Thursday, July 7, 2011

அமெரிகனைஸ்டு ஆகபோகும் இந்திய கோயில்கள்

எங்கும் மாற்றம் எதிலும் மாற்றம் என்று மாறிக்கொண்டு வரும் உலகில் அமெரிக்காவில் உள்ள கோயில்கள் அமெரிகனைஸ்டு ஆனால் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று ஒரு கற்பனை.நான் படித்த ஜோக்கினால் எழுந்த ஒரு கற்பனை என் வழியில் நீங்கள் ரசிக்க...


நீங்கள் அர்ச்சனை பண்ணப் போகும் போது குருக்கள் உங்கள் பெயர், நட்சத்திரம், கோத்திரம் என்ன என்று கேட்பதற்கு பதிலாக உங்கள் சோசியல் செக்யூரிட்டி நம்பர் சொல்லுங்கோ என்று கேட்பார்.

கோயில்களில் இரண்டு வகையான பிரசாதங்கள் வழங்கப்படும். ஓன்று நார்மல் பிரசாதம் மற்றொன்று டயட் பிரசாதம். குழந்தைகளுக்கு லாலிபாப் பிரசாதம் தரப்படும்

தீப ஆராதனை தட்டில் பணம் காணிக்கையாக போடுவதற்கு பதிலாக அந்த தட்டில் க்ரெடிட் கார்டு ஸ்கேனர் பொருத்தப்பட்டு பக்தர்கள் க்ரெடிட் கார்டு மூலம் காணிக்கை செலுத்த வசதி செய்யப்படும்.

கோயிலை வலம் இருந்து இடப் புறமாக சுற்றுவது மாற்றி அமைக்கப்பட்டு இடம் இருந்து வலப்புறமாக சுற்றி வர ரூல்ஸ் மாற்றி அமைக்கப்படும்.வயதானவர்கள் சுற்றி வர கன்வேயர் பெல்ட் அமைக்கப்படும்.

கோயிலுக்கான வலைத்தளத்தில் கோயிலுக்கு ஸ்பான்ஸ்ர் செய்பவர்கள் பெயர்கள் 1.5'x 5' பேனர் அளவில் போடப்படும்.

குருக்கள் மந்திரம் ஒதுவதற்கு பதிலாக ஐபாட்டை உபயோகித்து சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் மூலம் மந்திரம் ஓலி பரப்பபடும்.

பண்டிகை தினங்களில் செய்யப்படும் அர்ச்சனைகளுக்கு டிஸ்கவுண்ட தரப்படும். அர்ச்சனைகளில் திருப்தி இல்லாவிட்டால் மணி திருப்பி கொடுக்கப்படும். அதனால் ஏற்படும் மன உளைச்சலுக்காக அடுத்த தடவை வரும் போது இலவச அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்..

தேங்காய் உடைக்கும் இடம் புல்லட் புருஃப் கண்ணாடியால் அமைக்கப்பட்டு அருகில் ஒரு சேஃப்டி ஆபிஸர் நின்று கொண்டிருப்பார் அவசர உதவிக்காக ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும்

கோயில் வாசலில் வரவேற்பாளர்(Greeter) நின்று வரவேற்பார். கோயிலுக்கு பெற்றோர்களுடன் வரும் குழந்தைகளுக்காக (Play Area) அமைக்கப்படும்.


இது ஒரு நகைச்சுவைக்காக மட்டும் எழுதப்பட்டது. மதத்தையோ மனிதர்களையோ இழிவுபடுத்துவதற்காக எழுதப்பட்டுள்ளதுல்ல.

2 comments:

  1. நகைச்சுவைக்காக எழுதப்பட்டதுதான் ஆயினும்
    தற்போது கட்டப்படுகிற கோவில்களின் கட்டுமானங்களையும்
    அங்கு நடக்கிற தர்பார்களையும் பார்க்கும்போது
    நிஜமாகிவிடுமோ என பயமாக இருக்கிறது
    படங்களும் பதிவும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.