பைவ் ஸ்டார்
பதிவர் அறிமுகம் 3
இந்த முறை பைவ்
ஸ்டார் பதிவராக என்னால் அறிமுகப்படுத்தப்படுவர் சிறந்த பெண் எழுத்தாளர் ரஞ்சனி நாராயணன்
. இவர் மூத்த பெண் வலைப்பதிவர்களில் ஒருவர்.
. இவர் மிக அருமையான படைப்பாளி சுவையான சுவாரஸ்யமான
பல விஷயங்கள் நாம் ரசிக்கவும் ருசிக்கவும் இவரது பதிவில் இருந்து நமக்கு
படிக்க கிடைக்கிறது .. தங்கத்தில் கூட சிறிது கலப்படம் இருக்கலாம் ஆனால் இவரது எழுத்துக்களோ
மிக மிக சுத்தம் வாய்ந்தது. எல்லா வயதினரும் மிக தைரியமாக வந்து படிக்க கூடிய தளம்
இவரது தளம். இவர் இது வரை இரண்டு பிரிண்டட் புத்தகங்களையும் இரண்டு மின்னூல் புத்தகங்களையும்
வெளியிட்டு இருக்கிறார்.
இவரது கதைகள்
சம்ஸ்க்ருத மொழியில் மொழி பெயர்க்கப் பட இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஸ்ரீவைஷ்ண க்ரந்தங்களை
எளிய ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்துள்ளதாக சொல்லி இருக்கிறார்.
இவரது வலைத்தளமுகவரி https://ranjaninarayanan.wordpress.com/ பேஸ்புக் முகவரி
https://www.facebook.com/ranjani135 இவரது பேஸ்புக் தளம் சென்றால் அங்கு இருக்கும்
லைக் பட்டனை அழுத்தி செல்லவும்
மேலும் சில இவரின்
வலைத்தள முகவரிகள் http://thiruvarangaththilirunthu.blogspot.com/ https://pullikkolam.wordpress.com/
ரஞ்சனி நாராயணனைப்
பற்றி சில வரிகள் :
ரஞ்சனி நாராயணன்
காதலொருவனைக் கைபிடித்தே அவன் காரியம் யாவிலும் கைகொடுத்தே....’ என்ற பாரதியின் பாடல்
வரிகள் நிஜமாக 37 வருடங்களுக்கு முன் அவரின் தந்தையிடம் தன் காதலை தைரியமாகச் சொல்லி
மனதுக்குப் பிடித்தவரை கை பிடித்தவர் .
திருமணமாகி
22 வருடங்களுக்கு பின் இவர், தன் பெண்ணுக்கு அவள் விரும்பியவரையே (இரண்டு வீட்டுப்
பெரியவர்களின் சம்மதத்துடன்) திருமணம் முடித்து வைத்தவர்.
தன் பெண்ணின்
திருமணத்தினால் பெண்ணுக்கு அவள் விரும்பியவர் மாப்பிள்ளை கிடைத்தார். அதே நேரத்தில்
இவருக்கு உள்ளே உறங்கிக் கொண்டிருந்த எழுத்தாளி வெளியே வந்தர் என்று சொல்லி எழுத ஆரம்பித்து அருமையான படைப்புகளை படைத்து வருகிறார் .. பல பிரபல
தமிழ் வார இதழ்களில் இவரது படைப்புக்கள் பிரசுரமாகி இருக்கின்றன.
அப்படிபட்ட இவரை
பைவ் ஸ்டார் பதிவராக இன்று நான் அறியாதவர்கள் அறிய அறிமுகப்படுத்திகிறேன். முன்பே சொன்னது
போல பல நல்ல எழுத்துகளும் படைப்புகளும் பலரை சென்று அடையவே இதை நான் செய்து வருகிறேன்.
இவரிடம் நான்
கண்ட குறை ஒன்று உண்டானால் அது இவர் தளத்தை வோர்ட்ப்ரஸ் தளத்தில் நடத்துவதுதான். அதில்
நமது கருத்துகளை ப்ளாக் ஸ்பாட் தளத்தில் பதிவது போல எளிதல்ல. இந்த காரணத்தினால் அவரின்
பல பதிவுகளை படித்தும் கருத்துக்கள் இடாமல் இருந்திருக்கிறேன். இனிமேல் நேரம் கிடைக்கும்
போது கண்டிப்பாக எனது கருத்துகளை அங்கே பதிகிறேன்.
