தமிழக மக்களின் "தாகம்"
தீர்க்கும் அம்மா!
தூள் கிளப்பும் ஜெயலலிதா!!
ஜெயலலிதா மட்டும்
பாரதப் பிரதமராக
வந்து இருந்தால்
இப்படி மோடி
மாதிரி நாட்டு
நாடக போய் முதலீடு
வேண்டும் முதலீடு
வேண்டும் என்று
பிச்சை எடுத்து
இருக்கமாட்டார். உள்நாட்டிலே
மிக எளிதாக
திரட்டிவிடுவார். இதை
நம்ம முடியாதவர்கள்
கீழ் கண்ட செய்தியை
படிக்கவும்.
தீபாவளி
பண்டிகையையொட்டி
டாஸ்மாக்கிற்கு ரூ .370 கோடி
விற்பனை இலக்காக
நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதனையும் தாண்டி
டாஸ்மாக்கில் மது
விற்பனையாகியுள்ளது
.
தீபாவளி
பண்டிகையையொட்டி கடந்த 8ஆம்
தேதி முதல் 10ஆம் தேதி
வரையிலும் ரூ.372 கோடிக்கு மது
விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அரசு நிர்ணயித்த இலக்கோ
ரூ .370 கோடி. அதையும் தாண்டி ரூ .2
கோடி அதிகமாக மது விற்பனை
நடைபெற்றுள்ளது.
இதில் வரும்
லாபம் எல்லாம்
மக்களின் நலனுக்காகவே
செய்யப்படுகிறது.
இப்ப பாத்தீங்களா
அம்மாவின் திறமையை...
அவருக்கு மட்டும்
ஒரு முறை பிரதமராக
வாய்ப்பு கொடுங்கள்
இது மாதிரி
இந்தியா முழுவதிற்கும்
ஒரு டார்க்கெட்
நிர்ணயித்து அதை
பெற்று மக்கள்
நலனக்காக செலவிடுவார்.
நீங்க
நல்லாயிருக்கோணும் நாடு
முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே
குடிக்கும்
தோழர்களே
ஒன்று
கூடுங்கள்
டாஸ்மாக்
நமது
என்று
சிந்துபாடுங்கள்
கொடநாட்டில் ரெஸ்ட்
எடுத்தாலும் அம்மா
அயராமல் உழைக்கிறார்கள்
,இனி எவனாவது அம்மா ஆட்சி
செய்யலைன்னு சொன்னா மவனே
உங்களை உள்ள
தூக்கி போட்டு மொத்த
சொல்லிருவோம்ல...
இப்ப சொல்லுங்க மக்களே
அதற்கு ஒத்துழைக்க நீங்க
ரெடியா?
அன்புடன்
மதுரைத்தமிழன்
பொதுவாக உங்கள் பதிவுகளை படித்த பின் ஓர் புன்னகையுடன் வெளிவருவேன். ஆனால் இந்த பதிவை படித்த பின் மனதில் ஒரு சோகம். ஒரு தலைமுறையே அழிகின்றதே. இதை கேட்பார் யாரும் இல்லையா? நெஞ்சு பொறுக்குதில்லையே ..
ReplyDeleteபெண்கள் குடிக்குற பீர் ஒண்ணு புதுசா வந்திருக்காம். அதை நம்ம டாஸ்மாக்ல கொண்டு வந்தா நாட்டு நலனில் ஆண்களுக்கு இணையா பெண்களும் பாடுபடுவோம்ல. இதுக்கு ஒரு கோரிக்கை வைங்க சகோ!
ReplyDeleteவெட்கமாய் இருக்கிறது சார்....சிரிப்பு வல்ல....
ReplyDeleteதாகத்தை தீர்த்து பல குடும்பங்களின் சாபங்களையும் பெற்றுக்கொள்கிறார்! இதை உணர்வதாக தெரியவில்லை!
ReplyDeleteஇது நியாமா சார். குடும்பங்கள் சாபம் கொடுக்கவேண்டியது தங்களுக்குத்தானே. தங்கள் தவறுக்கு மற்றவரைக் குறை சொல்லலாமா?
Deleteதாக சாந்தி செய்து மக்களுக்காக உழைக்கும் முதல்வர்
ReplyDeleteஓ! இதுதான் அம்மா தண்ணீரா!
ReplyDeleteஇந்த நிலை சீக்கிரமே மாறும். மாற வேண்டும்!
ReplyDeleteதம +1
ReplyDeleteஎன்ன செய்வது.... மக்களிடமிருந்துதானே தலைவர்கள் உருவாகிறார்கள். Govt. facilitates what citizen thinks as priority. இதுல கொஞ்சம் மனசாட்சி இருப்பதால் (பெரும்பான்மையான மக்களுக்கு), மதுவிலக்கு வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் பண்ணுகிறவர்களைப் பொறுத்துக்கொள்கிறார்கள். பெண்களுக்கு தொலைக்காட்சித் தொடர்கள். ஆண்களுக்கு மது. விளங்கிடும் தமிழ்னாடு.
ReplyDelete