதவிதமான கெட்ட வார்த்தைகளால் திட்டுவதால் யாருக்கு என்ன பயன்?  இப்படியான அசிங்கமான வார்த்தைகளை தாங்கி ஒரு  கடிதம் உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் மனைவியோ, குழந்தைகளோ அல்லது பெற்றோர்களோ படிக்க நேர்ந்தால் அவர்கள்  மனம் என்ன பாடுபடும் என்பதை ஒரு நிமிடம்  சிந்தித்து பாருங்களேன்.

இங்கே பதிவாளர்கள் மட்டும் அல்ல பதிவே எழுதாத ஆயிரக்கணக்கான மக்கள் படித்து செல்கின்றனர். அதனை மனதில் இருத்தி கொண்டு பதிவு எழுதுங்கள்.இவ்வளவும் நான் சொன்னது பண்பாடு உள்ள மனிதர்களுக்கு மட்டுமே. இல்லை இல்லை நான் பண்பாடு அற்ற மனிதன் இல்லை நான் அசிங்கமாகத்தான் எழுதுவேன் என்பவர்களைப் பார்த்து பண்பாடற்ற மனித மிருங்கள் என்று நினைத்து வருந்துகிறேன்.



எனது பதிவுகளை எனது மனைவியும் எனது குடும்ப நண்பர்களும் மற்றும் பல நாடுகளில் இருந்து குடும்ப பெண்களும் படித்து வருவதினால் பதிவுகள் எழுதுவதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன். நான் எழுதிய ஒரு பதிவிற்கு மேலும் அழகூட்ட ஒர் உலக மாடலின் போட்டோவை( சிறிது கவர்ச்சியானது) போட்டேன். எனது பதிவுகளை தொடர்ந்து படித்துவரும் ஒரு பெண் சொன்னார். அந்த படம் இல்லாவிட்டாலும் உங்கள் பதிவு நன்றாகத்தான் இருக்கும் என்று சொன்னார். மேலும் நீங்களும் மற்றவர்களைப் போல கவர்ச்சி படங்களை போடவேன்டாமே என்று சொன்னார். அப்போது நான் சிறிது யோசித்து பார்தேன். இந்த வலைப்பதிவு என்னுடைய பெர்சனல் டைரி அல்ல அதில் என் ஆசாபாசங்களை எழுதி பதிய இது மற்றவர்களுக்காக படிக்க ரசிக்க சிரிக்க சிந்திக்க ஆரம்பிக்கப்பட்டது. அதனால் அவருடைய  கருத்து எனக்கு ஒத்து போனதுமட்டும் மல்லாமல் மிகவும் கவனமாக எழுதியும்  பதிந்தும் வருகிறேன்.

நான் இந்த வலைத்தளத்தை தொடங்கி ஒர் ஆண்டு முடிந்துவிட்டது, இதன் மூலம் என்னை தொடர்ந்து ஆதரிப்பவர்களூக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன், இந்த பதிவு ஒரு நல்ல பதிவாக இருக்கும் என நினைக்கிறேன். அப்படியே நீங்கள் நினைத்தால் இதை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்களேன். நன்றி...வாழ்க வளமுடன் & அமைதியுடன்.
 

நீங்கள் சுதந்திரமாக உங்கள் கருத்துகளை நாகரிகமான முறையில் இங்கே பதிய வேண்டுகிறேன்...

5 comments:

  1. மிக நல்ல பதிவு.

    நல்லவர் ஒதுங்கினால் நரி நாட்டாமை செய்யுமாம். அதே போல்தான் ஆகிவிட்டது பதிவுலகம்..

    ஆபாச பதிவும் அதுக்கு ஜால்ராக்களுமாய் . தட்டி கேட்டால் கூட்டமாய் சேர்ந்து இன்னும் கெட்ட வார்த்தைகளை நம்மீது கொட்டுவதுமாய்..

    . சாரு போன்ற வாக்கிரம் பிடித்தவனையெல்லாம் தமிழக அரசே தலையில் தூக்கி வைத்தது?.

    இதுதான் நாட்டின் லட்சணம்..

    இப்ப துக்ளக்..

    நல்லவர் ஒதுங்கிடுவர்..

    நல்ல விழிப்புணர்வு பதிவு.

    ReplyDelete
  2. என்னதான் திட்டு வாங்கினாலும் நாம் சமூக நலனுக்காய் பல கருத்து சொன்னோம் என்ற திருப்தி கண்டிப்பா நமக்கு இருக்கும்..

    அது போதும்..

    வாழ்த்துகள். தொடருங்கள்..

    ReplyDelete
  3. சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. ராஜராஜேஸ்வரி & சாந்தி மேடம் இருவரின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.