இன்றை ஸ்டார் பதிவர் ரஞ்சனி நாராயணனையும் அவர்களது எழுத்துககளை பற்றியும் ஏற்கனவே நீங்கள் அறிந்ததை இங்கு உங்கள் கருத்துகள் மூலம் முடிந்தால் கிழே பதிந்து
செல்லுங்கள். அது புதிதாக இங்கு வந்து படிப்பவர்களுக்கு அவரை பற்றிய முழு விபரங்கள்
அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
நேரமின்மையால்
ஒவ்வொரு மாதமும் அறிவிக்கப்படும் என்ற சொன்ன இந்த அவார்ட் சில நேரங்களில் தாமதம் ஆகிறது.
அதற்காக மன்னிக்கவும்.
டிஸ்கி : இவரின்
படத்தை பார்க்கும் போதெல்லாம் மறைந்த என் அம்மாவின் நினைவுகள்தான் எனக்கு அடிக்கடி
தோன்றுகிறது...காரணம் சொல்ல தெரியவில்லை ஆனால் அதுதான் உண்மை
பைவ் ஸ்டார்
பதிவராக
முதலாக அறிமுகப்படுத்தபட்டவர் வெங்கட்நாகராஜ்
இரண்டாவதாக அறிமுகப்படுத்தபட்டவர் ஜோதிஜி
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஒவ்வொரு முறையும் உங்கள் அவார்ட் யாருக்குக் கிடைக்கப்போகிறது என ஆவலாகக் காத்திருப்பேன்.இதுவரை மிக தகுதி உள்ள நபர்களுக்கே அது வழங்கப்பட்டுவருகிறது. வாழ்த்துக்கள் சகா. ரஞ்சனி மேடம்க்கு என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபலபேர் பதிவுகளை எழுதி வெளியிட்டு வரும் போது அதில் ஒரு சில பதிவுகள் மட்டுமே மிக அருமையாக இருக்கிறது பல பதிவுகள் சொத்தையாகவே போகிறது. ஆனால் இங்கு நான் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு பதிவரும் அவர்கள் வெளியிடும் அனைத்து பதிவுகளும் மிக அருமையாக இருக்கும் அப்படிபட்ட பதிவர்களைத்தான் இங்கு நான் அறிமுகப்படுத்த முயற்சிக்கிறேன்
Deleteமுதலில் தமிழா உங்களுக்கு வாழ்த்துகள்! அருமையான ஒரு மூத்த பெண் எழுத்தாளரை அறிமுகம் செய்ததற்கு.
ReplyDeleteஇவரது பதிவுகள் மிகவும் ஸ்வாரஸ்யமானவை. அவரது அனுபவப் பதிவுகள் பல அந்தக் காலத்து வாழ்க்கைமுறையையும், அதுவும் குறிப்பாக டிப்பிக்கல் வைணவகுடும்பத்து வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவும், அந்த பரிபாஷைகள் விரவியும் வருபவை. அருமையான விவரணங்களுடன் அதனுடன் நகைச்சுவையும் இழையோடச் சொல்லிச் செல்வது இவரது சிறப்பு.
தங்களின் மூலமே அவர் தன் மனதிற்குப் பிடித்தவரை அந்தக்காலத்திலேயே மணந்ததை அறிந்தோம். மகிழ்வாக இருந்தது.
இவரது கதைகள் சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்ப்பாவது குறித்து மிக்க மகிழ்வு மட்டுமல்ல இவர் வைணவ க்ரந்தங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க இருப்பதையும் அறிந்து மகிழ்வு. மேலும் பல அவர் எழுத்துலகில் சாதிக்க எங்களது வாழ்த்துகள்.
சகோதரிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!
உங்களுக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள் தமிழா! அருமையான மிகப் பிரபலமான ஒரு எழுத்தாளரை அறிமுகப்படுத்தியதற்கு.
மனம் திறந்து ரஞ்சினி அவர்களின் எழுத்தைப்பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி.
Deleteஉங்களை போன்றவர்களின் பாராட்டுக்கள் அவருக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும் என நம்புகிறேன்.
இது ... இதை தான் எதிர்பார்த்தேன்... அருமையான அறிமுகம்.. நன்றி.
