கருணாநிதி வீட்டிற்குள் வெள்ளம்:
தொண்டர்கள் கடும் அதிர்ச்சி! பதிவர்கள் மகிழ்ச்சி!
மதுரைத்தமிழன் மனம் மகிழ்ச்சி.
காரணம் இந்த செய்தியை வைத்து கலாய்ப்பு பதிவுகள் இப்படி போடலாமே என்றுதான்.
தொடர் கனமழை காரணமாக திமுக
தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின்
வீடு சென்னையில் கோபாலபுரத்தில் உள்ளது. சென்னை முழுதுவதும் வெளுத்து வாங்கும் மழை
இந்த பகுதியையும் விட்டுவைக்கவில்லை.
இதனால், இந்த பகுதியில் வெள்ளம்
அதிகரித்தது. மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென, திமுக தலைவர் கருணாநிதியின்
கோபாலபுரம் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது. இதனை அறிந்த
தொண்டர்கள் அவரை காப்பாற்ற படகிற்கு பதில் மெரினா கடற்கரையில் இருந்து ஒரு பெரிய கப்பலை
கொண்டு அவரை காப்பற்ற முயன்றனர். ஆனால் அவ்வளவு பெரிய கப்பலை நகருக்குள் கொண்டுவர முடியாது
என்று அரசாங்கம் சொல்லியதால் உடன் பிறப்புக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் கொண்டு
வர முயன்ற கப்பலை இங்கே காணலாம்
கருணாநிதி வீட்டிற்குள் வெள்ளம்
வந்து அவரது வீட்டினை பாதித்தது. அதனால் அவருக்கு வரவேண்டிய வெள்ள நிவாரான நிதி இதுவரை
அவருக்கு தரப்படாததால் உடன் பிறப்புக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இன்று மாலைக்குள்
அவருக்கு வெள்ள நிவாரணநிதி கொடுக்கப்படவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்
போவதாக அன்பழகன் அறிவித்தார்
வெள்ளம் கோபாலபுரத்திற்குள்
நுழைந்தது ஜெயலலிதா செய்த சதியின் விளைவே. இதற்கு சிபி ஐ விசாரனை நடத்த வேண்டும் என
ஸ்டாலின் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுவித்தார்
ஸ்டாலினின் கையாலாகத
தனத்தால்தான் வெள்ளம் கோபாலபுரத்திற்குள் நுழைந்தது. நான் மட்டும் அங்கு இருந்தால்
இப்படி ஒரு அசிங்கம் நேராமல் தடுத்து இருப்பேன் என அழகிரி விமானநிலையத்தில் இருந்து
நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
சொக்கா 940 கோடியாம்
அது நான் ஆட்சியில் இருக்கும் போது கிடைத்திருக்க கூடாதா? கிடைச்சிருந்தா தேர்தல் நிதிக்கு
பயன்படுத்தி இருப்பேனே இப்ப பாரு அந்த அம்மா எல்லா பணத்தையும் எடுத்து கடைத் தேங்காயை
எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைப்பது போல தேர்தல்
நிதியாய் பயன்படுத்திருவாரே. நான் என்ன செய்வேன் எனக்கு ஏன் இப்படி எல்லாம் சோதனை வருகிறது
எல்லாம் போச்சு எல்லாம் போச்சு
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : சின்ன செய்திதான் ஆனால்
அந்த செய்தியை வைத்து இப்படியும் கலாய்க்கலாம்தானே?
கலாய்த்தல் மன்னன்........ சொல்லவா வேணும் ? சூப்பர்..!
ReplyDeleteஇப்படி எல்லாம் நீங்கள் புகழ்ந்து சொன்னால் நானும் தமிழக முதல்வர் போட்டிக்கு வந்துவிடுவேன் ஆமாம் சொல்லிப்புட்டேன்
Deleteஅதை செய்யுங்க முதல்ல... உங்க அறிவுக்கு உங்கள நான் முதல்வரா ஆக்காம விடமாட்டேன்.. மதுரை தழிழன் வாழ்க!
Deleteஅடடா! காலாய்த்தல் ரெம்ப நல்லா இருக்குங்க!
ReplyDeleteஇடுக்கண் வருங்கால் நகுகணுமோ?