ReplyDeleteதாமத்திற்கு மன்னிக்கவும், கருத்து சுந்திரத்திற்கு எதிராக எல்லோரும் தாங்கள் வாங்கிய அவார்ட்டை திருப்பி கொடுத்து வருகிறார்கள் அது போல இந்த அவார்டையும் திருப்பி கொடுத்துவிடுவார்களோ என்று சிறிது பயந்து இருந்தேன். அதனால்தான் தாமதம்
Deleteமிகச்சிறப்பானதோர் எழுத்தாளரைத் தேர்ந்தெடுத்து பைவ்-ஸ்டார் பதிவர் என சிறப்பித்து அறிமுகப்படுத்தியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDeleteதங்களுக்கும் அவருக்கும் என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
2011ம் ஆண்டு மிக அதிகமாக இவர்களுக்குப் பின்னூட்டமிட்டிருந்தது நான் தான் என WORD PRESS நிறுவனம் அறிவித்திருந்தது.
தாங்கள் சொல்வதுபோல வோர்ட் பிரஸ் மிகவும் வழுவட்டையானது மட்டுமே. அதில் அவ்வளவு சுலபமாக நம்மால் பின்னூட்டம் எழுதி அனுப்பவே முடியாது.
ஒருநாள் நான் விடிய விடிய நான் தூங்காமல் இவர்களுக்கு அனுப்பி வைத்த பின்னூட்டங்கள் அனைத்தும் எங்கோ காணாமல் போய்விட்டது. அதனால் மட்டுமே பிறகு நான் இவர்கள் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடுவதை சுத்தமாக நிறுத்திக்கொண்டு விட்டேன்.
சிறந்த எழுத்தாளரும் விமர்சகரும் மற்றவர்களை மனம் திறந்து பாராட்டி மகிழ்பவருமான நீங்கள் இங்கு வந்து ரஞ்சினி மேடம் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தது அவர்களுக்கு மேலும் உற்சாகத்தை தரும் என நம்புகிறேன். உங்கள் கருத்துகளுக்கு மிகவும் நன்றி
Deleteஅருமையான தேர்வு. நானும் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
ReplyDeleteஎழுத்தாளர் ரஞ்சனி நாராயணனை குறித்த அறிமுகத்துக்கும் அவருக்கான விருதுக்கும் உங்கள் பதிவுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.
ReplyDeleteஇந்த ஊக்குவிக்கும் பாராட்டுகளும் விருதுகளும் என்றும் தொடரட்டும். நன்று நன்றி!
நல்ல ஒரு எழுத்தாளரை, பல்துறை வித்தகரை, வலையுலக நண்பர்கள் நன்கு அறிந்த நண்பரை அறிமுகப்படுத்தி அவருக்குப் பெருமை சேர்த்ததோடு நாங்களும் மகிழ்வடையும்படி செய்துவிட்டீர்கள். தங்கள் முயற்சி தொடரட்டும். வாழ்த்துகள். நன்றி.
ReplyDeleteநல்ல ஒரு எழுத்தாளர், சிறப்பான பல பதிவுகளை, படிக்கும் அனைவருமே விரும்புகிற விதத்தில் எழுதக் கூடியவர். நேரிலும் சந்தித்து சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி. இரண்டாம் முறை சந்திக்கும் வாய்ப்பு ஏனோ தட்டிப் போய்விட்டது!
ReplyDeleteஉங்கள் மூலம் Five Star Blogger Award பெற்ற ரன்சனிம்மாவிற்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
இவரது பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். வேர்ட்பிரஸ்ஸில் எழுதுவதால் கருத்து தெரிவிப்பதில் நிறைய சிக்கல்கள்.... அதனால் அதிகம் கருத்துரை எழுதமுடிவதில்லை..
ReplyDeleteதங்களது பணிக்குப் பாராட்டுக்கள்...
நானும் இவரின் பதிவுகளை அதிகம் படித்திருக்கிறேன். அருமையாக எழுதக்கூடிய எழுத்தாளர். பின்னூட்டம் இடுவதில் பிரச்சனை இருப்பதால் ஒருசில பதிவுகளில் மட்டுமே என்னால் பின்னூட்டம் இட முடிந்துள்ளது. தகுதியான பதிவருக்கு தங்களின் விருது சென்று சேர்வதில் மகிழ்ச்சியே!
ReplyDeleteத ம 2
அம்மாவிற்கு என் அன்பு வாழ்த்துகள்...
ReplyDeleteஅம்மாவுக்கு வணக்கங்களும், தங்களுக்கு எனது நன்றிகலந்த வாழ்த்துகளும் நண்பரே. தங்கள் தேர்வு எப்போதுமே சோடை போவதில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள். திருமிகு ரஞ்சனி அம்மா அவர்களை மதுரை வலைப்பதிவர் விழாவில் பார்த்து மகிழ்ந்தேன். இப்போதும், புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்ற அவரது ஆர்வத்தையும்,உழைப்பையும்,திறமையையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரது நூல்களைப் படிக்கும் வா ய்ப்புக் கிடைக்கவில்லை எனினும், அவர்கள் நீண்டகாலம் வாழ்ந்து தொடர்ந்து எழுதி இளையவர்களுக்கு வழிகாட்டவேண்டும் என்பதே என் விருப்பம். நல்லபதிவுக்கு நன்றி
ReplyDeleteஆங்.. நீங்கள் சொன்னது போல இவரது பதிவுகளில் எதிலுமே என்னால் பின்னூட்டம் இடமுடியாத வருத்தம் எனக்கும் உண்டு. தங்களின்ஆலோசனையை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள் எனில் என்போலும் அவரது வாசகர்கள் மகிழ்வோம். நன்றி வணக்கம்.
ReplyDeleteதிருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களின் பதிவுகளை மூன்று ஆண்டுகளாக வாசித்து வருகிறேன்! சுவைபட எழுதுகிறார். சிறந்த பதிவர்! வேர்ட் பிரஸ்ஸில் எழுதுவது எளிதாக தொடர முடியாமல் பின்னூட்டம் இட முடியாமல் போகிறது! தற்சமயம் ப்ளாக்கரில் ஒர் வலைப்பூ தொடங்கியுள்ளார் போலும்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநான் விரும்பித் தொடரும் பதிவர்களில்
ReplyDeleteஇவர் முக்கியமானவர்
இவர் பதிவுகள் அனைத்துமே
பயனுள்ளவைகளாகவே இருக்கும்
விருதுபெற்ற ரஞ்சினி நாராயணன் அவர்களுக்கும்
மிகச் சரியான பதிவரைத் தேர்ந்தெடுத்து
விருது வழங்கிய உங்க்களுக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
உங்களது அறிமுகத்தை இப்போது தான் பார்த்தேன். சகோதரியின் உடல்நிலை காரணமாக சென்னைக்கும்,பெங்களூருக்கும் இடையே போய்வந்து கொண்டிருப்பதால் இந்தத் தாமதம்.
ReplyDeleteஎன்னிடம் இத்தனை நிறைகள் இருக்கிறதா என்று நானே வியக்கும் அளவிற்கு எழுதியுள்ள உங்களுக்கும் என் மீது தனி அன்பு செலுத்தும், அருமையான கருத்துரை இட்ட எனது சக பதிவர்களுக்கும் எப்படி நன்றி செலுத்துவது என்று புரியாமல் தவிக்கிறேன்.
இப்போது நான் வலைப்பதிவு எழுதுவதே குறைந்து விட்டது மேற்சொன்ன காரணத்தால். சீக்கிரம் என் சகோதரி குணமடைந்து பழையபடி நடமாட வேண்டும் என்று இங்கு கருத்திட்டிருக்கும் எல்லோரும் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள், ப்ளீஸ். ப்ளாக்ஸ்பாட்டிலும் எழுதுகிறேன், எப்போதாவது. இனி அதைத் தொடருகிறேன். உங்களுக்கு எனது நன்றியும், அன்பும்.
தகுதியான நபருக்கு ஏற்ற விருது! வாழ்த்துகள் ரஞ்சனிக்கு.பாராட்டுகள் உங்களுக்குத் தேர்ந்தெடுத்தமைக்கு! ரஞ்சனி அவர்கள் நன்றி அறிவிப்புப் பதிவின் மூலம் இங்கே வந்தேன். இம்மாதிரி விருதுகள் இணையத்தில் எழுதுபவர்களுக்கு மன ஊக்கம் கொடுக்கும். மிக உயர்ந்ததொரு சேவை!
ReplyDelete