நீங்க நல்லா இருக்குன்னு உண்மையிலே சொல்லுறீங்களா அல்லது கலாய்க்கிறீங்களா?
Deleteநீங்கள் எப்படி எடுத்துகிட்டிங்களோ அப்படி?
Deleteஹாஹா!
கலாய்ப்பதில் ஸ்பெசலிஸ்ட் நீங்கள்
ReplyDeleteசிறு செய்தி கூட உங்களுக்குக் கூடுதல்தான்
மிகவும் இரசித்தோம்
குருஜியின் பாராட்டிற்கு மிகவும் நன்றிகள்
Deleteஅருமை..., அருமை...., தாத்தா உங்கக்கிட்ட மாட்டிக்கிட்டு படுற பாடு இருக்கே! பாவம்ப்பா!
ReplyDelete
Deleteஎன் மனைவிக்கிட்ட நான் படும்பாட்டை விட தாத்தா படும் பாடு எவ்வளவோ தேவலாம். தாத்தாவின் ஒரு வீட்டில் உள்ளவர் படுத்தினால் இன்னொருவர் வீட்டிற்கு செல்ல வழி உண்டு. இங்க எங்கம்மா படுத்தினால் கட்டிலுக்கு அடியில் படுத்து உறங்குவதை தவிர வேறு வழியில்லை
நீங்க தாத்தாவைக் கலாய்க்கிறீங்களா அல்லது உங்கள் நிலைமையை (தவறை) எண்ணி வருந்துகிறீர்களா? ஏதேனும் எழுதி ஏந்தான் மனைவியிடம் அடி வாங்கிக்கொள்கிறீர்களோ..
Deleteமனம் அதிர்ச்சியாகி விட்டது ஆகவே கிளம்பி விட்டேன் கடைக்கூ.......கூ.......கூ.....
ReplyDeleteஎந்த கடைக்கு?
Deleteஇப்போ இருக்குற "வெள்ள" நிலைமையை பாத்தா கப்பலை கொண்டு வந்துரலாம் போலதான் இருக்கு.
ReplyDeleteகப்பல் போக்குவரத்து ஆரம்பித்தால் டி.ஆர் பாலுதான் முதலிடம் வகிப்பார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன
Deleteசெம கலக்கல்.... பெரிய கப்பலை கொண்டு வந்த தொண்டர்கள்.... :)
ReplyDeleteநல்லவேளை டைட்டானிக்கை கொண்டுவராமல் இருந்தார்களே
Deleteஆஹா.....
ReplyDeleteஆஹா என்று சொல்லி ரசிக்கும் உங்களுக்கு நன்றிகள் பல
Deleteம்ம்...அருமை...போன வெள்ளம் திரும்பாது...அது ஒருவழிப்பாதை......
ReplyDeleteஆனால் புது புது வெள்ளம் திரும்ப வருமே
Deleteநான் மிகவும் ரசித்துப் படித்த அருமையான கலாய்த்தல் பதிவு.. எனக்கும் மகிழ்ச்சிதான்..!
ReplyDeleteகப்பல் போக்குவரத்து ஆரம்பித்தால் டி.ஆர் பாலுதான் முதலிடம் வகிப்பார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன
Deleteஊடக துறையில் உள்ளவர் பாராட்ட்ம் பொது எனக்கும் மகிழ்ச்சிதான்
ஹஹ்ஹஹஹ் செம தமிழா....இதுக்காகவே ஜெஜெ வீட்டிலும் வெள்ளம்னு வந்திருக்கக் கூடாதானு...ஹஹஹ் வந்திருந்தா நீங்க கப்பலுக்குப் பதிலா ஹெலிக்காப்டர் கொண்டுவந்துருப்பீங்களோ?
ReplyDeleteஜெ வீட்டிற்கு வெள்ளம் வந்தா கண்டிப்பா நம்மிடம் இருந்து ஒரு கலாய்ப்பு பதிவு வரும்..... நேரம் இருந்தால் ஜெவீட்டிற்கு வெள்ளம் வந்து இருந்தால் என்ன நடக்கும் என்பது பற்றி பதிவு எழுதுகிறேன். ஐடியா தந்தற்கு நன்றி
Delete